எழுத்துரு அளவு Larger Font Smaller Font
- முனைவர் வா. நேரு, தலைவர்,
மாநில பகுத்தறிவாளர் கழகம்
அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைப்படி தமிழகமெங்கும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் நாட்டின் உரிமைக்காப்பு பிரச்சாரப் பெரும்பயணம் நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது , அடுத்த தலைமுறையினைப் பற்றிக் கவலைப்படும் திராவிடர் கழகம் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை, முல்லைப்பெரியாறு, சேது சமுத்திரத்திட்டம், காவிரி நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலை பற்றி பரப்புரை செய்கின்றது. அதில் ஒரு பரப் புரையாக, கோரிக்கையாக அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண் டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. நுழைவுத் தேர்வுகள் எந்த மொழியில் இருந்தால் என்ன ? திறமை உள்ளவர்கள் எழுதி வந்துவிட்டுப் போகின்றார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்க நேரிட்டது. அறியாமையில் இருக்கும் அந்தப் படித்தவர்கள் ? அறிந்து கொள்ள சில தகவல்கள்:
இந்தியக் குடியுரிமைத் தேர்வுகள் அய்.ஏ.எஸ் தேர்வு என்று சாதாரணமாகக் கூறப்படும் இந்தியக் குடியுரிமைத்தேர்வு (Indian Civil Services Examination) அகில இந்திய அளவில் உயர் நிலை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்ப தற்காக நடத்தப் படுகின்றது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ், அய்.எப்.எஸ், அய்.ஆர்.எஸ் என்று 26 பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்ப தற்காக நடத்தப்படும் தேர்வு. இந்தத் தேர்வு மூன்று கட்டங்களைக் கொண்டது. 1. முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination) 2. முதன்மைத் தேர்வு(Main Examination ) 3. நேர்முகத் தேர்வு (Interview ). இந்தத் தேர்வில் நுழைவுத் தேர் வான முதல் நிலைத் தேர்வில் கேள்வித்தாள் தமி ழில் இருக்காது, ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இருக்கும், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாவது கட்டமான முதன்மைத் தேர்வையும் , மூன்றாம் கட்டமான நேர்முகத்தேர்வையும் விருப்பம் கொடுத்தால் தமிழில் எழுத முடியும் .
பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection commission) நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக அகில இந்திய அளவில் கீழ் நிலை எழுத்தர் (Lower Division Clerk), மேல் நிலை எழுத்தர் (UDC), ஆடிட் டர், வருமான வரித்துறை ஆய்வாளர், சுங்க ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படு கின்றனர். இரண்டாம் கட்ட அதிகாரிகள், மூன்றாம் நிலை ஊழியர்கள் போன்றவர்கள் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இத்தேர்வு இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதலில் எழுத்துத் தேர்வு பின்பு நேர்முகத்தேர்வு . நேர்முகத் தேர்வில் தமிழில் பதில் அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது எனச் சொல்லுகின்றனர். ஆனால் முதல் தேர்வான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. பெரும்பாலும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே இத்தேர்வில் வெற்றி பெறுகின்றனர். பொதுத் துறை நிறுவனங்கள் :
வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங் களில் எழுத்தர் மற்றும் அதிகாரிகளுக்கான தேர்வு கள் தனியாக நடத்தப்படுகின்றன. இதில் அதி காரிகள் போன்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கு பெரும் தொகை மாத சம்பளமாகக் கொடுக்கப்படுகின்றது. இதற்கான நுழைவுத்தேர்வுகளின் கேள்வித்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
மேல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் :
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திறக்க மறுக்கும் கதவைக் கொண்டுள்ள இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் (அய்.அய்.டி) ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வினை நடத்துகின்றனர். +2 வில் வாங்கும் மதிப்பெண் களைக் கணக்கில் கொள்ளாமல் , இந்த நிறுவ னங்கள் தாங்கள் வைக்கும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையினை நடத்துகின்றனர். இதனைப் போலவே தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.அய்.டி), இந்திய தகவல் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் (அய்.அய்.அய்.டி), மத்திய மருத்துவ கல்லூரி நிறுவ னங்கள், மத்திய வேளாண்மை கல்லூரி நிறுவனங் கள் அனைத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படை யிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், அல்லது அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஏன் வேண்டும் தமிழில் ? மேலே கூறப்பட்ட வேலை வாய்ப்புக்கான நுழைவுத்தேர்வு என்றாலும்சரி, அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் படிப்பதற்கான நுழைவுத்தேர்வு என்றாலும் கேள்வித்தாள் இந்தியிலும் உள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இதன் மூலம் முன்னுரிமை கிடைக்கின்றது. இந்தத் தேர்வுகள் எல்லாம் மிகக் கடினமானவை. வெற்றி பெற எது மிக முக்கியம் என்றால் கேட்கப்பட்ட கேள்விகளைப் புரிந்துகொள்வது, புரிந்து கொண்ட கேள்விக்கு மிக வேகமாக விடையளிப்பது. தமிழிலும் கேள்வித்தாள் இருந்தால் கேள்வி களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் .ஆங்கிலமும் இந்தியும் தெரிந்த சிலருக்கு இரண்டு மொழிகளிலும் கேள்வித்தாளைப் படிக்கிறபோது , புரியாததுகூட பளிச்செனப் புரிகிறது, விரைவாக விடையை குறிக்க முடிகின்றது. ஆனால் கேள்வித் தாள்கள் தமிழிலும் இல்லாத காரணத்தால் இந்த ஒப்பிடல்முடியாமல்போகின்றது.
