வரிசையாக முதலில் கோழிகறிக்கடை ,அடுத்து ஆட்டுக்கறிக்கடை ,அடுத்து ஒரு மருத்துவமனை அடுத்துமீன்கடை.இவ்வாறு இருக்கக்கூடிய மருத்துவமனை. ஒரு பக்கத்தில் மக்கள் ஆட்டுக்கறிக்கு அலை மோத,மற்றொரு பக்கம் கோழி கத்தும் சத்தம் கேட்க மற்றொரு பக்கம் மீன்கடையில் மீனின் வாசம் தூக்க நடுவில் அமைந்த மருத்துவமனையைக் கண்டு வியந்தேன்.