தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

December 27, 2014

மார்க் என்பது மாணவர்களின் நலனுக்கா,ஆசிரியர்களின் நலனுக்கா,நிர்வாகத்தின் நலனுக்கா?

                                  மார்க் என்பது ஒரு மாயை.அந்த மாயை மாணவனை படுத்தும் பாடுக்கு ஒரு அளவே இல்லை.இன்றைய பள்ளிகளில் சிறிய வகுப்பு படிக்கும் போது மாணவனுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது நல்ல மதிப்பெண் அப்போது அவன் வாங்கிக் கொண்டு வந்தாலும் அவனைப் பாராட்ட ஆளில்லை ஆனால் 10ம் வகுப்பு ,12ம் வகுப்பு வந்த உடனே இந்த சமூதாயம் அவன் மீது ஒரு விதமான எதிர்பார்ப்பை வைக்கிறது.அதற்காக அவனை மதிய உணவு இடைவேளை முடியும் முன்பே
சாப்பாட்டை மூடிவைத்து விட்டு படிக்க வேண்டுமாம்.இடைவேளை நேரங்களில் இடைவேளைக்குச் செல்லக்கூடாது போன்ற முட்டாள்தனமான வழிமுறைகள் இன்றைய பள்ளிகளில் காணப்படுகின்றன.



                                 அவன் படிக்கும் நிர்வாகத்தில் அவன் மூலமாக மார்க் என்னும் போர்வையில் அவன் பள்ளிக்கு விளம்பரம்.அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்குத்தான் பணத்துயரம் என்றால் என்னவென்று தெரியும்.
மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்குத்தான் படிப்புத்துயரம் என்றால் என்னவென்று தெரியும்.cbse பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்குத்தான் மொழித்துயரம் என்றால் என்னவென்று தெரியும்.ஆனால் இவை அனைத்திலும் அநேக மாணவர்கள் படிக்க சாத்தியமில்லை அப்படி ஒரு சிலர் அனைத்திலும்  படித்திருந்தார்களே ஆனால் அவர்கள் வாழ்க்கையையும் இன்றைய கல்வியையும் உண்ர்ந்தவர்கள்  ஆகின்றனர்.
                                 
                               மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததுமே இந்த சமூதாயம் அவர்கள் நினைத்தைப் படிக்க விடுவதில்லை.மாணவர்களின் வாழ்க்கையில் பள்ளி நிர்வாகம் குறுக்கிட்டு அவர்கள் பேப்பரில் விளம்பரம்
கொடுப்பதற்காகவும்,இத்தனை மாணவர்கள் இந்த உயரிய கல்லூரிக்குச் சென்றனர் என்று போர்டு வைப்பதற்காகவும் பலரின்  கனவைப் பொசுக்குகிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில் அந்த மாணவனுக்கு
முழு சுதந்திரம் கிடைக்கிறது அவனையும் அவன் நினைத்தைப் படிக்க விடுவதில்லை இந்த சமூதாயம்
                                   
                                                "தன் பெண்டு,தன் பிள்ளை சோறு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன்"என்ற பாரதிதாசன் வார்த்தைகளுக்கேற்ப அவனை அந்த அடிமைத்தன வாழ்க்கைக்குள் போடுகிறது.அதனை மறுத்து சுயமாக யோசிக்கிறவன் அரிது.ஆனால் அவ்வாறு அவனை யோசிக்க இந்த சமூதாயம் விடுவதில்லை இயந்திரத்தனமான வாழ்க்கையில் அவனைப் பிடித்து தள்ளுகிறது.இரண்டே துறைதான் இந்த உலகத்திலே உள்ளதென்றும் ஒன்று பொறியியல் மற்றொன்று மருத்துவம் என்றும் அதனை படித்தால்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்றும் அவனுக்குள் ஒரு பேராசை மையமான மாயையை உருவாக்குகிறது.ஏனென்றால் அப்போதுதானே இத்தனை மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு உயரிய பல்கலைக் கழகத்திற்கும்,இத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும் சென்றனர் என்று போர்டு வைக்க முடியும்.ஆனால் அங்கே அவன்படும் பாடு உண்ணக்கூட நேரமில்லாமல் நடந்துக்கொண்டே சாப்பிடுவது,சாப்பிடாமல் செல்வது,இரவு முழுவதும் உறங்காமல் வீட்டுப்பாடம் செய்வது என இயந்திரப்படிப்பைப்
படிக்கச் சென்றவன் இயந்திரமாக மாறிப்போகிறான்.
                         
