தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

Showing posts with label பகுத்தறிவு கொள்கைகள். Show all posts
Showing posts with label பகுத்தறிவு கொள்கைகள். Show all posts

June 22, 2015

அரசு பேருந்து பயணம்

                                 இன்று ஒரு அரசுப் பேருந்தில் ஏறினேன்.வரிசையாக மக்கள் நின்றனர்,சிலர் பேசிக் கொண்டும்,சிலர் சிரித்துக் கொண்டும்,சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும்.நான்கில் மூன்று பங்கு பேர் அலைபேசியைவே பார்த்துக் கொண்டிருந்தனர்.நான் கண்டக்டரிடம்  7 ரூபாய் டிக்கெட் வாங்க 10 ரூபாய் கொடுத்தேன்.அவர் 9 ரூபாய் டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தார்.
அவரிடம் மீதி ஒரு ரூபாயும் ஏன் 9 ரூபாய் டிக்கெட் கொடுத்தீர்கள்
என கேட்பதற்குள் எனது  ஸ்டாப் வந்துவிட்டது.

June 15, 2015

காக்கா முட்டை ஒரு வித்தியாசமான விமர்சனம்


                                                      காக்கா முட்டை என்று பெயர் வைத்து உலகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை காக்கா முட்டை என்று வறுமையில் வாடுபவர்களை உருவகப்படுத்தியிருக்கின்றனர்.படத்தில் எண்ணற்ற கருத்துக்களை இயக்குனர் சொல்லியிருக்கிறார் உணவைப் பற்றி,தேர்தல் இலவசங்கள் பற்றி,குப்பத்து மக்களின் வாழ்க்கைப் பற்றி,ஏமாற்றும் வக்கீல்கள் பற்றி,போராட்டம் எனும் பெயரில் காசு சம்பாதிப்பவர்களைப் பற்றி,போராட்டத்திற்கு மக்களை எப்படி திரட்டுகின்றனர் என்பதைப் பற்றி,போரம்போக்கு நிலம் எப்படி கார்பரேட் நிறுவனங்களுக்கு எம்.எல்.ஏ மூலமாக கைமாறுகிறது என்பதை பற்றி,ஒரு பிரச்சனை வந்து விட்டால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைசியில் அதையும் தங்கள் கடைக்கு விளம்பரமாக மாற்றிக் கொள்வது பற்றி ,நடிகர்கள் சாதாரண உணவு சாப்பிடமாட்டார்களா? என்பது பற்றி எல்லாவற்றையும் படம் பிடித்துக் காட்டினாலும்

என்னைக்கவர்ந்தது 
காக்கா முட்டை:நாங்க குப்பத்து பசங்கனு சொல்லவே இல்ல ஆனா அவன் எப்படி கண்டு பிடிச்சான்
பாட்டி                     :"நீ போட்டிருக்கும் சொக்காய்க்குத் தான் உலகத்தில் மதிப்பு"

காக்கா முட்டை பசங்க புது சொக்காய் வாங்கும் விதம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
எதிர்த்த வீட்டு பணக்காரப் பையன் எச்சி பீசாவை கொடுப்பது பணக்கார வர்கத்தின் திமிரைக் காட்டுகிறது.

அதை வாங்க போன சின்ன காக்கா முட்டையை பெரிய காக்கா முட்டை அடிப்பது ஏழைகளின் தன்மான உணர்வை வெளிப்படுத்துகிறது.

செல்போன் வாங்க ஆசைப்பட்ட காக்காமுட்டை பசங்க செல்போனை தொடர்வண்டியில் மத்த பசங்க செய்வது போல் செய்யாமல் குச்சியை கீழே போடுவது அவர்களின் நேர்மையை உணர்த்துகிறது.

எல்லாவற்றையும் விட அவர்கள் கையில் பணம் இருக்கிறது ,புது துணி அணிந்திருக்கின்றனர் ஆனால் அவர்கள் குப்பத்து பசங்கன்ற முத்திரை மாறவில்லை.இதுதான் இந்த படம் உலகத்திற்கு சொல்ல வருகின்ற முக்கியமான கருத்து.

