வலிப்பு நோய்
பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த
போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும்
நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக
இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது
கட்டாயமாகும்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நோய்களில் வலிப்பு
நோயும் ஒன்றாகும். அதனைக் குறித்த விவரங்களை இங்குக்
காண்போம்:* வலிப்பு என்றால் என்ன?வலிப்பு அல்லது 'காக்கா வலிப்பு' என அறியப்படும் நோய்
மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு
மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு நரம்புகள் வழியே வரும்
கட்டளைத் தொகுப்புகளில் (நரம்புகளில்) சிறிது நேரம் தடங்கல்
ஏற்படுவதையே வலிப்பு எனப் பொதுவழக்கில் அழைக்கிறார்கள்.
* வலிப்பு நோய்க்கான மூல காரணம் என்ன?
- மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால்,
பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகளால்,
- சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாட்டினால்,
- விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்களினால்,
- மூளையில் ஏற்படும் கட்டிகளால்,
- ஆல்கஹால், போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதிலத்தால்,
- மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.
* எத்தனை வகை வலிப்புகள் உள்ளன?மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது,
பகுதி (Partial) வலிப்பு; இரண்டாவது பொது (General) வலிப்பு.பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்.
அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும்.
கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில்
வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள்
பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள்
உள்ளன. 'பெடிட்மால்' (Petit Mal), 'கிராண்ட்மால்' (Grand Mal) என
இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு
வலிப்பாகும். சிலசமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து
போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள்
வரை நீடிக்கலாம். திடீரென விழிகள் செருகிக் கொள்ளுதல், காரணம்
ஏதுமில்லாமல் ஓர் அறையினுள் அங்குமிங்கும் அலைதல்
போன்றவை இந்நோயின் குறியீடுகளாம்.கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான
காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக்
கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர்
போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
* வலிப்பு நோய்
தாக்கியவரைப்
பார்க்கும்போது என்ன செய்ய
வேண்டும்?1. வலிப்பு கண்டவர் அருகில்
கூரான பொருட்கள்
ஏதுமில்லாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். மேசையின்
கூரான முனைகள், சுவர்
விளிம்புகள் இவற்றினருகில்
அவர் இல்லாதவாறு பார்த்துக்
கொள்ள வேண்டும்.2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம்;
ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு
செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால்
வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத்
திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.4. தலையில் அணைவாக மிருதுவான பொருட்களை வைக்க
வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத்
தடுக்கும்.5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட
வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும்
அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும்
வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல
வேண்டும்.* வலிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள் என்னென்ன
செய்யக்கூடாது?வலிப்பு நோய் இருப்பதாக அறியப்பட்டவர் சாதாரணமாகப் பிறரைப்
போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள்
ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத்
துணையின்றிச் செல்லல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர்,
போக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை
இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.
"வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பை அல்லது சாவிக் கொத்தைத்
திணித்தால் வலிப்புப் போய் விடும்" என்று ஒரு நம்பிக்கை
மக்களிடையே நிலவுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு
வந்தவரின் கைகளில் இரும்பைக் கொடுப்பதால் ஒரு பலனும்
இல்லை. அதனைக் கொண்டு அவர் தன்னைத் தாக்கிக் கொள்ள
நேரிடலாம். அதனால் சாவிகொத்து, கம்பி, கத்தி போன்ற
இரும்பாலான பொருட்களை வலிப்பு வந்தவரின் கையில் கொடுப்பது
கூடாது.வலிப்பும் மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயே. சரியான
சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் குணப்படுத்தி விடவும்
முடியும். எனவே இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டு அச்சம்
கொள்ளவும் தேவையில்லை. மாறாக, முடிந்தவரையிலும் வலிப்பு
நோயுள்ளவர்களைக் கண்காணிப்பதும் வலிப்பு ஏற்பட்டு விட்ட
ஒருவருக்கு நம்மாலான தகுந்த உதவிகளைச் செய்வதும்
மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.
ஆக்கம்: அபூஷைமா
-------------------------------------------------------------------------------------------------------------
விடை கொடு எங்கள் நாடே
கிபி 2100, ஜனவரி 5,
'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தைஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டு மென்று கொட்டிவைத்த உரங்களும் உயிர்கொல்லிகளும் விளைவிக்கவே தகுதியற்றதாய் மண்ணை மாற்றியதா ல், பல நூறடி ஆழ உழுது (தோண்டி) கிடைக்கும் மண்ணை வைத்து விவசாயம் செய்தோம், கடந்த பத்தாண்டுகளாய் அவ்வப்போது பெய்யும் அமிலமழை அந்த பயிர்களையும் அழிக்க தொடங்கியதை கண்டபின் தான் முடிவெடுத்தோம், இந்த பூமியை விட்டு வேறு கிரகம் போவதென்று.
