ரோட்டில் பகலில்
எரியும் தெருவிளக்கு....
இரவில் எரியும்
தெருவிளக்கிடம்
கேட்டது...
நீயும் வெளிச்சம் தருகிறாய்
நானும் வெளிச்சம் தருகிறேன்
நீ இல்லாவிட்டால் அனைவரும்
பதைபதைக்கின்றனர்
நான் பகல் முழுவதும் எரிகிறேன்
என்னை யாரும் பார்ப்பதில்லை.
இரவில் எரியும் விளக்கு சொன்னது,
என்னை தேவைப்படும் நேரத்தில்
பொறுப்பான அதிகாரி
இயக்குகிறார்.....
.
பகலில் எரியும் விளக்கு சொன்னது,
என்னை தேவைப்படாத நேரத்தில்
அணைக்க அதே பொறுப்பான
அதிகாரிதான்
மறந்துவிட்டார்.
இன்று பல பொறுப்பான அதிகாரிகளால்
ரோட்டில் நிறைய
பகல் தெருவிளக்குகள்
பெருகிவிட்டது...
வேலையில்லாத்
திறமை இருக்கும்
பல இளைஞர்கள் போலவோ......
தெருவிளக்கு பகலில் எரிவதை
பார்த்தபோது மனதில் தோன்றிய கவிதை
எழுதியவர்: சொ.நே.அன்புமணி நாள்:8/5/2017
எரியும் தெருவிளக்கு....
இரவில் எரியும்
தெருவிளக்கிடம்
கேட்டது...
நீயும் வெளிச்சம் தருகிறாய்
நானும் வெளிச்சம் தருகிறேன்
நீ இல்லாவிட்டால் அனைவரும்
பதைபதைக்கின்றனர்
நான் பகல் முழுவதும் எரிகிறேன்
என்னை யாரும் பார்ப்பதில்லை.
இரவில் எரியும் விளக்கு சொன்னது,
என்னை தேவைப்படும் நேரத்தில்
பொறுப்பான அதிகாரி
இயக்குகிறார்.....
.
பகலில் எரியும் விளக்கு சொன்னது,
என்னை தேவைப்படாத நேரத்தில்
அணைக்க அதே பொறுப்பான
அதிகாரிதான்
மறந்துவிட்டார்.
இன்று பல பொறுப்பான அதிகாரிகளால்
ரோட்டில் நிறைய
பகல் தெருவிளக்குகள்
பெருகிவிட்டது...
வேலையில்லாத்
திறமை இருக்கும்
பல இளைஞர்கள் போலவோ......
தெருவிளக்கு பகலில் எரிவதை
பார்த்தபோது மனதில் தோன்றிய கவிதை
எழுதியவர்: சொ.நே.அன்புமணி நாள்:8/5/2017