தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

March 14, 2015

புதிய தலைமுறை தாக்கப்பட்ட சம்பவம் அதன் பின்னணி

இளைஞர்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றிருக்கக்கூடிய ஊடகமும்,பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் புதிய தலைமுறையின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டார் சமூக விரோதிகளால், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார்கள் எனக் கூறப்படுகின்றது மேலும் தாங்கள் காவல்துறையிடம் சென்று புகார் தெரிவித்ததுக்கு நீங்கள் சென்சிட்டிவ் ஆன செய்தியை போட்டால் அடிக்கத் தான் செய்வார்கள் என்று கூறியதாக செய்தியாளர் தியாகச் செம்மல் கூறினார்.



                              உரக்கச் சொல் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தாலி அணிவது பற்றி ஒரு கருத்து மக்களிடம் கேட்கப்பட்டு அது தொடர்பான விளம்பரம் வெளியானதற்கு முதல் நாள் முதலே புதிய தலைமுறைக்கு தொலைபேசியில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறியுள்ளனர்.அதற்கு அவர்கள் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.ஆனால் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புக்காக போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் புதிய தலைமுறை அலுவலகத்தின் பின்புறம் 2 காவல்துறையினர் மட்டுமே நின்றுள்ளனர். எப்போதும் புதிய தலைமுறைக்கு செய்தியாளர்,ஒளிப்பதிவாளர்கள் பின்புறமாக உள்ள  டீக்கடையில் டீ குடித்து விட்டு உள்ளே செல்வது வழக்கம் .வழக்கம் போல செந்திகுமார் கேமாராவுடன் டீ குடிக்கச் சென்றிருக்கின்றார்.அவர் கையில் கேமரா வைத்திருப்பதைப் பார்த்ததும் 30 சமூக விரோதிகள் சரமாரியாக சேர்ந்து செந்தில்குமாரைத் தாக்கி அவரது 3,00,000 மதிப்பிலான கேமாராவை உடைத்துள்ளனர்.
இதனை பார்த்த தியாகச் செம்மல்(செய்தியாளர்) என்ன என்று கேட்டு அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கின்றார்.

                             இந்த சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர் சிறைக்குச் சென்று அவர்களைப் பார்த்து வருகின்றார்.

                                 மேலும் (12.03.2015) புதிய தலைமுறை பிரதான நுழைவு வாயிலில் கோழைத்தனமாக குண்டுகளை வீசி சென்றிருக்கின்றனர். அன்றைக்கு செந்தில்குமாரை அடித்தோரை சிறையில் சென்று பார்த்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பாஜகத் தலைவர் இன்றைக்கு எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது  என்கிறார்.மேலும் இந்த சம்பவத்தை சென்னையில் நடத்திவிட்டு தான் மதுரையில் சரண் அடைவதாக கூறுகிறார் ஒருவர். கருத்துச் சுதந்திரம் எங்கே சென்றது இப்படி மதத்தின் பெயரால் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது என்று சப்பைக்கட்டு கட்டும் உரக்கச் சொல் நிகழ்ச்சிக்கு வருத்தம் 
தெரிவித்த சிலரின் செயல் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்றது .இதை சிலர் நாட்டில உள்ள மற்ற பிரச்சனைகளை கவனிக்காமல் பிரச்சனையை திசை திருப்புவதாக இருக்கக்கூடும் என்கின்றனர்,தமிழ் நாட்டைச் சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் அவர்கள் புதிய தலைமுறை மத துவேசம் என புதிதாக அவராக ஒரு பெயரை இட்டுக் கொண்டு இவர்கள் செய்த செயலை நியாயப் படுத்துகிறார்.
                                       காரணம் மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்து  விடுவார்கள் சிறையில் போடுவார்கள் நமக்குள்ள (மதத்தின் பெயரால் உள்ள அரசியல்) செல்வாக்கை பயன்படுத்தி வெளியில் வந்து விடலாம் .மீறி குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டாலும் நமக்கு சிறையில் சகல வசதிகளும் கிடைக்கும் என்பது மற்றொரு புறம் இருக்க நமது நாட்டில் 100 ரூபாய்க்காகவும் சாரயத்திற்காகவும் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பதும் அறிய வேண்டிய ஒன்று.எனவே இந்த செயலை யார் செய்தார்கள் என்பதை விட அவர்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும்.
                                 இனிவரும் காலங்களில் அன்றாட தனிமனித சுதந்திரங்களைக் கூட அவர்களைக் கேட்டு செய்ய வேண்டும் என்ற பாசிச போக்கு வளர்ந்து விடும் .இதற்கு என்னைப் பொறுத்தவரை அனைத்து வலைப்பதிவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க  வேண்டும்.மேலும் தமிழன் என்றுமே நேருக்கு நேர் மோதிதான் பழக்கம்(என் மகன் புறமுதுகுண்டால் அவன் பாலுண்ட மார்பகத்தை அறுத்து எறிவேன் என்றால் வீர தமிழச்சி அவன் புறமுதுகிடவில்லை என்று தெரிந்ததும் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்வு கொண்டாள் ).கருத்து என்றால் கருத்து......போர் என்றால் போர்.இவர்கள் இரவில் வந்து குண்டு வீசி விட்டு சென்ற ஒன்றே போதும் இவர்கள்  தமிழ்நாட்டில் வாழ அருகதை அற்றவர்கள்.   
   
                                

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out