இந்த நிலை வருமென ஏற்கனவே எதிர்பார்த்திருந்தபடியால் மாற்று கிரகம் தேடும் வேலைகள் கடந்த அரை நூற்றாண்டாய் வேகமாய் நடந்துகொண்டிருக்கின்றன, இந்த சூரியக்குடும்பத்தில் இந்த பூமியை தவிர வாழ்வதற்குஏற்ற இடம் ஏதுமில்லை. நம் முன்னும் பின்னும் இருக்கும் கோள்களோ ஒன்றுகுளிரில் உறைந்து கிடக்கின்றன, அல்லது கொதித்துக்கொண்டிருக்கின்றன, அருகிலிருக்கும் நட்சத்திர மண்டலங்களை ஆராய்ந்து பார்த்ததில், சற்றேறக்குறைய இந்த பூமியை போன்ற கோள் ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம், நிலத்தில் நான்கில் மூன்று பங்கு நீரும், காற்றில்தேவையான அளவு ஆக்சிஜனும் உள்ளதாம். விசித்திர மிருகங்கள் பல வாழ்கின்றனவாம், இங்கு ஏற்கனவே அழித்த அனுபவம் கைகொடுத்தால்அவற்றில் பெரும்பகுதியை விண்ணிலிருந்தே தாக்கி அழித்தாகிவிட்டது.
மனிதர்களை தவிர மற்ற அனைத்தையும் இங்கேயே விட்டுசெல்வதாய் திட்டம். எல்லாவற்றையும் புதிதாய் தொடங்கலாம் என உலகத்தலைமை முடிவுசெய்துள்ளதால் இந்த ஏற்பாடு. விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியால் வந்த வினைதான் இதுவென்பதால், எந்த அறிவியல் சாதனமும் எடுத்து செல்லபோவதில்லை, இத்தனை துன்பங்கள் வந்த பின்பும் எல்லோரும் ஒன்றுசேரவிடாமல் குறுக்கே நிற்கும் மதங்களுக்கும், கடவுள்களுக்கும் கண்டிப்பாய்அனுமதி இல்லை, பழங்கதைகள் எல்லாம் மறந்து விடவும், அடுத்ததலைமுறைக்கு செல்லாமல் மறைத்துவிடவும் உத்தரவு, இயற்கையையே நம்பி, இயற்கையையே வணங்கி, இயற்கையையேசரணடைந்து வாழத்தொடங்கவேண்டும், சுருக்கமாய் சொல்வதென்றால் மீண்டும் குகைக்கே திரும்புகிறோம். ஏழு ஆண்டுகளுக்கான உணவும், நீரும், காற்றும் மட்டுமேஅனுமதிக்கப்பட்டிருக்கும் விண்வெளி பயணத்தில், சிலர் கடவுள்களையும், கதைகளையும் மறைத்து எடுத்துவரப்போவதாய் கூறுகின்றனர்.
இன்னும் எத்தனை முறைதான் இடம் பெயர்வது? எந்த ஒரு இடத்திலும்மூவாயிரம் வருடங்களுக்கு மேல் இருந்த வழக்கமே இல்லை. செல்லுமிடத்தின்செல்வங்களையெல்லாம் அழித்து முடிப்பது, அடுத்த இடம் தேடிச்செல்வது, மனிதனால் மட்டுமே முடிந்த அற்புதச்செயல் இது. இதுநாள் வரை உணவும்உறைவிடமும் தந்து உயிர்கொடுத்த உலகே, நன்றி, விடைபெறுகிறோம்.'
இதன் பிந்தைய தேதியிட்ட பக்கங்களில் ஒன்றும்எழுதப்படவில்லை,
ஆண்ட்ரோமீடா காலக்ஸியில் உயிர் வாழதகுதியுள்ளதாய் அறியப்பட்ட M31 இன்துணைகிரகத்தில், ஆளரவமற்றிருந்த வீடுகளில்ஒன்றில் கிடைத்த நாட்குறிப்பை படித்து முடித்து,தலைநிமிர்ந்து பார்த்தனர், ஆராய்வதற்கு பூமியிலிருந்துபோன அந்த இரு விஞ்ஞானிகளும்
படித்துப் பாராட்டவோ, 'விஞ்ஞான சிறுகதை என்றாலே விண்வெளி, வேற்று கிரகம் என அசிமோவ்தனமாக தான் எழுதவேண்டுமா' என திட்டவோ சுஜாதா இல்லையே என்ற ஆதங்கத்துடன்
சங்கர்
'இன்று தான் கடைசி நாள், இந்த கிரகத்தை விட்டு புறப்படுகிறோம், எங்கும்வெப்பம் தகிக்கிறது, கடந்த நூற்றாண்டில் கடலுக்குள் போன ஐம்பது சதவிதநிலப்பரப்பில் வாழ்ந்தவர்களில் கடலோடு போனவர்களை தவிர்த்த பிறர், எஞ்சிய நிலத்தில் தஞ்சம் புகுந்ததால் எங்கும் இடநெருக்கடி, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்தின் பலனாய், இருந்த காடுகளை எல்லாம் அழித்தாகிவிட்டது, விளைவு கடந்த இருபதாண்டுகளாய் மழை இல்லை, கடல் நீரை நன்நீராக்கி காலத்தைஓட்டிக்கொண்டிருந்தோம், அதற்கும் வந்தது ஆபத்து, பூமியிலிருந்து எடுக்க முடிந்த எரிபொருள் எல்லாம் சுரண்டி செலவிட்டாயிற்று, சூரிய ஒளியை பயன்படுத்தி உண்டாக்கிகொண்டிருந்த மின்சாரம், ஓசோனில் விழுந்த ஓட்டையால், இனி சாத்தியமில்லை, வீரியம் வேண்டு