இதை வர்க்க பேதத்திற்க்கு மட்டும் அல்லாமல் வருணாசிரம பேதத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்
ஆயிரம் படித்து கை நிறைய சம்பாதித்தாலும் நீ தாழ்ந்த சாதிக்கார பையந்தானே என சொல்பவர்கள் ஏராளம் 
காரணம் பார்ப்பனர்கள்.சட்ட மேதை அம்பேத்கர்க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு சொல்லவா வேண்டும்?.(Babasaheb Dr.Ambedkar movie(english) திரைப்படம் பார்த்தவர்களுக்கு, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குப் புரியும்).

பலர் சொல்லுகின்றனர் பொருளாதார அடிப்படையில் சமம் ஆனால் சாதி இல்லாமல் போய்விடும் என்று 
நான் கேட்கிறேன் பொருளாதார அடிப்படையில் சமமானாலும் பார்ப்பனர்கள் வந்து களை எடுப்பார்களா?
இல்லை குப்பை அள்ளுவார்களா?அப்ப ஆயிரம் தான் பொருளாதார அடிப்படையில் முன்னேறினாலும் 
இட ஒதுக்கீட்டில் மேலே சென்றாலும் இன்னும் பல நேர்முகத் தேர்வுகளில் முதுகை தடவிப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது(பூணுலுக்காக).காக்கா முட்டை பசங்க மேல் நீங்க குப்பத்து பசங்க எனும் முத்திரை பதிக்கப் பட்டது போல் பின்னர் பீசா கடைக்காரன் அவர்களை சாப்பிட சொல்வது போல்,நம் மேல் சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என பிரித்து வைத்துக் கொண்டு  இட ஒதுக்கீடு இவர்களுக்குத்தான் என்று சொல்லிக் கொண்டு நேர்முகத் தேர்வில் என்ன செய்கிறார்கள் என்பது அங்கே யார் இருக்கிறார்கள் ,மேல் பதவிகளில் யார் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும்.

காக்கா முட்டை குப்பத்து பசங்கன்ற முத்திரை ஒழித்து  பீசா சாப்பிட இவ்வளவு போராட்டம் என்றால்
சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரையை ஒழிக்க எவ்வளவு போராட வேண்டும்.
என்று ஒழியுமோ சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரை இனியும் காக்கா முட்டையாக இருப்பதும்
இருக்காததும் உங்கள் விருப்பமே! 

May 30, 2015

இன்றைய புரட்சி

 பெண்கள் அடிமைப்பட்டுகிடந்த காலத்தில் ,பெண்கள் வேலைக்குச் சென்றது அன்றைய புரட்சி என்றால் கலை,அறிவியல் மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளில் சிறந்து விளங்குவதும் ஐ.ஐ.டி மாணவர்களின் போராட்டமும் இன்றைய புரட்சி.
சுயநலமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் சமூகநீதிக்காக போராடும் மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் படிக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர்களாக 
பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டம் அதுவும் எண்ணிக்கையில் 

April 14, 2015

தாலி அகற்றும் போராட்டம்

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை ஒன்று இருக்கிறது அதை மதித்து சடங்கு சம்பிரதாயங்கள் ஏன் எதற்கு என்று தாலி அணிவதும் அணியாததும் தனிப்பட்ட நபர்களின் உரிமை .தங்களுக்கு தாலி ஒரு அடிமைச் சின்னம் என நினைப்பவர்கள் அகற்றிக் கொள்கின்றனர் இவ்வாறு  சிந்திப்பவர்கள் பகுத்தறிவாதி .

March 7, 2015

நீதிபதிகள் நியமனம்

 நீதிபதிகள் நியமனம் குறித்து வழக்கறிஞர்கள் போரட்டம் நடத்துவது குறித்து இமயம் டிவியில் ஒளிபரப்ப பட்ட  விவாத அரங்கம் பற்றி

               திமுக சார்பில் திரு.கண்ணதாசன் வழக்கறிஞரும் ,பாமக சார்பில் திரு.கஜேந்திரன் வழக்கறிஞரும் ,சமூக ஆர்வலர் சார்பில் ஆழி செந்தில் நாதனும் ,பிராமணர்கள் சார்பில் எழுத்தாளர் திரு.வாசனும் பங்கேற்றனர்.
  நெறியாளர் ஜீவ சகாப்த்தன் நிகழ்ச்சியை நடத்தினார்.

