தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

November 3, 2018

சீரியல்,நீயூஸ் போதைகள்

                           
(நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு கூர்மையான பதிவுடன்...)

 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் இன்று ஏதோ ஒரு தொழில்நுட்பத்தின் கையில் சிக்கித் தவிக்கின்றது. ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 3 பேர் அதிகபட்சம் 4 பேர் இதுதான் இன்றைய குடும்பம்.
4 பேருக்கும் தலா 1 சொல்போன் வீதம் 4 செல்போங்கள் குடும்பத்தில்... இன்றைய தொழில் நுட்பத்தின் கையில் அதிகம் சிக்கிக் கொண்டவர்களாக இளைஞர்கள் தான் இருக்கின்றனர்.
பெண்கள் அதாவது 60-களில் பிறந்தவர்களுக்கு ஒன்று இன்றைய செல்போன் தொழில்நுட்பம் சென்று சேர்வதில்லை அப்படியே சென்றாலும் அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.அவர்கள் வேறொரு தொழில்நுட்பத்துடன் நின்றுவிடுகின்றனர் அதுதான் தொலைக்காட்சி.



  தொலைக்காட்சி ஒரு அறிவியல் கருவியாக கருதப்பட்டது ஆனால் அதில் மூடநம்பிக்கைகள் புகுத்தியது,புகுத்திக் கொண்டிருப்பது ஒரு இனம். ராசிபலன்,கோயில்கள்,பரிகாரங்கள்,புராண இதிகாசங்கள் என்று இவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் அதிகாலை முதல் இரவு வரை ஒளிபரப்பப்படுகிறது.ஒரு காலத்தில் பக்திப் பாடல்கள் நிறைந்த படங்கள் வந்தன அது கடவுள் புகழ்பாடும் படங்களாக இருந்தன என்றாவது தொலைக்காட்சிகளில் போடுவார்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் Youtube இல் சென்று பார்க்கிறார்கள்

  ஹீரோயிசம் படங்கள் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்று சிவகார்த்திகேயன் வரை நிற்கின்றது.கதாபாத்திரப் படங்கள் சிவாஜி தொடங்கி இன்று விஜய்சேதுபதி வரை நிற்கின்றது.காலத்தின் மாற்றங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.இந்தப் படங்கள் திரும்பித் திரும்பி பார்த்தால் ஹீரோவைக் கொண்டாடத் தோன்றும்,கதாபாத்திரங்களை ரசிக்கத் தூண்டும்.

  ஒரு கட்டத்தில் சீரியல் என்று ஒன்று வரத் தொடங்கியது அதிலும் குறிப்பாக பெண்களைக் குறிவைத்து... காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் வேலைபார்த்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் தேடும் ஒரு பொழுதுபோக்கு என்று கருதுகிறார்கள் பாவம் அவர்களுக்குத் தெரியாது அது அவர்களைக் குறிவைத்து தேடப்படும் வணிகம் என்று... வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் தனியாக காலை நேர சீரியல்கள்.

  ஒரு கட்டத்தில் ஒரு சேனல்தான் காலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் ஓடியது.பெண்களுக்கு இயல்பாகவே தங்கள் சோகங்களை அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டும்,அடுத்தவர்கள் கதைகளைக் கேட்க வேண்டும் என்ற உளவியல் பெரும்பாலானோருக்கு உண்டு ,விதிவிலக்குகளும் உண்டு.ஒரு காலத்தில் தெருக்களில் நின்று பேசப்பட்ட அடுத்தவீட்டுக் கதைகள்,ஒரே கதை ஒவ்வொரு வீட்டிலும் சீரியல் என்று ஓடியது அவர்கள் தெருக்களில் பேசும் கதைகள் குறைந்தன...காலங்கள் உருண்டோடியது 10 சேனல்கள் 10*5=50 சீரியல்கள்.ஒரே சேனலில் 5 சீரியல் பார்த்த அதே தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை இன்று குறைந்தபட்சம் 15 சீரியல்கள் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு சேனல்களை பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டது.

