தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

March 7, 2015

நீதிபதிகள் நியமனம்

 நீதிபதிகள் நியமனம் குறித்து வழக்கறிஞர்கள் போரட்டம் நடத்துவது குறித்து இமயம் டிவியில் ஒளிபரப்ப பட்ட  விவாத அரங்கம் பற்றி

               திமுக சார்பில் திரு.கண்ணதாசன் வழக்கறிஞரும் ,பாமக சார்பில் திரு.கஜேந்திரன் வழக்கறிஞரும் ,சமூக ஆர்வலர் சார்பில் ஆழி செந்தில் நாதனும் ,பிராமணர்கள் சார்பில் எழுத்தாளர் திரு.வாசனும் பங்கேற்றனர்.
  நெறியாளர் ஜீவ சகாப்த்தன் நிகழ்ச்சியை நடத்தினார்.


                             
                            பாமக சார்பில் திரு.கஜேந்திரன் அவர்கள் தமிழ்நாட்டில் 400 ஜாதிகள் இருப்பதாகவும் நாங்கள் எல்லோருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கேட்கவில்லை .பெரும்பான்மை என்று தனது MBC
பிரிவை சார்ந்த சாதியினர் 4 பேர்தான் நீதிபதியாக கடந்த காலங்களில் இருந்ததாக கூறினார்.மேலும் அவர் ஒரு தேர்வின் அடிப்படையில் நீதிபதிகளை நியமித்து அதற்கு அவர்கள் தகுதியில்லை என்றால்   நிராகரியுங்கள் நீங்களாக ஒரு கமிட்டி வைத்து கொண்டு எந்த வித தேர்வும் இல்லாமல் 19 பேரைக் கொண்ட குழுவில் 9 பேரை மட்டும் அனுப்பும் போதுதான் சந்தேகம் எழுவதாகக் கூறினார்.

                         திமுக சார்பில் திரு.கண்ணதாசன் அவர்கள் இட ஒதுக்கீடு வந்த விதம் பற்றியும் ,திராவிடர்கள் பற்றியும்,திராவிடர் அல்லாதோர்(பிராமணர்கள்) நீதிபதிகளாக அதிக அளவில் இருப்பதாகவும் கூறினார்.யாரும் இந்த இந்த சாதிக்கு இவ்வளவு ஒதுக்கீடு நீதிபதிகள் நியமனத்தில் இவ்வளவு ஒதுக்கீடு என்று கேட்கவில்லை பொதுவாக எங்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும் என்று கூறினார்.

                        சமூக ஆர்வலர் திரு.ஆழி செந்தில்நாதன் அவர்கள் கூறும் போது சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் ஆனால் மக்களுக்காகவே சட்டம் என்பதால் அதை திருத்தி அமைப்பதில் தவறில்லை என்றும் ,
அதனால் தான் நமது நாட்டில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் ,வழக்கறிஞர்கள் தான் எல்லாப் போராட்டங்களுக்கும் முன்னோடி கண்டிப்பாக அவர்கள் துறை சம்பத்தப் பட்ட விஷயத்தில் அவர்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள் .சாதரண வேலைகளுக்கு கூட நமது நாட்டில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன ஆனால் எல்லாத்துறைகளையும் தனக்குள் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த
நீதித் துறைக்கு தேர்ந்தெடுக்கும் முறை என்பது தெளிவாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய நிகழ்வாகும் என்று கூறினார்.தகுதியாமல் யாருமே இவ்வளவு தூரம் இந்தப் பதவிக்கு வரமுடியாது அதையும் மீதி வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது பிற்படுத்தப்பட்டவர்களே மிகக்குறைந்த அளவில் தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றபோது ஒரு பெரிய குழப்பம் நிலவுகிறது.
               
