தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

January 31, 2011

மகர ஜோதியின் மர்மம்


அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை அம்பலப் படுத்துகிறோம்.
மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.

January 29, 2011

“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்


“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்

பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

January 25, 2011

மகரஜோதி என்னும் பொய் ஜோதி



மகரஜோதி என்னும் பொய் ஜோதி




எத்தனை முறை
சொன்னாலும் ஏன்
நம்பமறுக்கிறீர்கள் !


இல்லாத ஒன்றை
விடாப்பிடியாய்
நம்பித்தொலைக்கிறீர்கள்!

அருமையான உயிர்கள்
நூற்றிஆறு
அய்யகோ என
கதறி அழ
கதறிஅழ
மிதிபட்டும் அடிபட்டும்
பறிபோயிருக்கின்றன !

நாற்பது நாட்கள்
விரதமிருந்து
அய்யப்பா ! அய்யப்பா!
என அய்யப்பனைத்
தேடிப்போனவர்கள்
சாகும்நேரத்தில்
அழைக்காமலா
இருந்திருப்பார்கள்
அய்யப்பா!அய்யப்பா என்று!

சாகும்நேரத்தில் அழைத்த
பக்தர்களைக் காப்பாற்றாமல்
எங்கே ------ போனான்
உங்கள் அய்யப்பன் என்றால்
முறைக்கிறீர்கள் என்னை !

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை என்று
சொன்ன களவாணிப் பயல்களை
நம்பி கால் நடையாய்ப்
போனீர்களே !

மோசடி செய்து
பணம் பறிக்கவே
கேரளஅரசும் தேவஸ்தானமும்
இணைந்து நடத்தும்
மகரஜோதி எனும்
பொய்ஜோதியை
நம்பிப் போய்
உயிரைத் தொலைத்தீர்களே
எமது உழைக்கும் மக்களே!

பட்டினிபோடு பாம்பை
வரும் பக்தர்களிடம்
சீறவிடு பாம்பை !
பாம்பைக் கடவுள் என்று சொல்!
உண்டியல் நிரம்பும் உனக்கு
என்றானாம் அரசனிடம்
சாணக்கியன் அந்நாளில் !

மின்வாரியத்து ஆளைப் பிடித்து
பொன்னம்பல மேட்டின் மேலே
தீபத்தை ஏற்று எனச்சொல்லி
கடவுள் ஏற்றும் ஜோதி
என்று பொய் பரப்பி
உண்டியலை நிரப்புகிறது
கேரள அரசாங்கம் இந்நாளில்!

உழைக்கும் மக்களின்
அரசாங்கம் பொய் சொல்லி
மக்களைக்கொன்று குவிக்குமா!
இனியாவது உண்மையைச்
சொல்லித் தொலைக்குமா?
நம்பிக்கை எனும் பெயரில்
ஓரிடத்தில் மொத்தமாய்க்
குவியும் மந்தை உணருமா!

- -----------------------------------பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.
நேரு அவர்கள் எழுதிய கவிதை

January 24, 2011

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !



இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

January 14, 2011

கடவுளை நம்பும் முட்டாள்களே


கடவுளை நம்பும் முட்டாள்களே!
கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

படித்த முட்டாளே

படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே!
பல்கலைகழகத்தில்…. பட்டம் பெற்ற படித்த முட்டாளே!
படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற!

இறைவனையெண்ணி எங்கித் தவிக்கிற!

உடம்பில் சாம்பல எடுத்துப்பூசுற!
சிற்பத்தையெல்லாம் தெய்வமென்கிற!

திறமையை மறந்து மடமையில் முழ்கி
கற்பனைக் கடலில் செத்துமடியிற (படித்த முட்டாளே)

இறைவன் என்பவன் எங்கே இருக்கிறான்?

கடவுளை எவன் தான் கண்டு இருக்கிறான்?
உழைக்கமலலேயே ஈட்ட நினைக்கிற -பாடம்
படிக்காமலேப் பாஸ் பன்னப்பார்க்கிற !
பணம் பதவியையும் தேட நினைக்கிற !
கடவுளை வேண்டித்தினம் விரதமிருக்கின்ற (படித்த முட்டாளே)

படிபபிற்குப் பதவியை எட்டிப்பிடிக்கிற !
திறமைக்குப் பரிசைக் கொட்டிக் குவிக்கிற !
உழைப்பையும் அதிகமாய்க் கூட்கிக் காட்டுற !
கிடைத்திட்ட வேற்றியை கண்டு மகிழற
நிலவையும் கூட எட்டிப் பிடிக்கிற !
தன் திறமையை மறந்து இறைமைய நாடும் (படித்த முட்டாளே)