February 22, 2015

குலசாமி -2

 நீங்கள் கவனித்ததுண்டா திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் செய்யும் மூட நம்பிக்கைகளை என்றுமே ஆரியர்கள் செய்ததில்லை அவர்கள் மொட்டை அடித்ததுண்டா,தலையில் தேங்காய் உடைத்ததுண்டா,நாக்கில் அழகு குத்தியதுண்டா,சிவ ராத்திரிக்கு மது அருந்தியதுண்டா,தீபாவளி அன்று மருந்து சாப்பிடாமல் இனிப்பு உண்டதுண்டா?நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும் அவர்கள் இருக்கும் இடங்களில் டாஸ்மார்க் கடை இருக்காது.நாம் அன்றாட கூலித் தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் மெயின் ரோட்டில் மூன்று கடைகள் வைக்கப் பட்டிருக்கும்.திருவிழா பண்டிகை என்ற பெயரால் மது அருந்திவிட்டு இறப்பவர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அரசியல் நடக்கிறது அது நம் வீர விளையாட்டுத்தான் நான் இல்லை என்று கூறவில்லை இன்று தமிழ் நாட்டில்
நானும் தமிழன்தான் என்று சொல்லும் ஆரியர்களைப் பார்த்துக் கேட்கிறேன் .நீங்கள் என்றாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதுண்டா?
தமிழர்கள் நீங்கள்(ஆரியர்கள்) செய்யும் வேலைகள்(சடங்கு சம்பிரதாயங்கள்) இல்லாமல் வாழ்ந்து விடலாம்  உதாரணமாக  நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் ஒரு நாள் நீங்கள் வரணாசரம அடிப்படையில் பிரித்த தமிழர்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்யாவிட்டால் உங்கள் பிழைப்பு நடக்காது.யாரவது ஒரு ஆரியர்  களை எடுத்ததுண்டா? துணி துவைத்ததுண்டா?செருப்பு தைத்ததுண்டா? 
இதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள் நம்மை விட அவர்களுக்கு நன்றாக தெரியும் கடவுள்,சாதி,மதம்,மூட நம்பிக்கைகள்,சோதிடம்,சனிப் பெயர்ச்சி போன்றவைகள்
இல்லை அவை நம்மால்(ஆரியர்களால்) உருவாக்கப் பட்டவை என்று.மற்றொன்று ஆரியர்களால் ஒரு காரியம் முடியவில்லை எனில் அதை தன்னுடைமையாக்கிக் கொள்ளப்பார்ப்பார்கள்.திருக்குறளை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் தெரிந்ததும் 
திருவள்ளுவர்க்கு தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சிலவற்றை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இயலுமா?

குலசாமி-1

                                                ஒருவன் என்னிடம் வந்து உன் குலசாமி பெயர் என்ன தெரியுமா? என்று என்னிடம் கேட்டான்.நான் தெரியாது என்று கூறினேன்.அதற்கு அவன் தமிழரின் பண்பாடு அழிந்து கொண்டே வருகிறது என்றான்.நான் கூறினேன் தமிழரின் பண்பாடு என்றால் என்ன தெரியுமா?என்றேன் நீ கூறு என்றான்.மானமும் அறிவும் என்றேன்.மேலும் வீரத்தையும் ,காதலையும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தமிழனுக்கு என்றுமே நேருக்கு நேராகப் போரிட்டுத்தான் பழக்கம்.அப்போது மற்றொரு நண்பன் என்னிடம் வந்து உனக்கு மகாபாரதம் கதைப் பற்றி தெரியுமா?என்றான் சொல் என்றேன்.ஒருவனுக்கு வெற்றி என்பது குறுக்கு வழியில் தான் கிடைக்கிறது வீரம் என்பது அவன் நேருக்கு நேர் போரிட்டு வெல்வது என்றான்.
                                             நான் அவனிடம் கூறினேன் பாரி வள்ளல் பற்றி நீ அறிவாயா! என்றேன்.அவனிடம் சென்று யாசித்துக் கேட்டால் ஒரு ஊரையும் உனக்கு தந்து விடுவான் ஆனால் நீ அவனிடம் நேருக்கு நேர் சென்று போர் செய்தல் அரிது என்று புலவர் கபிலர் கூறுவது உண்டு.மானமும் அறிவும் தமிழர்களுக்கு உரியது என்று கூறினேன் அல்லவா அறிவுகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நாம் எப்படி முன்னேறுவது என்று நம் பலத்தை அதிகரித்து கொண்டே செல்வது.மற்றொன்று அடுத்தவர்களை முன்னேறவிடாமல் ஒரு இனத்தை முன்னேற விடாமல் செய்வது  என்று இரண்டு வகை உண்டு.அன்று தமிழன் தனக்கென இருந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்தான் .பின்பு மன்னர் ஆட்சி வந்தது அப்போதும் தமிழ் மன்னர்கள் நேருக்கு நேர் செல்வது ,புறம் காட்டினால் வடக்கிலிருந்து உயிர் துறப்பது,போர் செய்யும் போது அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ,பசு,பெண்டிர்,அந்தணர் என்று நால்வகையினரை அகற்றி விட்டு போர் செய்தான்.தமிழர்களுக்கு நான் கூறிய கெட்ட அறிவு கிடையாது.