                      திரு.வாசன்  அவர்கள் தனக்கே உரிய பிராமணப் பாணியில் முதலில் ஒப்புக்கொள்வது மாதிரி ஒப்புக்கொண்டுவிட்டு ஆனால் வாதாடிக் கொண்டே இருந்தார்.அவர் இந்தப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் கையில் எடுக்கக் கூடாது என்று கூறினார். அதற்கு பதில் அந்தந்த கட்சித் தலைவர்கள் போராட வேண்டும் என்று கூறினார்.திரு.கண்ணதாசன் அவர்கள் பிராமணர் ,பிராமணர் அல்லாதோர் என்று கூறியபோது ஒவ்வொரு சாதி மாதிரி பிராமணியமும் ஒன்று .அதை நீங்கள் பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதோர் என்று பேசாதீர்கள் என்று ஒரு முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார்.ஆனால் வழக்கறிஞர் கண்ணதாசன் அவர்கள் அழகாக பிராமணர்கள் இருக்கும் சதவிகிதம்(3%) பற்றியும் அவர்கள் பதவியில் இருக்கும் சதவிகிதம்(97%) பற்றியும் அழகாக தெரிவித்தார்.அதற்கு வாசன் அன்று கலெக்டர் என்றால் பிராமணர்தான்.நாளைக்கு நீங்கள் தேடினாலும் வக்கீல்கள் படிக்க பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே பேசிக் கொண்டிருந்தார்.ஆனால் பேசும் போது அவர் இப்போது இப்படி இட ஒதுக்கீடு கேப்பீர்கள் பின்பு இத்தனை சாதிக்கும் தனித்தனியாக கேட்பீர்கள் .பின்பு அந்த சாதிக்கு குடுக்கக் கூடாது என்று மற்றொரு சாதியினரும்போராட்டம் நடத்துவீர்கள் என்று கூறினார்.பின்பு நீதிபதிக்கு யார் தகுதியானவர்களோ அதை தேர்ந்தெடுக்கிறோம் என்று  மலுப்பிக்கொண்டார்.

                                     இவர்கள் விவாதித்ததை பார்த்தபோது ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது பிராமணர்களுக்கு தமிழர்கள் அவர்களுக்குள் இந்த சாதி அந்த சாதி என அடித்துக் கொண்டிருக்கும் வரை பிராமணர்கள்தான் மேலிருப்பார்கள்.ஏன் என்றால் சாதி என்ற ஒன்றே பிராமணர்களால் பிராமணர்கள் மேலோங்கி இருப்பதற்காக தமிழர்கள் ஒற்றுமையைக் குலைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பிராமணர்களை எதிர்க்ககூடாது என்பதற்காக தமிழனை  வரணாசரம அடுக்கில் தமிழனுக்கு கீழ் உள்ளவனை மட்டும் மேல் வர விடாமல் பார்த்துக் கொள் என்று பழக்கப்படுத்திவிட்டான் ஆனால் தமிழன் நம்மை இவ்வாறு சாதியைக்கொண்டு பிரித்தது யார் என்று ஒரு நிமிடம் யோசித்தால் இதற்கு விடை கிடைத்து விடும்.எது தேவை என்பதும் கிடைத்துவிடும் 

சாதி என்பது இன்றைக்கு முதியவர்கள் மத்தியில் மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியிலும் ஊடுருவதைக் காண்கிறோம் அவர்களுக்கு இந்த சாதியை ஏற்படுத்தியது யார் என்பதை விளக்க வேண்டும்.ஆனால் இன்றைக்கு சாதி பெயரில் இலாபம் சம்பாதிப்பவர்கள் எவ்வளவு பேர்
காரணம் அவர்களுக்கு ஒரு கூட்டம் கிடைக்கிறது, பதவி கிடைக்கிறது ,பணம் கிடைக்கிறது.எதை(சாதியை) நாம் குறிக்கோளாகக் கொண்டு ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவே ஒரு சிலருக்கு 
ஒளியாய் ஒளிர்கிறது .ஆனால் மற்றொரு புறம் பார்த்தால் சாதி வாரி கணக்கெடுப்பு என்று ஒன்று நடந்தால்தான் சமுதாயத்தில் சேர வேண்டியது பின்தங்கி உள்ளவர்களுக்கு சென்று சேரும்.
என்னைக்கேட்டால் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரின் பின்னால் ஒரு சாதி இருக்கிறது அதை ஒற்றுமையாய் இருக்க நினைக்கும் யாரும் வெளிக்காட்ட மாட்டார்கள் யார் தனக்கென ஒரு கூட்டம் வேண்டும்,பதவி வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே  பிராமணர்களை ஆதரிப்பதாக அர்த்தம்.

என்னைப் பொறுத்தவரை சாதி என்பது பேதி போன்றது அன்றைய காலங்களில் வருடம் ஒருமுறை பேதி மாத்திரை குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள் ஆனால் அவற்றையே குழந்தை தினமும் ஒவ்வொரு வேலையும்  விரும்பி சாப்பிட்டால் அதன் கதி.தமிழர்களை எல்லாம் பிராமணர்கள் தினமும் பேதி மாத்திரை சாப்பிடும் குழந்தை போன்று ஆக்கியுள்ளனர் பிராமணர்கள்.சாதி என்பது இட ஒதுக்கீடுகளில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தமிழர்களின் மனதில் மற்ற சாதியினரை பற்றிய காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது.
தமிழர்கள் இந்த சாதி அடிப்படையை யார் உருவாக்கினார்களோ அவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out