காக்கா முட்டை என்று பெயர் வைத்து உலகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை காக்கா முட்டை என்று வறுமையில் வாடுபவர்களை உருவகப்படுத்தியிருக்கின்றனர்.படத்தில் எண்ணற்ற கருத்துக்களை இயக்குனர் சொல்லியிருக்கிறார் உணவைப் பற்றி,தேர்தல் இலவசங்கள் பற்றி,குப்பத்து மக்களின் வாழ்க்கைப் பற்றி,ஏமாற்றும் வக்கீல்கள் பற்றி,போராட்டம் எனும் பெயரில் காசு சம்பாதிப்பவர்களைப் பற்றி,போராட்டத்திற்கு மக்களை எப்படி திரட்டுகின்றனர் என்பதைப் பற்றி,போரம்போக்கு நிலம் எப்படி கார்பரேட் நிறுவனங்களுக்கு எம்.எல்.ஏ மூலமாக கைமாறுகிறது என்பதை பற்றி,ஒரு பிரச்சனை வந்து விட்டால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைசியில் அதையும் தங்கள் கடைக்கு விளம்பரமாக மாற்றிக் கொள்வது பற்றி ,நடிகர்கள் சாதாரண உணவு சாப்பிடமாட்டார்களா? என்பது பற்றி எல்லாவற்றையும் படம் பிடித்துக் காட்டினாலும்
என்னைக்கவர்ந்தது
காக்கா முட்டை:நாங்க குப்பத்து பசங்கனு சொல்லவே இல்ல ஆனா அவன் எப்படி கண்டு பிடிச்சான்
பாட்டி :"நீ போட்டிருக்கும் சொக்காய்க்குத் தான் உலகத்தில் மதிப்பு"
காக்கா முட்டை பசங்க புது சொக்காய் வாங்கும் விதம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
எதிர்த்த வீட்டு பணக்காரப் பையன் எச்சி பீசாவை கொடுப்பது பணக்கார வர்கத்தின் திமிரைக் காட்டுகிறது.
அதை வாங்க போன சின்ன காக்கா முட்டையை பெரிய காக்கா முட்டை அடிப்பது ஏழைகளின் தன்மான உணர்வை வெளிப்படுத்துகிறது.
செல்போன் வாங்க ஆசைப்பட்ட காக்காமுட்டை பசங்க செல்போனை தொடர்வண்டியில் மத்த பசங்க செய்வது போல் செய்யாமல் குச்சியை கீழே போடுவது அவர்களின் நேர்மையை உணர்த்துகிறது.
எல்லாவற்றையும் விட அவர்கள் கையில் பணம் இருக்கிறது ,புது துணி அணிந்திருக்கின்றனர் ஆனால் அவர்கள் குப்பத்து பசங்கன்ற முத்திரை மாறவில்லை.இதுதான் இந்த படம் உலகத்திற்கு சொல்ல வருகின்ற முக்கியமான கருத்து.
இதை வர்க்க பேதத்திற்க்கு மட்டும் அல்லாமல் வருணாசிரம பேதத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்
ஆயிரம் படித்து கை நிறைய சம்பாதித்தாலும் நீ தாழ்ந்த சாதிக்கார பையந்தானே என சொல்பவர்கள் ஏராளம்
காரணம் பார்ப்பனர்கள்.சட்ட மேதை அம்பேத்கர்க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு சொல்லவா வேண்டும்?.(Babasaheb Dr.Ambedkar movie(english) திரைப்படம் பார்த்தவர்களுக்கு, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குப் புரியும்).
பலர் சொல்லுகின்றனர் பொருளாதார அடிப்படையில் சமம் ஆனால் சாதி இல்லாமல் போய்விடும் என்று
நான் கேட்கிறேன் பொருளாதார அடிப்படையில் சமமானாலும் பார்ப்பனர்கள் வந்து களை எடுப்பார்களா?
இல்லை குப்பை அள்ளுவார்களா?அப்ப ஆயிரம் தான் பொருளாதார அடிப்படையில் முன்னேறினாலும்
இட ஒதுக்கீட்டில் மேலே சென்றாலும் இன்னும் பல நேர்முகத் தேர்வுகளில் முதுகை தடவிப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது(பூணுலுக்காக).காக்கா முட்டை பசங்க மேல் நீங்க குப்பத்து பசங்க எனும் முத்திரை பதிக்கப் பட்டது போல் பின்னர் பீசா கடைக்காரன் அவர்களை சாப்பிட சொல்வது போல்,நம் மேல் சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என பிரித்து வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு இவர்களுக்குத்தான் என்று சொல்லிக் கொண்டு நேர்முகத் தேர்வில் என்ன செய்கிறார்கள் என்பது அங்கே யார் இருக்கிறார்கள் ,மேல் பதவிகளில் யார் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும்.
காக்கா முட்டை குப்பத்து பசங்கன்ற முத்திரை ஒழித்து பீசா சாப்பிட இவ்வளவு போராட்டம் என்றால்
சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரையை ஒழிக்க எவ்வளவு போராட வேண்டும்.
என்று ஒழியுமோ சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரை இனியும் காக்கா முட்டையாக இருப்பதும்
இருக்காததும் உங்கள் விருப்பமே!
No comments:
Post a Comment
வணக்கம்