பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது மேகங்கள் இருண்டு காரிருளாகக் காட்சி அளிக்க மழைத் தூரல் தலையில் வந்து தட்டியது என்னை வெகுநேரமாக காத்திருந்த நான் அரசுப் பேருந்து ஏதுவும் வரததால் தனியார் சிற்றுந்தில் ஏற வேண்டிய கட்டாயம்.சன்னலோர சீட்டிற்கு அடுத்த சீட்டில் அமர்ந்தேன்.அப்போது இரண்டு காவல் வேன்கள் வந்து இறங்கின "என்ன ? என்ன?"என்று பேருந்தில் இருந்த அனைவரும் பார்க்க ஒரு மாணவர் அமைப்பு ஒன்று திரண்டு மத்தியரசு அலுவலகங்களான தொலைத்தொடர்பு அலுவலகத்தையும்,அஞ்சல் அலுவலகத்தையும் முற்றுகை இட்டு கோஷம் இட்டனர்.
"மத்திய அரசே மத்திய அரசே சர்வதேச யோகா திணிப்பு தினத்தைக் கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மோடி அரசைக் கண்டிக்கிறோம்"என்று மழை வருவது போல் இருந்ததும் சாதரண மக்கள் அனைவரும் பேருந்தில் ஏறி,மற்றவர்கள் கடை ஓரத்தில் ஒதுங்கியும் இருக்கும் போது இந்தக் குரல் அனைவரையும் அவர்களின் பக்கம் பார்க்க வைத்தது ,அவர்களின் எதிர்ப்பையும் தெரிய வைத்தது.