தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

October 26, 2011

"கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை"

"கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை"
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2011 - 11:33 ஜிஎம்டி




கைத்தொலைபேசி பயன்பாடு பெருமளவில் அதிகரித்துவருகிறது.

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதன் மூலம் மூளை புற்றுநோய் ( பிரெய்ன் கேன்சர்) வர வாய்ப்பில்லை என்று இது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.




டென்மார்க்கில் வசிக்கும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேரிடம் சுமார் இருபது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.
தொடர்புடைய விடயங்கள்

தொழில்நுட்பம்

பத்து ஆண்டுகளுக்கும் அதிகாக கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கும், அவ்வகையில் கைத்தொலைபேசி உபயோகிக்காதவர்களுக்கும் இடையே மூளை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஒரே அளவில்தான் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செல்போன் பயன்பாட்டால் மூளை பாதிப்பு வரும் என்று பரவலாக நம்பப்படும் ஒரு சூழலில் இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னலில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆய்வின் ஆராய்ச்சி அடிப்படைகள் தொடர்பில் சில நிபுணர்கள் குறை கூறியுள்ளனர்.

வியாபாரத் தேவைகளுக்காக செல்போன்களை பயன்படுத்துவோர் இந்த ஆய்வில் கணக்கெடுத்துக்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆயவு முடிவு பொதுமக்களையும், அதிகாரத்தில் இருப்போரையும் தவறாக வழி நடத்திச் செல்லக் கூடும் என்று பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேரந்த பேராசிரியர் டேனிஸ் ஹேன்ஷா எச்சரித்துள்ளார்.
நன்றி:BBC வலைத்தளம்

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out