வருடத்திற்கு 5 அல்லது 6 இலட்சம் தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் +2 தேர்வினை எழுதுகின்றார்கள். எப்படி தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் வெகுவான எண்ணிக்கையில் அய்.அய்.டி போன்ற நிறுவனங்களில் போக முடியவில்லையோ , அதனைப் போல தமிழ் வழிக் கல்வி பயில்பவர்கள் இந்தத் தேர்வு நடக்கும் இடத்திற்கே போக முடி யாதவாறு நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் விதமாக இந்தக் கேள்வித் தாள்கள் அமைகின்றன. ஆங்கில வழியில் கற்பவர்கள் 7 அல்லது 8ஆம் வகுப்பு படிக்கும்போது அய்.அய்.டி போன்ற நிறுவ னங்களில் நடைபெறும் தேர்வுக்கு தனி வகுப்பு போக ஆரம்பிக்கின்றார்கள், ஆனால் தமிழ் வழியில் கற்பவர்களுக்கு இந்த வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்படுகின்றது. ஆனால் இந்தி வழியில் கற்பவர்களுக்கு இந்த தேர்வில் கலந்து கொள்ளவும், வெற்றி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. கேள்வித் தாள்களை பல மொழிகளில் அடிக்க இயலுமா?
அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அடிக்க இயலுமா? எனும் கேள்வி எழுப்பப்படுகின்றது. முடியும் என்பதே நமது பதில் . இன்றைய கணினி யுகத்தில் 16 மொழிகளில் என்ன அதற்கு மேலும் உள்ள மொழிகளில் கேள்வித்தாள்களை அச்சிட முடியும் . ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் அச்சடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறமும் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளில் அந்த ரூபாயின் மதிப்பு அச்சடிக்கப்படுகின்றது. இது இன்றைய இந்தியாவில் சாத்தியமாக, நடைமுறையில் இருக்கும்போது நுழைவுத்தேர்வுகளில் கேட்கப் படும் ஒவ்வொரு கேள்வியையும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அச்சிடுவது சாத்திய மில்லையா? நடைமுறைப்படுத்த இயலாதா? உண்மையிலேயே இந்தியாவில் உள்ள அங் கீரிக்கப்பட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களை அதுவும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வரும் மாணவர்களை மத்திய அரசின் தொழில் நுட்ப நிறுவனங்களில், மத்திய அரசுப் பணிகளில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்குமானால் இது சாத்தியமே. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா எனக்கூறப்படுகின்றது. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களை சார்ந்த மக்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா எனக் கூறப்படுகின்றது. அப்படியென்றால் அரசு நிர்வாகம் என்பது, அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ., படிப்பு என்பது பல்வேறு இன , மத, மொழி மக்களால் நிர்வகிக்கப்படவேண்டும் . ஆனால் தற்பொழுது வரை முழுக்க பார்ப்பன அதிகாரிகளாலும் , பார்ப்பன ஊழியர்களாலும் மட்டுமே நிரப்பப் படுகின்றது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்த நுழைவுத்தேர்வு முறைகள். தனக்கென ஒரு தாய்மொழி இல்லாத பார்ப்பனர்கள் பல்வேறு மொழிகளில் நுழைவுத்தேர்வு கேள்விகள் அமைப்பதற்கு எதிராக இருக்கின்றார்கள். ஒன்று பட்டுக் குரல் கொடுப்போம் :
இந்த நுழைவுத்தேர்வுகளின் முக்கியத்துவம், இதில் ஊடாடும் பார்ப்பன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் தமிழிலும் நடத்துக எனக் குரல் கொடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை தமிழக எம்.பி.க்கள் அனைவரும் கட்சி வேறுபாடு களை மறந்து ஒன்றுபட்டுக் குரல் கொடுத்ததைப் போல தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒரே குரலில் அகில இந்திய நுழைவுத்தேர்வுகளைத் தமிழிலும் நடத்த வேண்டும் எனக் குரல் கொடுக்கவேண்டும். மத்திய அரசை இக்கோரிக் கையை ஏற்க வைக்க வேண்டும். மறைமுகமாக தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர் களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் இக் கொடுமைக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரள வேண்டும். தமிழிலும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் வேண்டும் எனப்போராட்டக் குரல் கொடுக்க வேண்டும்.

ஒன்று அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் தமிழ் உட்பட அனைத்திலும் வினாத்தாள்கள் இருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லோருக்கும் பொதுவாக ஒரே மொழியில்(ஆங்கிலத்தில்)இருக்க வேண்டும்.ஆங்கிலத்துடன் சேர்த்து ஹிந்தியில் மட்டும் இருக்கக் கூடாது.
ReplyDelete-அன்புமணி