உடலையே அறுத்து உயிரைக் காக்கிற

கருவியை இயக்கியே வானில் பறக்கிற
கடலில் நீந்தியே மறுகரையெறி நிக்கிற
நாட்டையேத் தனதாக்கி ஆட்சியைப்பிடிக்கிற
வல்லமை பல பெற்று பெரும் பணியாற்றினும்
தன்மையே உணரமல் மாய இறை நம்பும் (படித்த முட்டாளே)

நீ இந்து என்றால் சொல் சம்மதமா


நீ இந்து என்றால் சொல் சம்மதமா
சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !
கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !
தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !
ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !
தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

தாய்மொழிக் கல்வி


தாய்மொழிக் கல்வி
மொழி
கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக உள்ளது. இருவேறு மனிதர்களுக்கிடையேயான எண்ணப்பகிர்வுக்கு ஊடகமாக மொழியானது உருவாக்கப்பட்டு,வடிவமைக்கப்பட்டு,வழிநடத்தப்படுகிறது.
அறிவியல் கண்ணோடு உட்நோக்கினால்,சிந்தனை என்பது மொழியாலே அமைந்திருப்பதை நாம் அறிய முடியும். தொடர்புக்கு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும் மொழி தேவையென்பதால்,மனிதன் சிந்திப்பதற்கு முன்னரே மொழி உருவானதா என்கிற வினாவும் எழுகிறது.ஆய்ந்துட் நோக்கினால்,ஒரு கருதுகோல் புலப்படும்.
மொழியானது ஒரு வித ‘ஒலி’ அல்லது ‘சைகையே’. ஆரம்பகாலத்தில், வரிவடிவம் பெறாத ஒலியாலே குறிப்புகளை கொண்டு பின்னர்,ஒலிகளுக்கான அடையாளமாக வரிவடிவம் ஏற்படுத்தி,அதனை எல்லாரும் ஏற்று,பழகி,பொதுவான பயன்பாட்டுக்கு வருவதற்கே மிகநீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதன் பின்னரே,தொல்காப்பியர் போன்றோர் இலக்கண நூல்களை அமைத்து,மொழியை வழி நடத்தியிருக்கலாம். அந்தக்கோட்பாடுகளைக் கொண்டு, இன்றுவரை மொழியானது ஒழுங்குமுறைகளோடு பேணிக்காத்து வரப்படுகிறது.
இக்காத்தல் பணி யாருடையது?
மொழியை பயன்படுத்தும் பயனாளரே மொழிக்காத்தலுக்கு பொறுப்பாகிறார்.
தாய்மொழி
உலகமயமாக்க பணிகளில் தீவிரமடைந்திருக்கும் உலகநாடுகளில் பெருநாடுகள் தத்தம் ஆதிக்க வலைக்குள் உலகத்தை அடக்க நினைத்து,முன்னர் அரசியலாதிக்கம் புரிந்து, பின்னர் மொழியாதிக்கத்திற்கு படையெடுத்திருக்கின்றனர்.
இப்படையெடுப்பில்,அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் போர்க்கருவி புரிதலுக்குண்டான,எல்லா தகுதிகள் உள்ளடங்கிய,எதையும் எடுத்தியம்பக்கூடிய,தரமான மொழியே தம்மொழியெனவும்,வாழ்தலுக்குரிய மொழி தம்மொழியெனவும் மறைமுக பரப்புரைகளோடு செயல்படக்கூடியதாகும்.
மொழியால் இயலமுடியாதது என்று ஏதேனும் இருக்குமேயானால்,உயர்தனிசெம்மொழியாம் தமிழ்மொழி இன்றுவரை நீடித்திருக்கமுடியாது. மொழியின் வாழ்வு அதன் பயன்பாட்டிலும்,பயிற்றுவித்தலிலும் தான் உள்ளது. மொழியை காக்க வேண்டிய நாம் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் பயன்படாத மொழியென புறந்தள்ளுதல் நடப்புப்போக்காக உள்ளது. இக்கருதுகோல் நம்முள்,நம் சிந்தனையில் ஏற்படக்காரணம் பயிற்றுவித்தலின் பிழையே எனலாம்.
தாய்மொழியெனப்படுவது பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்கக்கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.ஆக, தாய்மொழி என்பது சிந்தனைமொழியாகும். தாய்மொழிவழிக்கல்வியானது,சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி.
தாய்மொழிவழிக்கல்வி
சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றக் கல்வி சிந்தனையைக் கூட்டுகிறது.நுணுக்கங்களையும்,அறிவியல் படைப்புகளையும் உருவாக்க தயார்படுத்துகிறது.
