தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

May 6, 2016

நவீன ஆயுதம்

                                                 மாடியில் துணி காயப்போட சென்றபோது ஒரு பக்கம் புறாக்கள் மல்லி காய வைத்ததை தின்று கொண்டிருந்தது.குயில் ஓசை எழுப்ப, வானில் பறவைகள் வரிசையாக பறந்து சென்றன .மற்றொரு பக்கம் சர் சரென மோட்டார் வண்டியில் வளைந்து வளைந்து செல்லும் ஒரு மனிதன்.மக்கள் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர் தினமும் எதை நோக்கி ஓடுகிறோம் தெரியவில்லை.எதற்காக ஓடுகிறோம் புரியவில்லை.ஏன் ஓட வேண்டும் சிந்திக்க நேரமில்லை.எல்லாம் ஒரு புள்ளியில் இணைகின்றது பணம்,அத்தியாவசியப் பொருள்கள்.

இந்தப் பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு!நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவிட்டாலும் தெளிவான ஒரு பதிவு!நீளமான அளவுள்ள பதிவுதான்
என்று நம்புகிறேன்.பொறுமையுடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                   
                                                          காரல் மார்க்ஸ் போராட்டங்களை உருவாக்க போராடிய போது அவருக்கும் அவரது மனைவிக்கும் சோறு கிடைக்கவில்லை வறுமையில் வாடியபோதும் தொழிலாளர்களுக்காக ஒரு சங்கம் வேண்டும் என்று போராடியதன் விளைவு இன்று ஒவ்வொரு பணியிடங்களிலும் தொழிற்சங்கங்கள்.
                                                      பெரியார் சாதியை ஒழிக்க போராடிய போது எவ்வளவு மிரட்டல்கள்.எவ்வளவு அடிகள்,எவ்வளவு நாள் சிறைவாசம் தனது 95 வயது வரை சாதியை ஒழிக்க போராடியவர் .விளைவு
இட ஒதுக்கீடு,பெண்களுக்கு சொத்துரிமை,பொருளாதாரத்தில் முன்னேற்றம்
போன்ற எண்ணற்ற நன்மைகள்.

                 இந்த இரண்டு தலைவர்களின் கொள்கைகள் பொதுவுடமை-மார்க்ஸ் .பொதுவுடமை மற்றும் பொது உரிமை-தந்தைப் பெரியார்.
                                              
                               
நீ கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த செயல்களை செய்ய மாட்டேன்  என்ற உறுதி இருந்தது மக்களிடம் அன்று .அதனால்தான் தலைவர்கள் உருவானார்கள்.
                   

                                             கம்யுனிச சித்தாந்தைத் பொருத்த மட்டும் எல்லா மக்களுக்கும் சம அளவிலான பொருளாதாரம் வேண்டும்.இது ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அன்றைய காலகட்டங்களில் சரிபட்டு வந்தது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர் காரணம், நோக்கம் சம அளவிலான பொருளாதாரம் .இன்று இந்தியாவில் பொருளாதாரம் சம அளவில் வந்தால் பொது உரிமை கிடைத்துவிடும் என்று சிலர் சொல்வதுண்டு ஆனால் அவர்கள் புரட்சி,கம்யுனிச சித்தாந்தை விட்டு ஒரு சாதரண மனிதனாக நம்மை சுற்றி நிகழும் சமுதாய நிகழ்வுகளை பார்த்தால் தெரியும் எத்தனை படித்த பட்டதாரி பொருளாதார  வசதி உள்ள இளைஞர்கள் ஆணவ கொலை செய்யபடுகிறார்கள் என்று,எனவே பொருளாதாரம் கிடைத்தால் பொது உரிமை கிடைத்துவிடும் என்பது உண்மை அல்ல.

            பொது உடமை,பொது உரிமை இரண்டும் வேண்டும் என்றார் பெரியார்.  பொது உரிமை கிடைத்தால் பொது உடமை வந்து விடும் என்பதுதான் உண்மை.அதன் விளைவுதான் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்ற நடுத்தர வர்க்க மக்கள் .
                         
                        இன்று இங்கு மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றால் காரணம் அன்றைய  ரஷ்ய நாடு மாதிரி பொதுவான நோக்கம் அல்ல .பணத்திற்கு மனிதன் அடிமையாகி விட்டான்.அதனால்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் பணத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றான் இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.வள்ளுவரே
                ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்கிறார்.
  
                           ஆனால் ரஷ்ய நாடு மாதிரி இங்கு வறுமை ஏற்பட்டதிற்கு அதிகார வர்க்கம் ம்ட்டுமே காரணம் அல்ல இங்கு அதிகார வர்க்கத்திற்கு துணைபோகும் ஆதிக்க வர்க்கமும் காரணம் .ஆதிக்க வர்க்கத்தில் இருப்பவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3% பங்கு .அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10-20 பேர் தான்.

                  

10-20 பேர் இங்கு வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு வெளி நாட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பதற்கு யார் காரணம் ?ஆதிக்க வர்க்கம்தான்.ஆதிக்க வர்க்கம் தான் பெரும்பாலான துறைகளில் மேல் நிலைப் பொறுப்புகளை கைப்பற்றிக் கொண்டனர் .அதிகார வர்க்கமும் ,ஆதிக்க வர்க்கமும் சேர்ந்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது.
ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து தனிமனிதன் போராட ஆரம்பித்து விடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் கண்டுபிடித்தது தான் சாதி,மதம்,கடவுள்.இவற்றை சொல்லி குலத்தொழில் மூலமாக நமது க்டந்த  தலைமுறைகளை படிப்பறிவில்லாமல் செய்துவிட்டு இன்றும் மேல் நிலை பொறுப்புகளில் இருந்துகொண்டு துணை போவது ஆதிக்க வர்க்கமே.!

                   இப்போது நவீன ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றது அதுதான் பள்ளிக் கூடங்களில் இருந்தே சுயநலமாக நீ அடுத்தவனை விட பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் அதற்காக அவனை விட நன்றாக படிக்க வேண்டும் .மற்ற எதை பற்றியும் சிந்திக்காதே ச்முதாயத்தில் ஆயிரம் நடக்கும் உனக்கு நீ மதிப்பெண் எடுக்க வேண்டும் கட் ஆஃப் எடுக்க வேண்டும்.எதைப் பற்றியும் கவலைப்படாமல் வளர்ந்து உன்வாழ்க்கையைப் பார்.
            
  தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு
 தானுண்டென்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளங்கொண்டோன்.
                                                       -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


                    

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out