தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 18, 2016

இளைஞர்கள் கையில்...

                            பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது மேகங்கள் இருண்டு காரிருளாகக் காட்சி அளிக்க மழைத் தூரல் தலையில் வந்து தட்டியது என்னை வெகுநேரமாக காத்திருந்த நான் அரசுப் பேருந்து ஏதுவும் வரததால் தனியார் சிற்றுந்தில் ஏற வேண்டிய கட்டாயம்.சன்னலோர சீட்டிற்கு அடுத்த சீட்டில் அமர்ந்தேன்.அப்போது இரண்டு காவல் வேன்கள் வந்து இறங்கின "என்ன ? என்ன?"என்று பேருந்தில் இருந்த அனைவரும் பார்க்க ஒரு மாணவர் அமைப்பு ஒன்று திரண்டு மத்தியரசு அலுவலகங்களான தொலைத்தொடர்பு அலுவலகத்தையும்,அஞ்சல் அலுவலகத்தையும் முற்றுகை இட்டு கோஷம் இட்டனர்.
                                            "மத்திய அரசே மத்திய அரசே சர்வதேச யோகா திணிப்பு தினத்தைக் கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மோடி அரசைக் கண்டிக்கிறோம்"என்று மழை வருவது போல் இருந்ததும் சாதரண மக்கள் அனைவரும் பேருந்தில் ஏறி,மற்றவர்கள் கடை ஓரத்தில் ஒதுங்கியும் இருக்கும் போது இந்தக் குரல் அனைவரையும் அவர்களின் பக்கம் பார்க்க வைத்தது ,அவர்களின் எதிர்ப்பையும் தெரிய வைத்தது.



                    பேருந்தில் இருந்த நான் மறுபுறம் சன்னலோரத்தில் பார்த்தால் 10 மாணவர்கள் சேர்ந்து ஒரு டீக்கடையில் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.பொது இடங்களில் புகைப் பிடிக்கக் கூடாது என்று உயர்நீதி மன்றம் வலியுறுத்தியும்,மதுரையில் ஏகப்பட்ட வழக்குகள் பொது இடத்தில் புகைப் பிடிப்பதாக போடப்பட்டும் இது தொடர்கின்றது."திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது".அவர்களுக்காக அந்த எண்ணம்(புகைப்பிடிக்கக் கூடாது) வர வேண்டும்.அதற்கு அரசு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தி அவர்களை அதில் இருந்து மீள தீவிரமாக வழிவகை செய்ய வேண்டும் என்று மனதினில் எண்ணிக் கொண்டு  புகையிலை வாசம் வந்ததால் முன்பக்கம் சீட்டில் உட்கார்ந்தேன் அங்கு ஒரு மாணவர்கள் கூட்டம் conjuring-2 படத்துக்குச் செல்ல
வேண்டும்.இன்றைக்கு மழை வந்தாலும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டிருந்தது.
                    மற்றொரு பக்கம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஒரு மாணவர்கள் கூட்டம் சென்று கொண்டிருந்தது.
மற்றொரு மாணவர்கள் கூட்டம் (blockers)பாலினக் கவர்ச்சியால் பெண்கள் பின்னாலேயே சென்றுக் கொண்டிருந்தது.மற்றொரு மாணவர்கள் கூட்டம் தான் உண்டு தன் வேலையுண்டு (Avoidance behavior)என்று படிப்பைப் பற்றியே எப்பொழுதும் நமக்குப் புரியாத அவர்களுடையக் கலைச்சொற்களில் பேசிக் கொண்டிருந்தது.இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு மாணவர்கள் கூட்டம் பேசவில்லை அவர்களுக்குள் ஆனால் அவர்களுடைய கைபேசியில் உள்ள விளையாட்டு அவர்களை ஆட்டி வைக்கின்றது.
                    நான் இங்கு குறிப்பிட்ட எல்லா மாணவர்கள் கூட்டத்திலும் 10ல் இருந்து 30 மாணவர்கள் இருப்பார்கள்.
பொதுவாக பலரும் குறிப்பிடுவதுண்டு இன்றைய இளைஞர்கள் எல்லாம் என்ன பணறாங்க "அன்னைக்கு நாங்கள் எல்லாம் எப்படி ஒற்றுமையாக போராட்டத்தில் தீவிரமாக இருந்தோம்"இப்படி சொல்பவர்கள் ,அவர்களுடைய அனுபத்தை பகிர்ந்துக் கொள்ளும் முதியவர்கள் எல்லாருக்கும் இவ்வளவு தொழில்நுட்ப வசதி அவர்களைப் பிரித்து வைக்கவில்லை.எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிதான் எதுவும் திட்டமிட வேண்டும்(அவர்கள் சமுதாயத்தோடு ஒன்றியிருந்தனர் மொழிப்பற்று,சமூக நீதி அவர்களுடையே அவர்களை வழி நடத்தியது).ஆனால் இன்று தொழில் நுட்ப வசதி ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒன்று திரட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் ,பலரும் அதைத் தன் சுய சிற்றின்பத்திற்காகவே பயன்படுத்துகின்றனர்.மாணவர்கள் சிதறி விடுகின்றனர். அவர்களுக்கென்று ஒரு பாதை இலட்சிய நோக்கில் பல இளைஞர்கள் முன்னேறி சென்றாலும், சமுதாயத்தைப் பற்றிய அக்கரை ஒரு சில இளைஞர்களுக்கே இருக்கிறது.அந்த ஒரு சில இளைஞர்கள் பலராக வேண்டும் என்று விரும்புகின்றேன்.
                                                                                    -இப்படிக்கு ஒரு  இளைஞன்

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out