1. தமிழ் நாட்டு மாணவர்கள் செக்குமாடாக இருத்தல் வேண்டாம்;பந்தயக்
குதிரைகளாக இருத்தல் வேண்டும்.
2. பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான் சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்.
3. சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.
4. பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
5. கற்பு என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.
6. பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.
7. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று அளவுக்கு மீறிய நாணயமும்
கட்டுப்பாடும் உறுதியும் தியாக புத்தியும் வேண்டும்.
8. விஞ்ஞானம்,அறிவு,தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்ந்தாலும் பலன் இல்லை.
9. அரசியல், ஞானம்,சமூகஞானம்,பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.
10. மனிதன் முன்னேர்த்தைத் தடுக்கவே ஏற்படுத்தியவை கடவுள்களும் மதங்களும்.
-தந்தை பெரியார்.
1. சுமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்து எவ்வளவு பிடிவாதக்காரர்களும் மனம் மாற்றிவிடுவார் ஜீவா
-தந்தை பெரியார்.
1. சுமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்து எவ்வளவு பிடிவாதக்காரர்களும் மனம் மாற்றிவிடுவார் ஜீவா
2. யாராவது ஒருவர்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக இருக்க முடியாது.
3. கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி;சூழ்ச்சிக்கார்கள் செய்த தந்திரம்.
4. இந்துமதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுப் படுத்தி என்றென்றும் அடிமைப்பைடுத்தவே ஏற்பட்டவை
5. .ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடமின்றிக் கட்டப்பட்ட ஒரு கோட்டை.
6. மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச சமமாகக் கொள்ளவேண்டும்.
7. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
8. ஜாதியைப் பேசாமல் பொதுவுடைமை பேசுவது அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.
9. எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்கவேண்டும்.
10. சர்வசக்தியுள்ள கடவுள் என்று ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் இந்த உலகத்தில் எப்படி இருக்க முடியும்?
-தந்தை பெரியார்
-தந்தை பெரியார்
1. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு ஏற்படுத்தவே!
2. குறள் ஒரு அறிவுக்களஞ்சியம் பகுத்தறிவு மணிக்களால் கோக்கப்பட்ட நூல்.
3. கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
4. கல்வி அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும்.
5. பகுத்தறிவுக்கு மாறானதும் மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்தச் செய்தியும் கல்வியில் பாடமாகக் கற்பிக்கக் கூடாது.
6. திருக்குறள் ஒன்று போதும் இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.
7. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.
8. மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனமே தவிர அதற்கெனத் தனி மதிப்பு ஒன்றும் கிடையாது.
9. ஆரிப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து. மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் புத்தறிவு பெற்றுப் புது மனிதராகுங்கள்.
10. பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள்.
-தந்தை பெரியார்.
Thanks
ReplyDeletesuper lines
ReplyDeleteஅருமையான பதிவு தம்பி ! :) வாழ்த்துக்கள் தொடர்க நும் எழுத்துப் பணி.
ReplyDelete