January 5, 2015

சடங்குகளில் சண்டை நிகழ்கிறதா? சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகிறதா?

                           சிறிய குழந்தைகள் அதன் வாழ்க்கையில் எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படும் மாற்றம் போல மனித குலத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.ஆனால் அந்த உயிரினங்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரம் இந்த சடங்கு வீடுகளில் கிடைப்பதில்லை .ஒரு பட்டாம்பூச்சி வளர்ந்து பெரிய பட்டாம்பூச்சியாக மாறி சிறகடித்து பறக்கிறது.ஆனால் மனிதன் மட்டும் தான் "நீ பெரிய மனுஷி ஆகி விட்டாய் "என்று கூறியே அந்த பெண்ணை முடக்கி விடுகிறான். இதை ஒரு விழாவாக மாற்றி உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல் இருக்கிறதே சொல்ல இயலாதது .
                                            உதாரணத்திற்கு ஒரு சடங்கு வீடு அங்கு ஒயிலாட்டம்,காது கிழிய பட்டாசு,போட்டாக்காரனுக்கு 8000 ரூபாய் இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஒரு புறம்
எந்த பக்கத்திற்குரிய மாமன் பெண்ணிற்கு மாலை இடுவது எனத் தகராறு .இவ்வளவு செலவு செய்து  மிஞ்சியது என்னவோ கண்ணீர்தான்.
                                                மற்றொரு சடங்கு வீட்டில் பட்டு சேலை ,பாத்திரம் பண்டம் என எடுத்து வர எந்த அத்தைக்காரி பெண்ணிற்கு தண்ணீர் ஊற்றுவது என்ற சண்டையில் தொடங்கி  அவர்கள் தண்ணீர் ஊற்றி விட்டு போக இவர்கள் வீட்டில் மன உளைச்சலால் தலைவன் மனதில் விபரீத முடிவு
தோன்றுகிறது .
                                               ஆனால் இரண்டு சடங்கு வீடுகளிலும் பணம் சம்பாதிப்பவர்கள் இவர்களை ஆதயமாக வைத்து பணம் தேடிக் கொண்டனர்.இவர்களோ ஒரு மூலையில் கடன் தொல்லையிலும்
மற்றொரு மூலையில் சண்டைச் சச்சரவுகளால் மனம் நொடிந்து போகின்றனர்.
                                              இவர்களை ஒரு சம்பிரதாய முறையைச் சொல்லி தீட்டு அகற்ற வேண்டும் எனக் கூறி   இருந்த இடத்தில் 6000 ரூபாய் சம்பாதித்து விட்டு செல்கின்றார்கள் சிலர்.அதற்கு ஆடம்பரம் காட்ட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி ,யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற சண்டையில் முடிகிறது.
                                              அதை நம்பி நமது உறவுகளும் பிளவு படுகின்றன .
சடங்குகளில் சண்டை நிகழ்வதில்லை ,பல இடங்களில் சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

November 2, 2013

தீபாவளி

http://eluthu.com/kavithai/153970.html

May 5, 2011

மதம்

மதம்

வித்யாசாகர்
மனிதன் -
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!
கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!
மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!
இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!
காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!
வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!
மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!
நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!
மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!

February 12, 2011

இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!



இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!
ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவை. இவைகளுக்கிடையே சமரசம் கிடையாது; இருக்க முடியாது. ஆத்திகம் வெறிபிடித்து கூத்தாடத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆத்திகத்தின் அடித்தளத்தை விஞ்ஞான அறிவு கொண்டு, விஞ்ஞான ஆய்வு முறை கொண்டு தகர்த்தெறிய வேண்டும். இது ஒவ்வொரு முற்போக்காளனின் கடமை என்பதை மறப்பதற்கில்லை.

இதற்கு கீழே உள்ள உரையாடலை ஓரளவு உதவலாம். இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தின் ஆதாரங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.

நாத்திகர்: உயிரினங்களே இல்லாத ஒரு காலம் இருந்தது என்பது தெரியுமா?

ஆத்திகர் : தெரியும். பூமி என்ற கோளம் உயிரினங்கள் தோன்றி வளர்வதற்கு லாயக்கான நிலை அடையவே கோடி வருடங்கள் பிடித்தன என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றனர்.

நா:ஆக, உயிரினங்களே இல்லாத காலத்தில் பூமி இருந்ததல்லவா?

ஆ: இருந்தது.

நா: அக்காலத்தில் - உயிரனங்களே இல்லாத காலத்தில் - பூமி இருந்தது. ஆனால் எண்ணம், சிந்தனை இருந்திருக்க முடியுமா?

ஆ: இருந்திருக்காது.

நா: ஆகவே பிரபஞ்சமும் , அதன் பகுதியாக பல கோளங்களும் வெட்ட வெளியில் சுழன்று கொண்டு இருந்தன. அதாவது பொருள் அல்லது வஸ்து இருந்தது. சிந்தனை இருக்கவில்லை.... என்ன முழிக்கிறாயே... சரிதானா?

ஆ: இது சரியாகத்தான் படுகிறது.

நா: ஆகவே , பொருள்தான் முதலில் இருந்தது. அடிப்படையானது, பின்னால் ஒரு கட்டத்தில் பொருளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களினால் உயிர் என்ற குணத்தைப் பொருள் அடைந்தது. அந்த உயிர்ப்பொருள் எத்தனையோவித மாற்றங்களடைந்தது. அந்த மனிதனின் சிந்தனை,எண்ணம் என்பது பிந்தியது என்பதில் சந்தேகம் கொள்ள இடமுண்டோ?

ஆ: இல்லை.

நா: யோசித்துப் பார். பூதத் சாத்திரத்தை, வான சாத்திரத்தை,பிராணி சாத்திரத்தை, அதன் ஒரு பகுதியான பரிணாம சாத்திரத்தை ...ஏன் இன்று வளர்ந்துள்ள எல்லா சாத்திரங்களையும் மறுத்து ஒதுக்கித் தள்ளினால்தான் இந்தக் கூற்றைத் தள்ள முடியும்.

ஆ: அது வாஸ்தவம்தான். பொருள் முந்தியது, சிந்தனை பிந்தியது என்பது மறுக்க முடியாத விஞ்ஞான உண்மைதான்.

நா: சரி வேறு ஒரு கோணத்திலிருந்து இவ்விஷயத்தை ஆராய்வோம். பொருள் அல்லது வஸ்து அழிவடைகிறதா?

ஆ: இது என்ன? ஒன்றும் புரியவில்லையே?

நா: கல் என்ற பொருள் எடுத்துக் கொள்வோம். அதைச் சுக்கு நூறாக உடைத்து மாவு போன்ற பொடியாக்கலாம், கல் என்ற உருவம் போய் விடுகிறது. இல்லையா?

ஆ: ஆம்; பொடியாகப் போய்விடுகிறது.

நா: 'கல்' அழிந்து விட்டது. என்று சொல்லலாமா?

ஆ: சொல்லலாம்.

நா: சொல்லக்கூடாது ! கல் என்ற உருவம் தான் அழிந்தது.'பொடி' என்ற உருவம் வந்துள்ளது. கல்லுக்குள் இருந்த அணுக்கள் அழியவில்லை. "பொருளின் உருவம்" தான் மாறிற்று.

ஆ: அது மெய்தான்.

நா: அதே போல 'ஐஸ்' என்ற பொருளைப் பார்ப்போம். கையில் எடுத்துப் பார்ப்பதற்கு முன் கசிந்து உருகி நீராக ஓடி விடுகிறது.

