தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

February 22, 2015

குலசாமி-1

                                                ஒருவன் என்னிடம் வந்து உன் குலசாமி பெயர் என்ன தெரியுமா? என்று என்னிடம் கேட்டான்.நான் தெரியாது என்று கூறினேன்.அதற்கு அவன் தமிழரின் பண்பாடு அழிந்து கொண்டே வருகிறது என்றான்.நான் கூறினேன் தமிழரின் பண்பாடு என்றால் என்ன தெரியுமா?என்றேன் நீ கூறு என்றான்.மானமும் அறிவும் என்றேன்.மேலும் வீரத்தையும் ,காதலையும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தமிழனுக்கு என்றுமே நேருக்கு நேராகப் போரிட்டுத்தான் பழக்கம்.அப்போது மற்றொரு நண்பன் என்னிடம் வந்து உனக்கு மகாபாரதம் கதைப் பற்றி தெரியுமா?என்றான் சொல் என்றேன்.ஒருவனுக்கு வெற்றி என்பது குறுக்கு வழியில் தான் கிடைக்கிறது வீரம் என்பது அவன் நேருக்கு நேர் போரிட்டு வெல்வது என்றான்.
                                             நான் அவனிடம் கூறினேன் பாரி வள்ளல் பற்றி நீ அறிவாயா! என்றேன்.அவனிடம் சென்று யாசித்துக் கேட்டால் ஒரு ஊரையும் உனக்கு தந்து விடுவான் ஆனால் நீ அவனிடம் நேருக்கு நேர் சென்று போர் செய்தல் அரிது என்று புலவர் கபிலர் கூறுவது உண்டு.மானமும் அறிவும் தமிழர்களுக்கு உரியது என்று கூறினேன் அல்லவா அறிவுகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நாம் எப்படி முன்னேறுவது என்று நம் பலத்தை அதிகரித்து கொண்டே செல்வது.மற்றொன்று அடுத்தவர்களை முன்னேறவிடாமல் ஒரு இனத்தை முன்னேற விடாமல் செய்வது  என்று இரண்டு வகை உண்டு.அன்று தமிழன் தனக்கென இருந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்தான் .பின்பு மன்னர் ஆட்சி வந்தது அப்போதும் தமிழ் மன்னர்கள் நேருக்கு நேர் செல்வது ,புறம் காட்டினால் வடக்கிலிருந்து உயிர் துறப்பது,போர் செய்யும் போது அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ,பசு,பெண்டிர்,அந்தணர் என்று நால்வகையினரை அகற்றி விட்டு போர் செய்தான்.தமிழர்களுக்கு நான் கூறிய கெட்ட அறிவு கிடையாது.

                                                ஆனால் தக்கசமயம் பார்த்து கொண்டிருந்த ஆரியர்களுக்கு அடுத்தவர்களை(தமிழர்களை) முன்னேற விடாமல் செய்ய வேண்டும் அவர்கள் முன்னேறினால் நாம் வெற்றிபெற முடியாது என்று அறிந்து வைத்திருந்தனர்.அதற்காக அவர்கள் வகுத்த வர்ணாசரமம் பற்றி நாம் அறிவோம்.தமிழ் இலக்கியங்களில் எந்த ஒரு இடத்திலும் சாதி என்று ஒன்று கிடையவே கிடையாது.முன்பு ஐவகை நிலங்களை வைத்தும் அவர்கள் செய்யும் தொழில்களை வைத்தும் இவர்கள் இந்த நிலத்து மக்கள் என கூறினர் ஆனால் அவர்களுக்குள் பண்டமாற்று இருந்தது.அவர்கள் யாரையும் குறைவாக நினைக்கவில்லை யாரையும் ஒரு நோக்கம் கொண்டு முன்னேறவிடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதையும் செய்யவில்லை.ஆனால் ஆரியர்கள்
கடவுள் எனும் ஒன்றை சொல்லி அவர்கள் கடவுளை அதுவும் ஒன்று இரண்டு கடவுள்கள் இல்லை முப்பத்து முக்கோடி கடவுள்கள் என்னும் கதைகளாக புராண இதிகாசங்களை கூறி மன்னர்களை மதம் மாற்றி மற்ற மதத்தினரை கழுவேற்றி ஆனால் அவர்கள் ஆட்சியில் என்றுமே அமர்ந்ததில்லை தமிழனை அவன் வழியில் ஆட்சி செய்யவிட்டதும் 
இல்லை அன்று முதல் இன்றுவரை.அவர்கள் இடை இடையில் கொண்டு வந்த பழக்க வழக்கத்தினால் திதி கொடுப்பது,காரியம் செய்வது,தாலி கட்டுவது போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் அவர்கள் பிழைப்பதற்காக கொண்டு வந்தது.நம் தமிழர்கள் ஏர் ஓட்டி,மூட்டை தூக்கி ,களை எடுத்து போன்ற உடல் உழைப்பான வேலைகளை செய்து வந்த காலத்தில் அவன் உட்கார்ந்த இடத்தில் சம்பாத்யம் பார்த்தான்.
                                                        ஆரியர்கள் வருவதற்கு முன்பு தமிழ் வழியில் எட்டப்பர்கள் கிடையாது.அந்த எட்டப்பனாவது நேருக்கு நேராக போரிடும் ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தான்.ஆனால் இப்போது வாழும் ஆரியர்களின் எட்டப்பர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.  
                                                    

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out