நமது பால்வீதியில் 54 கோள்களில் உயிர்கள்
இருக்கலாம்
27FEB
தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது.
மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ பெரிசு.
இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெ ரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.
‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும்.
கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.
நன்றி: தமிழ் சி.என்.என்
கருப்புப் பின்னணியில் நீல எழுத்து...!
ReplyDeleteவாசிக்க முடியவில்லை.வெள்ளை எழுத்தாக மாற்றேன்.