தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

November 28, 2015

மனிதக்கடை

                                         வரிசையாக முதலில் கோழிகறிக்கடை ,அடுத்து ஆட்டுக்கறிக்கடை ,அடுத்து  ஒரு மருத்துவமனை அடுத்துமீன்கடை.இவ்வாறு இருக்கக்கூடிய மருத்துவமனை. ஒரு பக்கத்தில் மக்கள் ஆட்டுக்கறிக்கு அலை மோத,மற்றொரு பக்கம் கோழி கத்தும் சத்தம் கேட்க மற்றொரு பக்கம் மீன்கடையில் மீனின் வாசம் தூக்க நடுவில் அமைந்த மருத்துவமனையைக் கண்டு வியந்தேன்.



மருத்துவமனைக்குள் நுழைந்த போது வாசலில் ஒரு 50 செருப்புகள் அங்குமிங்குமாக கிடந்தன.உள்ளே சென்றபோது இரண்டு மருத்துவர்கள் இரண்டுபேரும் தம்பதியர்கள்.ஆண் தனியார் மருத்துவர்,பெண் மருத்துவர் .உள்ளே அங்குமிங்கும் என ஓடிக்கொண்டிருக்கும்  செவிலியர்கள் என்ற பேரில் பயிற்சி பெறாத பெண்கள்.

                                 உள்ளே நுழைந்த உடன் "நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும் மேடமா,சாரா ? உங்கள் பெயர் என்ன மற்ற மருத்துவ விவரங்கள் சொல்லுங்கள்" என கேட்க நாங்களும் மேடம் என்று சொன்னோம்.உள்ளே உட்காரச் சொன்னார்கள் அங்கே மருத்துவமனை இருப்பதைப் பார்த்தால் நமக்கு இது மருத்துவமனையா? என்று தோன்றும் .ஒரு பக்கம் டிவியில் சாமியாரின் பேட்டி ஓடிக்கொண்டிருக்கிறது.மற்றொரு பக்கம் EMERGENCY என்று எழுதி அதற்கு மேல் தோரணம் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.மற்றொரு பக்கம் இந்த ஆண் மருத்துவர் அடிக்கடி வெளியில் வந்து அங்கும் வேலைபார்க்கும் பெண்களை மிரட்டுவது,எப்போதும் busyயாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டார் உண்மையில் அவரைத் தேடி யாரும் வரவில்லை.அவர் தான் தன் மனைவியை பார்க்க வந்த நோயாளிகளை பார்க்கிறார்."எவ்வளவு நாள் தான் Receptionalist வேலையிலேயே இருப்பீங்க.தெர்மாமீட்டர்,breathe மெஷின் பார்ப்பது,ஊசி போடுவது போன்ற வேலைகளை கற்றுக்கொள்ளுங்கள்" என்றார் ஒரு பெண்ணிடம் .அப்போது தான் எனக்குத் தோன்றியது இங்கு வேலை பார்க்கும் யாரும் முறையாக பயிற்சி பெறவில்லை. 

                                                   மேலும் என்ன நடக்கிறது என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை(முதியவர்களை) அடிப்பது(ஜாலியாக காட்டிக்கொள்கிறாராம்).அங்கு வந்திருக்கின்ற முதியவர்களின் அறியாமையை பயன்படுத்தி
கொள்கிறார் என்பது பிறகுதான் தெரிய வந்தது.மூன்று நாள் மாத்திரை என எழுதி இருந்ததால் ஒரு பெண் மூன்று நாள் மட்டும் கொடுங்கள் என்றார்.அந்த பெண்ணிடம் சென்று  நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறீர்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரை வாங்கிச் செல்லுங்கள் என்றார்.இப்படி பல விதமான பெல்ட் போன்ற பொருட்கள் கால்வலி,கைவலி போன்றவற்றிற்கு  விற்பனை செய்யப்படுகின்றன.கொடுக்கும் ரசிது உள்ளிட்டவைகளில் ஆண் மருத்துவர் பெயர் போட்டு இருக்கிறது.மேலும் மருந்து வாங்கும் இடத்தில் கூட்டம் மருந்து ஒருவருக்கு எடுத்துக் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும் குறைந்தது 2மணி நேரம் .அப்படி என்ன நடக்கும் என்ற சந்தேகம் வந்தது எனக்கு மருந்துகள் வெட்டிக் கொடுக்கப்படுகின்றன.கொடுக்கப்படும் மருந்துகளில் இவ்வாறு அச்சிடப் பட்டிருக்கிறது "mfg:Mar 2014 
Exp:Oct) எனத் துண்டிக்கப்பட்டு விட்டது.இவ்வாறு கொடுக்கப்பட்ட ஆறு மருந்துகளில் 5 மருந்துகள் இருந்தது.வருடம் மட்டும் ஏன் ஒவ்வொரு மாத்திரையிலும் சரியாக அந்த இடத்தில் துண்டிக்கப்பட வேண்டும் என்பது எனக்கு சந்தேகத்தைத் தந்தது.மேலும் கொடுக்கப்பட்ட பில்லில் தனியாக manufacturing date,Expiry date அடித்துக் கொடுத்தது என்னை இன்னும் சந்தேகத்திற்கு ஆட்படுத்தியது. கடைசியாக மனிதனுக்கும் கோழிக்கடை,ஆட்டுக்கறிக்கடை,மீன் கடை போல்  ஆடு,கோழி,மீன் போன்றவற்றிற்கு உணவளித்து பாதுகாத்து வந்து கடைசியில் வெட்டுவதைப் போல் மனிதனும் மாத்திரை மருந்து என பாதுகாக்கப்பட்டு அறியாமையால் மருத்துவமனையில் தனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பலிகொடுக்கப்படுகிறான் என்பது விளங்கியது.    

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out