பட்டறிவாக , ஆதிக்கம் செலுத்தும் மொழியாக கருதப்படும் ஆங்கிலமொழியின் வளர்ச்சியின் காரணம், தம்மொழியிலேயே சிந்தித்து, தம்மொழியிலேயே அறிவியல் சிந்தனைகளை பதிந்து பரப்புவதனால்,பிறமொழிகள் மீதான மதிப்பு ஆங்கிலத்திற்கு ஈடிணையற்றது என்றும், நம் தாய்மொழி வாழ்க்கைக்குதவாததென்றும் கருதக்கூடியளவில் நம்மிளைய சமுகத்தின் மனங்களில் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த மனமாற்றத்தை,நாம் வெளிக்காரணிகளால் ஒருபுறம் பெற்றாலும், நம் கல்வி நிலையங்களாலும் ஏற்படுத்தி வருகிறோம்.
முதலில் கல்வியானது,
கற்றலை முதன்மைப்படுத்தியதா,கற்பித்தலை முதன்மைப்படுத்தியதா,
கருத்துருக்களை முதன்மைப்படுத்தியதா,ஊடகத்தை (பயிற்று மொழி) முதன்மைப்படுத்தியதா,
அறிதலை முதன்மைப்படுத்தியதா,வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தியதா
என்பதை சிந்திக்கவேண்டும்.
கல்வியில் கருத்துருக்களை அறிந்துக்கொள்ள,கற்றலை ஊக்கப்படுத்தவே முதன்மை குறிக்கோளாய் அமைய வேண்டும்.இக்கற்றல்முறை தாய்மொழியில் அமைந்தால் மட்டுமே முழுமைப்பெறும்.அதாவது,சிந்தனைமொழியில் கற்றலமைதல் வேண்டும்.ஆனால், சிந்தனைமொழியொன்றாகவும்,கற்றல்மொழியொன்றாகவும் இருக்குமெனில் கல்வியின் குறிக்கோளான ‘அறிதலை’ எவ்வாறு அடைய முடியும்?
கற்றல் மொழியானது கற்பித்தல் மொழியிலேயே அமையுமென்பதால் ‘கற்றலில் தாய்மொழி’ என்பதுப்போல் ‘கற்பித்தலில் தாய்மொழி’யை முதலில் வலியுறுத்தப்படவேண்டும்.
இங்கு கற்பித்தலை இருவழியில் குறிப்பிடலாம்.
அவை,நூல் வழி கற்பித்தல் , நூலறிவுடையோர் வழி கற்பித்தல்.
தமிழ்மொழியில் பலத்துறை சார்ந்த நூல்கள் கிடைப்பது அரிதாகவேயுள்ளது.அப்படி இருந்தாலும், அதன் மீதானப் பார்வை தாழ்ந்தேயுள்ளது. இந்த தாழ்வுநிலைப்போக்க, நூலறிவுடையோர் நூலையியற்றவும் ,படிக்கவும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இத்தகைய மாற்றங்களல்லாமல் தமிழ்மொழிவழிக் கல்வியை முழுமைப்படுத்துவது எளிதன்று.
தாய்மொழிவழிக்கல்வியின் தேவை
வளர்ந்துவரும் அறிவியலும் ,தொழில்நுட்பமும் மக்கள் தேவைகளை நிறைவேற்றவே செயல்படுகின்றன என்பது அடிப்படையுண்மை.ஆனால்,மக்களுக்காகத்தான் அறிவியலும், தொழில்நுட்பமும் எனும்போது, அதைப்பற்றி சிந்திக்கவும், ஆராயவும், கருத்துப் பறிமாற்றத்துக்குமான தேவைகளுக்கு மக்கள் மொழியிலே அவை இருக்க வேண்டுமே தவிர, கண்டுப்பிடிப்புகளின் மொழிகளிலிலேயே ,கண்டுப்பிடிப்பாளர்களின் மொழிகளிலிலேயே அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால், பெரும்பான்மையான கண்டுப்பிடிப்புகள் வட்டார மொழிகளில் அமைக்கப்படவில்லை.
சரி. தாய்மொழிவழிக் கல்வி இந்நிலையை எங்ஙனம் மாற்றும் ?
பிறமொழி வழி க் கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆனால்,பிற மொழிக் கல்வியினால் அம்மொழியறிந்து பின்னர்,அம்மொழியில் அறிவு பெருக்குதல் என்பது கால விரயம்.ஆகையால், ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கிலமொழி வழியறிவியலறிந்து அறிவுப் பெறுவதைவிட, கருவறையிலிருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து,இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழி வழி அறிவியலறிவது முழுமையான , பல புதுமைகளை படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.
இன்று, அறிவுத்துறைகளில் மிளிரும் வளர்ந்த நாடுகளில் கல்வியானது தத்தம் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே முன்னிலை வகிக்கின்றனர் என்பது காணும் உண்மை.
