தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

May 30, 2015

இன்றைய புரட்சி

 பெண்கள் அடிமைப்பட்டுகிடந்த காலத்தில் ,பெண்கள் வேலைக்குச் சென்றது அன்றைய புரட்சி என்றால் கலை,அறிவியல் மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளில் சிறந்து விளங்குவதும் ஐ.ஐ.டி மாணவர்களின் போராட்டமும் இன்றைய புரட்சி.
சுயநலமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் சமூகநீதிக்காக போராடும் மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் படிக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர்களாக 
பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டம் அதுவும் எண்ணிக்கையில் 


ஐ.ஐ.டியில் பார்ப்பனரல்லாமல் மிகக்குறைவாக படிக்கும் மாணவர்கள்  இயங்கி வருவதை  பொறுக்கமுடியாத இந்த நாட்டை பணக்காரர்களுக்கும் ,பார்ப்பனர்களுக்கும் கொடுக்க நினைக்கும் மத்திய அரசு, மாணவர்கள் நலனுக்காக எனத் தெரிவிக்கின்றது எது மாணவர்களுக்கு நலம் என்று தெரியவில்லை .மேலும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கின்றனர்.அப்படியென்றால் அம்பேத்கார் ,பெரியார் கொள்கைகள் தவறான வழியா?மாணவர்கள் இந்த பணத்திற்கும் பார்ப்பனர்களுக்கும்  அடிமையாகி கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நியதியா?

.அந்த காலத்தில் வருணாசிரம அடிப்படையை நேரடியாக புகுத்தினர்.இன்று பணம்,வளர்ச்சி எனும் போர்வையால் வருணாசிரமத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.இவர்கள் தேர்தலுக்கென்று ஒரு அமைப்பு ஆரம்பித்து ஐ.ஐ.டியில் செயல்படலாம் ஆனால் பெரியார்-அம்பேத்கார் வாசக வட்டம் செயல்பட தடை.அன்று இட ஒதுக்கீடு பிரச்சனையில்  காங்கிரஸ் தமிழ்நாட்டில் சட்டம் கொண்டுவரவில்லை.கடந்த 50 ஆண்டுகாலம் ஆட்சிக்குவர இயலவில்லை.அன்றைய மாணவர்களாக திமுக வந்தது வெற்றி பெற்றது.மாணவர்களின் புரட்சி என்பது தமிழ்நாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது.ஆனால் அன்று இருந்த வீரியம் சுயநலத்தால் இன்று குறைந்துள்ளதே தவிர ,போராட்டம் மாணவர்களின் மைதானம் இங்கு விளையாடப்படும் விளையாட்டுகளில் பலருக்கு காயம் படலாம்,உயிர் போகலாம்,ஆனால் விளையாட ஆள் இருப்பார்கள்
அன்று விளையாட பலர் இருந்தனர், வேடிக்கைப் பார்க்க சிலர் இருந்தனர்,இன்று வேடிக்கைப் பார்க்க பலர் இருக்கின்றனர்,விளையாட சிலர்தான் இருக்கின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது .

இது இந்துத்துவா சக்திகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களுக்கும் ஒரு பாடம்.ஐ.ஐ.டியில் படிப்பது என்பது சாதரண  காரியமல்ல,பெரும்பாலும் பணக்காரர்களும்,பார்ப்பனர்களும் படிக்கும் இடம் பணக்காரர்களுக்குப் பசி தெரியாது,பார்ப்பனர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரின் வலி தெரியாது.இரண்டும் தெரிந்த மாணவர்களுக்கு சமூகநீதிக்காக போரடத் தெரியும் அப்படிப்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டியில் மார்க் குறைத்து விடுவார்கள்,பெயிலாக்கி விடுவார்கள்,நாம் எவ்வள்வு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்ற தங்களைப் பற்றிய எண்ணம் அவர்களுக்கும் இருந்திருக்கும் ஆனால் அவர்களுக்கு அதனையும் தாண்டி சமூதாய அக்கறை இருக்கிறது என்பது புலப்படுகிறது. அம்பேத்கர்-பெரியார் வாசக வட்டம் பணி தொடர வாழ்த்துக்கள்.மாணவர்களாகிய நமக்கும் சமுதாய அக்கறை இருக்கிறது நம்மைப் பற்றிய நினைப்பும் இருக்கிறது ஆனால் சமூதாய அக்கறை குறைய காரணம் நாம்  இப்போது நலமாக இருக்கிறோம் என்ற நினைப்பு !ஒரு மாணவனாக,பகுத்தறிவாதியாக பெரியார்-அம்பேத்கார் வாசக  வட்டத்திற்கு ஐ.ஐ.டி மாணவர்கள் இருப்பதற்கு பெருமை அடைகிறேன் .என்னால் இது போன்ற முயற்சிகள் எடுக்கமுடியவில்லை என்று வருத்தம் அடைகிறேன்.எல்லாருக்கும் எண்ணம் உண்டு அதை துணிவாக செயல்படுத்துபவர்களே சமூதாயத்தில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் ஐ.ஐ.டி பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்திற்கு ஒரு மாணவனாக எனது பாராட்டுக்கள்!

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out