சூரிய சக்தி விமானம் புதிய சாதனை.
பாரம் குறைந்த காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூரியக் கல சக்தியில் இயங்கும் தன்னியக்க விமானம்.
இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற 30 கிலோ எடையுள்ள விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர்(Zephyr ) 6' என்ற இந்த விமானமானது சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் கூட இயங்கியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது.
படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்டுத் திறன் குறித்து விளங்கும் வகையில், இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தம்மால் உருவாக்கப்பட்ட மேற்படி விமானத்தின் பரீட்சார்த்த பறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
செபைர் 6 விமானத்தின் பறப்புயரம் ஒப்பீட்டு ரீதியில்.
இந்த "செபைர் 6' விமானமானது 82 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் பறந்தமை குறிப்பிடத்தக்கது. 54 மணி நேரம் பறந்து தன்னால் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட சாதனையை இவ்விமானம் முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளது. சுமார் 60,000 அடி உயரத்தில் தூர இருந்து இயக்கும் முறைமையின் கீழ் இவ்விமானம் பறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7577493.stm

No comments:
Post a Comment
வணக்கம்