அந்தாட்டிக்காவில் தென்னை மரங்கள்.
அன்றைய அந்தாட்டிக்கா..!
சுமார் 53 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்று பனி படர்ந்து கிடக்கும் அந்தாட்டிக்காவில் (பூமியின் தென் துருவம்) தென்னை போன்ற palm மரங்கள் வளர்ந்திருந்ததற்கான சான்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தளவுக்கு அந்தப் பிரதேசம் சூடாகவும் இருந்துள்ளது.
ஆட்டிக் பகுதியில் பனிப்படலத்தின் மீது துளைகள் இட்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்தும் இவ்வாறான ஒரு விடயம் முன்னர் கண்டறியப்பட்டிருந்த போதும்.. அந்தாட்டிக்காவைப் பொறுத்தவரை அது கடினமாக இருந்தது. அண்மையில் அந்தாட்டிக்காவை அண்டிய கடல்படுக்கைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
இது பூமியின் ஆதி வளிமண்டலம் சூடாகவும் காபனீரொக்சைட் (CO2) நிறைந்தும் இருந்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட CO2 அளவு வீழ்ச்சி, கண்ட நகர்வுகள் மற்றும் ice age கால பனிப்படிவின் வாயிலாக.. அந்தப் பகுதி பனி படர்ந்து நனி குளிர் பிரதேசமாக மாறி விட்டது போலும்..!
இன்றைய அந்தாட்டிக்கா.
No comments:
Post a Comment
வணக்கம்