மகரஜோதி என்னும் பொய் ஜோதி
எத்தனை முறை
சொன்னாலும் ஏன்
நம்பமறுக்கிறீர்கள் !
இல்லாத ஒன்றை
விடாப்பிடியாய்
நம்பித்தொலைக்கிறீர்கள்!
அருமையான உயிர்கள்
நூற்றிஆறு
அய்யகோ என
கதறி அழ
கதறிஅழ
மிதிபட்டும் அடிபட்டும்
பறிபோயிருக்கின்றன !
நாற்பது நாட்கள்
விரதமிருந்து
அய்யப்பா ! அய்யப்பா!
என அய்யப்பனைத்
தேடிப்போனவர்கள்
சாகும்நேரத்தில்
அழைக்காமலா
இருந்திருப்பார்கள்
அய்யப்பா!அய்யப்பா என்று!
சாகும்நேரத்தில் அழைத்த
பக்தர்களைக் காப்பாற்றாமல்
எங்கே ------ போனான்
உங்கள் அய்யப்பன் என்றால்
முறைக்கிறீர்கள் என்னை !
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை என்று
சொன்ன களவாணிப் பயல்களை
நம்பி கால் நடையாய்ப்
போனீர்களே !
மோசடி செய்து
பணம் பறிக்கவே
கேரளஅரசும் தேவஸ்தானமும்
இணைந்து நடத்தும்
மகரஜோதி எனும்
பொய்ஜோதியை
நம்பிப் போய்
உயிரைத் தொலைத்தீர்களே
எமது உழைக்கும் மக்களே!
பட்டினிபோடு பாம்பை
வரும் பக்தர்களிடம்
சீறவிடு பாம்பை !
பாம்பைக் கடவுள் என்று சொல்!
உண்டியல் நிரம்பும் உனக்கு
என்றானாம் அரசனிடம்
சாணக்கியன் அந்நாளில் !
மின்வாரியத்து ஆளைப் பிடித்து
பொன்னம்பல மேட்டின் மேலே
தீபத்தை ஏற்று எனச்சொல்லி
கடவுள் ஏற்றும் ஜோதி
என்று பொய் பரப்பி
உண்டியலை நிரப்புகிறது
கேரள அரசாங்கம் இந்நாளில்!
உழைக்கும் மக்களின்
அரசாங்கம் பொய் சொல்லி
மக்களைக்கொன்று குவிக்குமா!
இனியாவது உண்மையைச்
சொல்லித் தொலைக்குமா?
நம்பிக்கை எனும் பெயரில்
ஓரிடத்தில் மொத்தமாய்க்
குவியும் மந்தை உணருமா!
No comments:
Post a Comment
வணக்கம்