தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 30, 2012

கடலுக்குள் இருந்த இமயமலை!

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.
உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.


நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.
ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.
பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்’ பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு’ நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.
நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.
நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல்கொண்டுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.
இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இநëதப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.
இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out