   5 சீரியல் வகைகள் தான் உண்டு புராணக் கதை,பாம்புக் கதை,மாமியார்-மருமகள் சண்டை.வேலைக்காரி-முதலாளி சண்டை,அழகானவள்-அழகற்றவள் கதை இதுதான் வகைகள் இவற்றில் ஒவ்வொன்றும் 3 சேனல்கள் வீதம் 15 சீரியல்கள்.சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நீ அந்தக் கடவுள் கதை போடுறீயா நான் இந்த கடவுள் கதை போடுறேன் என்று கிளம்புகிறது பற்றாக்குறைக்கு வேறு மொழி சேனல்கள் வேறு... இதில் ஒரு சில சேனல்கள் ஒளிபரப்பிய நாடகங்களை மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்வதால் பார்த்த சீரியல் காட்சி மறுபடியும் மறுபடியும் பார்க்கிறார்கள்.

   நேரடியாக பெண்களின் உளவியலை இது பாதிக்கின்றது.சில பெண்கள் அந்த காலத்தில் நம்பியார் வந்தால் தியேட்டரில் கல்யெறிவதுபோல் வில்லி வந்தால் திட்டிக்குமிப்பதும்,கதாநாயகிக்காக இரக்கப்படுவதும்,பாம்பு கதாநாயகிக்காக இரக்கப்படுவதும்,புராண கதாபாத்திரங்களுக்கு பரிதாபப்படுவதும் அதில் வருவது அனைத்தும் நடக்கும் என்று இப்படி பல மாயைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

   அதற்கு யாராவது அந்த வீட்டில் குறுக்கே நின்றால் அன்றைய பாடு திண்டாட்டம் தான் ஏன் அந்த மாதம் முழுவதும் கூட... அவர்கள் கூறும் தர்க்க ரீதியான பதில் "நீங்கள் விவாத மேடை,கிரிக்கெட்,செல்போன்கள் பார்ப்பதை நான் என்றாவது கேட்டதுண்டா" இதில் ஒரு உண்மை இருக்கிறது பெண்களை குறிவைத்து சீரியல் நடத்துவது போல் ஆண்களைக் குறிவைத்து விவாத மேடை நடத்தப்படுகின்றது.நடுத்தர வயது ஆண்கள் சமூக வலைதளங்களுக்கு பெருமளவு அடிமையாகி விட்டார்கள்.கிரிக்கெட் பற்றி அனைவரும் அறிந்ததே பெரும்பாலான ஆண்கள் கிரிக்கெட் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

  உனக்கிருக்கும் சமஉரிமை எனக்கும் உண்டு என்ற பெண்ணிய சிந்தனை தொலைக்காட்சி வரைக்கும் வந்திருப்பது ஒருவகையில் பாராட்டத்தக்கது.வருந்தத்தக்க விசயம் பெண்கள் எதில் அடிமையாகக்கூடாது என்பதற்காக பெண்ணியம் பேசப்பட்டதோ அதில் அடிமையாவதற்காக பெண்ணியம் பேசப்படுவது.செல்போன் தொழில்நுட்பத்தை அறிந்தாலும் பெண்கள் youtube இல் சீரியல் தான் பார்க்கிறார்கள்

  தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் அதனால் ஏற்பட்ட சீரியல் போதை பெண்களையும்,நியூஸ்,கிரிக்கெட் போதை ஆண்களையும் விடுவதில்லை.பெரிய திரையில் பார்க்கப்பட்டவை கையடக்கத் திரையில் பார்க்கப்படுகின்றன.விதிவிலக்குகள் உண்டு,இதுவே ஆண்,பெண் அடையாளம் அல்ல எதிர்பதமாக இருக்கக்கூடும் பெரும்பாலானோர்கள் சிக்கித் தவிக்கும் போதை வலிகளை பதிவிட்டுள்ளேன். 

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out