ஆ: 'ஐஸ்' என்ற உருவத்தை விட்டு 'நீர்' என்ற உருவத்தை அடைகிறது.

நா: அந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பின் மீது வைத்தால் என்ன ஆகிறது?

ஆ: சூடு ஏறிய பின் ஆவியாக மாறிக் காற்றில் கலந்து விடுகிறது.

நா: நீர் என்ற உருவம் மாறி 'ஆவி' என்ற உருவத்தை அடைகிறது. அந்த ஆவியும் குவியலாக பாத்திரத்திலிருந்து வெளிக்கிளம்பும் பொழுது கன்ணுக்குத் தெரிகிறது. ஆனால் காற்றிலே கலந்தபின் கண்ணுக்கும் தெரிவதில்லை.

ஆ: ஆம்.

நா: ஆனால் நீரில் இருந்த அணுக்கள் அழிந்துவிட்டனவா?

ஆ: இல்லை.ஐஸ் நீராக மாறிய பொழுது ஐஸில் இருந்த அணுக்கள் அழியவில்லை. அதேபோல நீர் ஆவியாக மாறிய பொழுது நீரில் இருந்த அணுக்களும் அழியவில்லை. திடமாயிருந்த பொருள், திரவமாக மாறி , பின் ஆவியாக மாறிற்று. ஆனால் அழியவில்லை.

நா: அதே போல பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளும் வஸ்துவும் - கல்லோ , மண்ணோ, கட்டையோ, மரமோ,உயிருள்ளதோ, உயிரற்றதோ - எந்த நிலையிலும் அழிவதில்லை. நிலைமைக்குத் தகுந்த உருவமாற்றம் ஏற்படுகிறது.; அழிவதில்லை - இது சரிதானே?

ஆ: சரிதான்.

நா: இதைத்தான் பொருளின் அழியாத்தன்மை (Law of Conservation of Matter) என்று கூறுகின்றனர். பொருள் அழிவதேயில்லை என்றால், என்றென்றும் இருந்தது என்று அர்த்தம் அது சரி தானே?

ஆ: ஆம், அப்படித்தான் அர்த்தம்.

நா: அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இல்லாதிருந்த காலமே இல்லை என்பது இதன் தர்க்கரீதியான முடிவு.
ஆ: ஆம் என்றென்றும் இருந்து வந்துள்ளன என்பதே முடிவு.

நா: அப்படியானால் சிருஷ்டி, அல்லது படைப்பு என்பதற்கு இடமேது?

ஆ: ம்.....ம்... இல்லைதான்

நா: ஆக படைப்பும் இல்லை; படைத்தவனும் இல்லை - கடவுள் இல்லை - என்பது மறுக்க முடியாத விஞ்ஞான சாத்தியம்.

ஆ: அப்படித்தான்.... இருந்தாலும் என்னமோ மனதில் சங்கடம் ஏற்படுகின்றதே?

நா: இவ்வளவுக்குப் பின்னால் சங்கடமாயிருக்கிறது என்கிறாயே? - ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் (கடவுள் இல்லை என்று) எப்படியிருந்திருக்கும்; கோபப்பட்டிருப்பாய்;ஆத்திரப்பட்டிருப்பாய்; அறிவு ரீதியான ஆய்வுக்கு முனையமாட்டாய். ஒரு வேளை வெறிபிடித்த ஆத்திகனாகக்கூட மாறியிருப்பாய் ! இப்போது இம் முடிவு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டு விட்டாய்.... இன்னும் சில நாட்கள் ஆகிவிட்டால் மனதுக்கும் சங்கடமிருக்காது. போய் வா!

(ஏ. பாலசுப்ரமண்யம் அவர்கள் எழுதிய "கடவுள் உண்டா இல்லையா?" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

January 24, 2011

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !



இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

January 14, 2011

கடவுளை நம்பும் முட்டாள்களே


கடவுளை நம்பும் முட்டாள்களே!
கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா


நீ இந்து என்றால் சொல் சம்மதமா
சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !
கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !
தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !
ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !
தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

Denial of God



There is no god
There is no god at all
He who invented god is a fool
He who propagates god is a knave
He who worships god is a primitive

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out