சாதரணமாக காலில் அணியும் செருப்பு முதல் உடுத்தும் உடை,அணிகலன்கள்,உடம்பிற்கு அழகூட்ட எண்ணமுடியாத அளவு சாதனங்கள்,உடம்பை குறைக்க கூட்ட கருவிகள்,மாத்திரைகள்,முடிதிருத்தும் கடைகள்,1 ரூபாய் மிட்டாய் முதல் 1,00,000 முதலான கருவிகள் வரை தொலைக்காட்சி,வானொலி,பத்திரிக்கைகள்,பேனர்கள்,போஸ்டர்கள் என ஆரம்பித்தது இந்த விளம்பர மோகம்.
அன்று ஒரு பள்ளியில்,கல்லூரியில் சேர வேண்டுமானால் அங்கு படித்த ,படிக்கின்ற மாணவர்களிடம் விசாரித்தார்கள்.அதனால் அங்கு ஒரு மனித நோக்கு இருந்தது.இன்று ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ சேர வேண்டுமானால் யாரும் யாரிடமும் அவ்வளவாக விசாரிப்பது கிடையாது.அவ்வாறே விசாரித்தாலும் இந்த உலகமே ஒரு வியாபார நோக்குடையதாக மாறிவிட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம்.எல்லோருமே குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை நாடிச் செல்கின்றனர். ஆனால் அங்கு விளைவு எதிர்மாறாக உள்ளது.ஆனால் விளம்பரம் செய்யப்படாத நிறுவனங்கள் ,அரசு நிறுவனங்களில் ஒரு தவறான அபிப்ராயம் வைக்கப்படுகின்றது.ஆனால் உள்ளே சென்று பார்த்தால் விளைவு வெளியில் உள்ள கருத்துக்கு எதிர்மாறாக இருக்கும்.
நாம் நல்லவராக இருந்தால் போதும் இங்கு.ஆனால் விளம்பரம் செய்யப்படும்
நிறுவனங்களில் நாம் மற்றவர்களுக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் பிழைக்க முடியும் காரணம் அவர்களுக்கு கூட்டம் அள்ளுகின்றது.
பொதுவாக இங்கு விளம்பரம் செய்யப்படுபவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கும்.பள்ளியில் மாநில அளவில் முதலிடம் என்று 10 மாணவர்கள் புகைப்படத்தை வைக்காத பள்ளிகளே கிடையாது.ஆனால் அந்த 10 பேரின் தற்போதைய நிலையை அவர்களிடம் சென்று விசாரித்தால் தெரியும்.
இந்த விளம்பர மோகம் அரசியல்,விழா வீடுகள் போன்றவற்றில் பரவலாக காணப்படுகின்றன.ஆனால் ஒன்று மட்டும் உண்மை
உண்மை இருக்கும் இடத்தில் விளம்பரம் இருக்கிறது அதிகமாக இல்லை.
எங்கெல்லாம் விளம்பரம் அதிகமாக காணப்படுகின்றதோ அது நட்டத்தில் இருக்கிறது என்று பொருள் அது நிறுவனமோ,பொருளோ
பணத்தை நோக்கி மட்டுமே ஓடும் மனிதர்கள் வாழும் இன்றைய காலகட்டத்தில் விளம்பரம்தான் ஒருவரின் வாழ்க்கை திசையை நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவு செய்கிறது.அடுத்தவர் அனுபவத்தைக் கேட்காமல் எது எளிமையாக உள்ளதோ அதை தேர்ந்தெடுங்கள் அதே நேரத்தில் தெளிவாக தேர்ந்தெடுங்கள் .
அதே நேரத்தில் எனக்கு தெரிந்து விளம்பரம் இல்லாமல் இந்தகாலத்தில் எளிமையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.எளிமையுடன் கூடிய தெளிவான விளம்பரம் இருந்தால் மட்டுமே அது நல்லதாகவும் வல்லதாகவும் இருக்க முடியும்.
தொலைக்காட்சியில் தொடர்ந்து விளம்பரம் 10 நிமிடம் பார்த்ததன் விளைவு இந்தப் பதிவு.
நமது வலைத்தளத்திற்கே விளம்பரம் தேவைப்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
ReplyDelete