“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்
பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா,
ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர். சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது.
27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி. இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார். “கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

No comments:
Post a Comment
வணக்கம்