                    இங்கேயும் கல்லூரி நிர்வாகம் இத்தனை 50 மாணவர்கள் இந்த கம்பெனிக்குச் சென்றனர் என்று அவர்கள் விளம்பரம் வைப்பதற்காக பலிகடாவாக 500 மாணவர்கள் கொடுக்கப்படுகின்றனர்.கேட்டால்
திறமை(skills) இல்லை என்று கூறுவர்.இங்கே மாணவர்கள் அவர்கள் கூறியவாறு நடக்கவில்லை என்றால் மார்க்கில் கை வைப்பது ஒரு சில ஆசிரியர்களின் நடவடிக்கை. கலைக் கல்லூரிகளிலும்
மார்க்கில் கை வைப்போம் என்று சில ஆசிரியர்கள் மிரட்டுகின்ரனர்.(சதவீதம் மிகக் குறைவு)
                 
                              இதெல்லாம்  மார்க் என்னும் மாயையால் நடைப்பெற்றவை,மற்றும் இன்றைய இளைஞர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்றால் நல்ல பள்ளி என்ற வெளியுலக பெயரில் உள்ள பள்ளியில் 12ம்வகுப்பு வரை படித்து மார்க் எடுப்பது,உயரிய கல்லூரி என்று அனைவரும் சொல்லும் கல்லூரியில்போய் மார்க் எடுத்து ,நல்ல சம்பளம் கொடுப்பதாக சொல்லும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சுதந்திரம் இல்லாமல் வாரத்தில் கிடைக்கும் ஒரு நாளில் கெட்ட பழக்கவழக்கத்திற்கு
அடிமையாகி (கேட்டால் ரிலாக்ஸ் என்பார்) கார் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவதைப் பேப்பரில்  பார்க்கிறோம்.

மொத்தத்தில் மார்க் மாணவனின் நலனுக்கல்ல ஆசிரியரின் நலனுக்கும்(மிரட்டுவதற்கு) நிர்வாகத்தின் நலனுக்கும்தான்.
                 
                         
                             அந்த காலத்தில் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை அடிப்பதும்,கல்லூரியில் தவறு செய்தால் திட்டுதலும் பெற்றோரை கூப்பிட்டு பேசுதலும் என நேராக அனைத்து செயல்பாடுகளும் 
இருந்தது.ஆனால் இன்று எந்த விதமான பேச்சும் கிடையாது,அடியும் கிடையாது மார்க்கில் கை வைப்பது. இது கல்வி முறையில் பெரிய தலைமுறை இடைவெளியாகவே நான் கருதுகிறேன்.ஆனால் இதுபோன்ற சில ஆசிரியர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் வாழ்வில் அடுத்தநொடி எப்பொழுதும் இறக்கக்கூடிய தருவாயில் ஒரு சில மாணவர்களும் படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.அவர்களுக்கு பயம் என்பது கிடையாது அதனால் அவர்களை மார்க்கை வைத்து மிரட்ட முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அவர்களை அன்புடன் நடத்த வேண்டும் அவர்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாக எல்லோரிடமும்
சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

                                இது போன்ற மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.அதனால்தான் நாளிதழ்களில் படிக்கும் ஆசிரியர் மாணவர்கள் மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.இதனை தவிர்க்க முதலில் introduction yourself என்ற வகுப்பு சம்பிரதாயத்திற்காக ஒரு நாள் பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் நடத்தப்படும் அதனை ஒரு மாதமாக நீடிக்க வேண்டும்.அந்த காலகட்டத்திற்குள் ஒரு நாளைக்கு 5 மாணவர்களைப் பற்றி முற்றிலும் நேரடியாகவோ,மறைமுகமாக்வோ தெரிந்து கொண்டாலும் 125 மாணவர்களைப் பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிந்து கொண்டு விடலாம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் syllabus மட்டும் நடத்தும் ஆசிரியர்கள் தான் மிகுந்து காணப்படுகின்றனர்.
அவர்களை நிர்வாகமும் அப்படித்தான் நடத்தவும் சொல்கிறது.

                               அந்தக் கால கல்வி வெறும் வகுப்புப் பாடம் மட்டுமல்லாமல் வகுப்பு மூலம் பாடம் கற்பதாக  இருந்தது.ஆனால் இன்றைய மாணவர்களோ நாளிதழ்களே படிப்பது கிடையாது.பாதி பேர் தமிழையே படிப்பது கிடையாது அதுவும் ஒரு விதமான மார்க் மாயைதான்.
              படிப்பு,பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி வாழ்வில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.அன்று ஒரு பொறியியல் படிக்கும் நண்பரிடம் பொழுதுபோக்கு என்ன என்று கேட்டால் விடுமுறைதினங்களில் நன்றாக தூங்குவது என்கிறார்.இன்று பொறியியல் மாணவர்கள் தூங்குவதற்கு என நாள் ஒதுக்கவேண்டிய நிலை உள்ளது.
                                அந்தக் காலத்தில் வேலைக்குப் போவதற்காக படித்தனர்.இன்று படிப்பதையே ஒரு மிகப்பெரிய வேலை ஆக்கிவிட்டனர்.

                               என்னுடைய  15 வருட கால கல்வி அனுபவத்தில்  11ம்வகுப்பு முதல் கல்லூரி அனுபவம் வரை(3 வருடம்) நான்   கண்ட மார்க் என்னும் மாயைப் பற்றி எழுதியுள்ளேன்.            
                                                                                                     

         

     

                         

                                 
                      

2 comments:

  1. from a horse's mouth.........! sounds so bad ... :(

    கல்வி கடைத்தெரு சரக்காகி விட்டது. உன் துயரம் புரிகிறது. ஆனால் செம்மைப் படுத்த வேண்டியவர்களுக்கு இது புரிவதில்லை

    ReplyDelete
    Replies
    1. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஐயா

      Delete

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out