பிள்ளைகளில் பாகுபாடு(உண்மைச் சம்பவம்)
21ம் நூற்றாண்டில் ஆணும பெண்ணும்
சமம் என்னும் வேளையில், இன்னும்
ஒரு சிலர் ஆணுக்கு ஒரு நோய் என்னும்
போர்வையில் பெண்ணை ஏசுகிறார்கள்.
உதாரணமாக,
அப்பா கடைக்குச் செல்கின்றார், பெண்ணோ
அப்பாவுடன் செல்லும் ஆசையில்
நானும் வருகிறேன் என்கிறாள்.ஆணோ
அடம்பிடித்து கீழே விழுகிறான். ஆனால்,
பழி பெண்மேல் அந்த பெண்ணோ அழுகிறாள்,
ஆணும் அழுகிறான்.ஆனால் ஆணுக்கு மரியாதை
பெண்ணுக்கோ ஓர வஞ்சனை.அய்யகோ!இன்னும்
எத்தனை நூற்றாண்டிற்கு தொடரப்போகின்றதோ?
இந்த அவலம்.
விழித்திரு பெண்ணே! விழித்திரு!
உனக்கு குழந்தைகள் இருக்கும்
காலத்திலாவது இரண்டு குழந்தைகளையும்
சமமாக நடத்தி வளமாக வாழ்வாயாக!
-சொ.நே.அனபுமணி
No comments:
Post a Comment
வணக்கம்