பகுத்தறிவு கொள்கைகளும்,சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளும்,மேலும் மென்பொருட்களை பதிவிறக்கத் தேவையான சுட்டிகளும்,கவிதைகளும்,பொன்மொழிகளும் தமிழில்
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்
எனது வலைத்தளங்கள்
உறுப்பினர்கள்
May 21, 2011
நில், உட்கார், செல் - அதிகாரமற்ற பிரதமர் பதவி!
சூர்யா - 22 February, 2011
பிரதமர் என்றால் யார்? அவருக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பன போன்ற கேள்விகளை கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டால் தெளிவாக சொல்லிவிடுவார்கள். அந்த வாய்பேச முடியாத ஊமைத் தாத்தாவை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சிறப்பான மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பேச்சு வர மாங்காடு அம்மன் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை தோறும் என் அம்மாவுடன் சென்று வழிபாடு செய்கிறேன் என்று மனம் நோகக் கூறுவார்கள்.
சூர்யா - 22 February, 2011
பிரதமர் என்றால் யார்? அவருக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பன போன்ற கேள்விகளை கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டால் தெளிவாக சொல்லிவிடுவார்கள். அந்த வாய்பேச முடியாத ஊமைத் தாத்தாவை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சிறப்பான மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பேச்சு வர மாங்காடு அம்மன் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை தோறும் என் அம்மாவுடன் சென்று வழிபாடு செய்கிறேன் என்று மனம் நோகக் கூறுவார்கள்.
storm in saturn
ScienceDaily (May 19, 2011) — The atmosphere of the planet Saturn normally appears placid and calm. But about once per Saturn year (about thirty Earth years), as spring comes to the northern hemisphere of the giant planet, something stirs deep below the clouds that leads to a dramatic planet-wide disturbance.
வாழ்வை தொலைத்தவர்கள்
வாழ்வை தொலைத்தவர்கள்
சுஜா தாமு
திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தாலும்போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று......
காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர்.....
அன்பு, பாசம், நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர்....
பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு.
May 12, 2011
மனிதன் மனிதனாக வாழ 18 விஷயங்கள்
வணங்க வேண்டிய தெய்வம் -தாய் ,தந்தை
மிக மிக நல்ல நாள் -365 நாள்களும்
மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
மிகவும் வேண்டியது -பணிவு
மிகவும் வேண்டாதது -வெறுப்பு
மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
மிகக் கொடிய நோய் -பேராசை
மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் -பொறாமை
நம்பக்கூடாதது -வதந்தி
ஆபத்தை விளைவிப்பது -அதிக பேச்சு
செய்யக்கூடாதது -நம்பிக்கைத் துரோகம்
செய்யக்கூடியது -உதவி
விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி -உழைப்பு
நழுவ விடாதது -வாய்ப்பு
பிரியக்கூடியது -நட்பு
மறக்கக்கூடாதது-நன்றி
வணங்க வேண்டிய தெய்வம் -தாய் ,தந்தை
மிக மிக நல்ல நாள் -365 நாள்களும்
மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
மிகவும் வேண்டியது -பணிவு
மிகவும் வேண்டாதது -வெறுப்பு
மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
மிகக் கொடிய நோய் -பேராசை
மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் -பொறாமை
நம்பக்கூடாதது -வதந்தி
ஆபத்தை விளைவிப்பது -அதிக பேச்சு
செய்யக்கூடாதது -நம்பிக்கைத் துரோகம்
செய்யக்கூடியது -உதவி
விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி -உழைப்பு
நழுவ விடாதது -வாய்ப்பு
பிரியக்கூடியது -நட்பு
மறக்கக்கூடாதது-நன்றி
May 6, 2011
பெண் விடுதலை
பெண் விடுதலை
சுஜா தாமு
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட........
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட........
May 5, 2011
மதம்
மதம்
வித்யாசாகர்
மனிதன் -
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!
கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!
மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!
இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!
காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!
வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!
மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!
நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!
மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!
கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!
மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!
இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!
காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!
வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!
மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!
நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!
மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!
Subscribe to:
Posts (Atom)
தொடர்புடைய பதிவுகள்
loading..