தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

March 28, 2015

எனது SLP(SERVICE LEARNING PROGRAMME)அனுபவம்


                           மதுரை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி உதவுவதற்காக nss மாதிரி இந்த வருடம்  SLP(SERVICE LEARNING PROGRAMME) ஆரம்பித்துள்ளனர்.அதில் நானும் ஒருவன் .



                        நாங்கள் ஒரு குழுவாக அந்தப் பள்ளிக்குச் சென்றோம் டிசம்பர் 9 2014 முதல் நாள் கணக்கு வாத்தியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை கவனித்து கொண்டிருந்தேன்.அவர் நல்லா படிக்காத மாணவர்கள் என 5 மாணவர்களை தரையில் உட்கார வைத்திருந்தார்.மேலும் அவர் graph பற்றி கணிதத்தில் நடத்திக் கொண்டிருந்தார்.நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் எழுப்பிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.அவர்கள் பதில் கூறி கொண்டிருந்தனர்.
                                    ஒரு மாணவனை "நீ மாடு மேய்க்கத்தான் லாய்க்" என்று கூறினார்.அந்த வகுப்பில் ஒரு மாணவன் (Mentally challenged people)ஆக இருந்தான் அவனை வாத்தியார் உங்க அப்பாவை கூட்டி வந்து உனக்கென்று தனியாக பள்ளி உள்ளது அதில் போய் சேர்ந்து விடு என்றார்.மணி அடித்தவுடன் கிளம்பி விட்டார்.
                                 எனக்கு பாடம் எடுக்க ஒதுக்கப்பட்ட நேரம் வந்தது.(என் மனதில் அழுகையை உரைய வைத்துக் கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தேன் காரணம் நானும் மூளைக்கோளாறு(fits) உள்ள மாணவன் எனக்கு அந்த மாணவனின் மனநிலைப் புரியும்.காரணம் நான் வாழ்க்கையில் அனுபவித்த வலிகள் ஒரு மாற்றுத்திறனாளி  மாணவனின் பிரச்சனை பார்க்கும் ஒருவருக்கு வெளிப்படையாக தெரிந்துவிடும்.ஆனால் மூளை சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் வெளியில் பார்ப்பவர்களுக்குப் புரியாது காரணம் அவர்களுக்கு அந்த நோயைப் பற்றி விழிப்புணர்வு இல்லாதது).

                     என் மனதுக்குள் என்முதல் வகுப்பு அந்த மாணவர்களுக்குக் கண்டிப்பாக ஒரு உந்துதல் அளிக்கக் கூடிய வகுப்பாய் இருக்க வேண்டும்.அதே நேரத்தில் பாடமும் நடத்த வேண்டும் என முடிவு செய்து வகுப்பைத் தொடங்கினேன்
                                        வித்தியாசமாக வகுப்பைத் தொடங்கினேன்.கணக்கு வாத்தியார் முதல் பத்து Rank எடுத்த மாணவர்களை கை தூக்க சொன்னார்.நான் கடைசி பத்து Rank எடுத்த மாணவர்களை கை தூக்க சொன்னேன்.அவர்கள் முதலில் தயங்கினார்கள் பின்பு கை தூக்கினார்கள் அவர்களை எழுப்பி அவர்களிடம் படிப்பதை தவிர வேறு உங்களுக்கு என்ன தெரியும் எனக் கேட்டேன் யாரும் பதில் சொல்லவில்லை பின்பு ஒருவன் சொன்னான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று மற்றொருவன் ஓவியம் வரைவேன் என்றான்,ம்ற்றொரு மாணவி பேச்சுப்போட்டியில் பங்கு பெறுவேன் என்றார்கள்.பின்பு அவர்களிடம் கூறினேன் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்துக் கொண்டிருக்கிறது.படிப்பு என்பது ஒரு visiting card மாதிரி எப்படி ஒரு இடத்துக்குச் செல்ல visiting card உதவுகிறதோ அதே மாதிரி படிப்பு என்பது உங்கள் திறமை இருக்கும் துறைக்குக் கொண்டு செல்லும் கருவி அவ்வளவுதான்.அந்த காலத்தில் 8ம் வகுப்பு படித்தால் வேலை ஆனால் இப்போது குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.ஆதலால் நீங்கள் இப்போது செய்ய வேண்டிய வேலை படிக்க வேண்டும் .
                                       நீங்கள் யாரும் அரசுப் பள்ளியில் படிக்கிறோமே என்று வருத்தப்படத் தேவையில்லை காரணம் திரு.அப்துல்கலாம்(முன்னாள் குடியரசு தலைவர்),திரு.வெ.இரையன்பு IAS,திரு.சகாயம் IAS அவர்கள் என நேர்மையாக உள்ள பெரிய நிலையில் உள்ள அதிகாரிகள் எல்லாருமே தமிழ் மீடியம்(அரசுப் பள்ளியில்) படித்தவர்கள்.எனவே நீங்களும் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறி முடித்து வகுப்பைத் தொடங்கினேன் வகுப்பு முழுவதும் எனது பார்வையில் இருந்தது.அவர்களுக்கு ஆங்கிலத்தில் கஷ்டம் என்றனர்.tense நடத்தினேன் உதாரணமாக (HE WRITES-அவன் எழுதுகிறான்)
                               இவ்வாறு 12 tense நடத்தினேன்.நடத்தி முடித்து விட்டு கிளம்பிய போது அந்த மாணவர்கள் எழுந்து நன்றி அண்ணா என முக மலர்ச்சியுடன் கூறிய போது ஒரு மிகப் பெரிய திருப்தி ஏற்பட்டது அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

எனக்கு இவ்வாறு வாய்ப்பளித்த அமெரிக்கன்  கல்லூரிக்கும்,slp குழுவுக்கும்,எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த 
ஆசிரியர் Bakrudeen சார்(முன்னாள் AEO) அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.     

2 comments:

  1. இவ்வாறு 12 tense நடத்தினேன்.நடத்தி முடித்து விட்டு கிளம்பிய போது அந்த மாணவர்கள் எழுந்து நன்றி அண்ணா என முக மலர்ச்சியுடன் கூறிய போது ஒரு மிகப் பெரிய திருப்தி ஏற்பட்டது அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    நல்ல சேவை தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out