இதனையுணராத நம்மில் பலர் ஆங்கில வழிக்கல்விக்கு முதன்மையளிப்பதால்,இன்றளவில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மிகப்பெரியளவில் பயிற்றுமொழியாகவும், விருப்பத்தின் பேரில் மட்டுமே தமிழில் பயிலும் நிலையும் காணப்படுகிறது.
தாய்மொழிவழியில் தொடக்கக்கல்வியளிக்கும் போது,குழந்தைகள் தாம் நினைக்கும் எண்ணங்களையும்,தெரிந்த தகவலை தமக்கு தெரிந்த மொழியில் உடனே வெளிப்படுத்துகின்றனர்.ஆனால்,பிறமொழிக் கல்வி மோகத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் தொடக்கக்கல்வியை தரும்போது ,தன்சிந்தனையும் ,உடனே தம்மை வெளிப்படுத்துகின்ற தன்மையும் குறைவாகவே உள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தாய்மொழியின் மூலம் படிக்கும்போது தான் முழுமையானப் பொருளை மாணவர்களால் அறிந்துக்கொள்ள இயலும்.தாம் உணர்ந்தவற்றை தங்குதடையின்றி வெளிப்படுதும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் தன்னம்பிக்கையுடன் பலப் புதுச் சிந்தனைகள்,கண்டுப்பிடிப்புகள்,ஆய்வுகள் என தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளமுடியும்.
பொதுக்கல்வி
தமிழகத்தில் இருக்கின்ற கல்வி நிலையங்கள் ஆளுக்கொரு பாடத்திட்டதை கையில் எடுத்துக்கொண்டு கல்விப்புகட்டுவதால் சமச்சீரான கல்வியை எல்லாருக்கும் தருவது என்பது சாத்தியமற்றது. பொதுக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தி தரமான கல்வியை தரும்போது மட்டுமே அனைவருக்குமான சரியான அறிவுப்புகட்டல் சாத்தியப்படும். அந்தவகையில் அரசுப்பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பயிற்றுவித்தோமேயானால் பொதுக்கல்விக்குறித்தான வரவேற்பு எல்லவகை மக்களிடமிருந்து இருக்கும்.
அதுமட்டுமல்லாது, தமிழ்வழி கல்வி என பள்ளிப்படிப்பில் அளித்துவிட்டு , மேற்படிப்புக்கு செல்லும்பொது, அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகள் முழுமையாக ஆங்கிலமயமாக்கப்பட்டிருக்குமானால், துறை சார்ந்த தேடலிலும்,கற்றலிலும்,மாணவர்களுக்கு நெருக்கடியை தான் தரும். அத்தகைய நெருக்கடியை தடுக்க ஆரம்பக்கல்வியிலிருந்து,மேற்படிப்பு வரையிலும் தாய்மொழிவழிக்கல்வி நிறைவேற்றவேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கல்வியை தரும்போது மட்டுமே அதன் மீதான பற்றும், பின்பற்றலும் அதிகரிக்கும். ஆக,தாய்தமிழ் மொழிவழிக் கல்வியை தந்துவிட்டு,அதனை வாழ்க்கைக்கு உதவாதப்படி அதை பயன்பாட்டுக்குட்படுத்தாமலிருந்தால் வீணான முயற்சியே. ஆகையினால், துறைதோறும் தமிழை பயன்படுத்தவேண்டும். மக்களின் அன்றாட பயன்பாட்டில் தமிழ் சரளமாக இயங்கவேண்டும்.
கணினியில் தமிழ்,அறிவியலில் தமிழ்,சட்டத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ் ,ஊடகத்தில் தமிழ், என முழுமையான வடிவமைப்புக்குட்படுத்தி,சிறந்த முறையில் நிறைவேற்றுவோமேயானால் நிச்சயமாக விரைவிலேயே “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” காணும் நிலையுண்டாகும்.
இணைவோம் தமிழர்களாய்,இயற்றுவோம் தமிழால்.
[ (7-7-08) தமிழ் ஓசை நாளேட்டில் கருத்துப்பெட்டகம் பகுதியில் வெளியான தாய்மொழியில் கல்வி எனும் கட்டுரையின் மூல வடிவம்.]

PERIYAR LIFE MEASURE


LIFE MEASURE
Life
Year
:
94 Years 3 Months and 7 Days
Months
:
1,131
Weeks
:
4,919
Days
:
34,433
Hours
:
8,26,375
Minutes4,95,82,540
Seconds
:
297,49,52,400

Denial of God



There is no god
There is no god at all
He who invented god is a fool
He who propagates god is a knave
He who worships god is a primitive

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out