தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

February 22, 2015

குலசாமி -2

 நீங்கள் கவனித்ததுண்டா திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் செய்யும் மூட நம்பிக்கைகளை என்றுமே ஆரியர்கள் செய்ததில்லை அவர்கள் மொட்டை அடித்ததுண்டா,தலையில் தேங்காய் உடைத்ததுண்டா,நாக்கில் அழகு குத்தியதுண்டா,சிவ ராத்திரிக்கு மது அருந்தியதுண்டா,தீபாவளி அன்று மருந்து சாப்பிடாமல் இனிப்பு உண்டதுண்டா?நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும் அவர்கள் இருக்கும் இடங்களில் டாஸ்மார்க் கடை இருக்காது.நாம் அன்றாட கூலித் தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் மெயின் ரோட்டில் மூன்று கடைகள் வைக்கப் பட்டிருக்கும்.திருவிழா பண்டிகை என்ற பெயரால் மது அருந்திவிட்டு இறப்பவர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அரசியல் நடக்கிறது அது நம் வீர விளையாட்டுத்தான் நான் இல்லை என்று கூறவில்லை இன்று தமிழ் நாட்டில்
நானும் தமிழன்தான் என்று சொல்லும் ஆரியர்களைப் பார்த்துக் கேட்கிறேன் .நீங்கள் என்றாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதுண்டா?
தமிழர்கள் நீங்கள்(ஆரியர்கள்) செய்யும் வேலைகள்(சடங்கு சம்பிரதாயங்கள்) இல்லாமல் வாழ்ந்து விடலாம்  உதாரணமாக  நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் ஒரு நாள் நீங்கள் வரணாசரம அடிப்படையில் பிரித்த தமிழர்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்யாவிட்டால் உங்கள் பிழைப்பு நடக்காது.யாரவது ஒரு ஆரியர்  களை எடுத்ததுண்டா? துணி துவைத்ததுண்டா?செருப்பு தைத்ததுண்டா? 
இதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள் நம்மை விட அவர்களுக்கு நன்றாக தெரியும் கடவுள்,சாதி,மதம்,மூட நம்பிக்கைகள்,சோதிடம்,சனிப் பெயர்ச்சி போன்றவைகள்
இல்லை அவை நம்மால்(ஆரியர்களால்) உருவாக்கப் பட்டவை என்று.மற்றொன்று ஆரியர்களால் ஒரு காரியம் முடியவில்லை எனில் அதை தன்னுடைமையாக்கிக் கொள்ளப்பார்ப்பார்கள்.திருக்குறளை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் தெரிந்ததும் 
திருவள்ளுவர்க்கு தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சிலவற்றை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இயலுமா?



                                                  அன்று முதல் இன்று வரை தமிழனுக்கு வீரம் உண்டு ,தோல்வியை தாங்கும் தைரியம் உண்டு,ஆனால் துரோகத்தை அறியும் வலிமை இல்லை.அன்றே அதை அறிந்திருந்தால் தமிழன் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டிராமல் இவர்களை துரத்தி அடித்திருப்பான்.ஆனால் ஆரியர்களுக்கு நன்றாகத் தெரியும் தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்று அதனால் அவர்கள் எடுத்த ஆயுதம் சாதியும் கடவுளும்,அவன் கொடுத்த வர்ணாசரமம் ,சாத்திர,சம்பிரதாயங்கள் நம்மை பிரிப்பதற்கே இதனால் காலம் செல்ல செல்ல வர்ணாசரமம் அடுக்கில் தனக்கு மேல் உள்ளவனோடு சண்டையிடாமல் தனக்கு கீழ் உள்ளவனை மட்டும் முன்னேறவிடாமல் பார்த்துக் கொள்ள தமிழனை தூண்டினார்கள் ஆரியர்கள்.ஆனால் இதனை அறியாத தமிழர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு இன்றளவும் உன் சாதி பெரிது என் சாதி பெரிது என்று சண்டையிட்டு ,மதம் மாறி சென்று விட்டனர் அந்த அளவுக்கு இந்து சாதி அமைப்பு கொடுமை படுத்தியுள்ளது.இப்போது சாதியுடன் சேர்ந்து உன் மதம் பெரிது என் மதம் பெரிது என்று  சண்டையிட்டு கொள்கின்றனர்.தமிழர்களை சண்டை போடவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு அவன் மட்டும் எல்லா இடங்களிலும் மேல் பதவியில் உள்ளான் சாதரண டிவி நிகழ்ச்சிகளிலிருந்து ஆட்சி செய்வது முதல் இப்போது முடிவு அவன் பொறுப்பில் உள்ளது.
                                                    தமிழர்களே ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ஒரு பிரச்சனை என்று வந்தால் அது யாரால் உருவாக்கப்பட்டது என்று ஆழம் வரை ஆராய்ந்து அதனை களைய வேண்டும் அதை விட்டு  விட்டு நமக்குள் சண்டையிடக் கூடாது.மற்றொரு எச்சரிக்கை தமிழ் நாட்டில் வாழும் ஆரியர்களின் எட்டப்பர்களை நம்ப வேண்டாம்.
சிலர் இதனை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்னைக் கேட்டால்  தமிழர்களின் பலமே ஒற்றுமைதான் பலவீனம் துரோகத்தை அறியாமல் இருப்பது.நாம் அதற்கு இந்த ஆரியர் கலாச்சாரத்தில் இருந்து வெளிவந்து தமிழர் பண்பாட்டை பின்பற்ற வேண்டும் ,அதற்கு முதலில் எது தமிழர் பண்பாடு என்று தெரிய வேண்டும்.
  (இவ்வளவு விஷயம் உள்ளது இன்னும் நிறைய உள்ளது என்று உன் குலசாமி பெயர் தெரியுமா? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் நண்பனிடம் கூறினேன் தமிழனிடம் நடுகல் வைக்கும் பழக்கம் இருந்தது.ஆனால் நீங்கள் சொல்லும் குலசாமி இவையெல்லாம்  ஆரியர் வந்தபின் வந்தவை.உனக்கு பாரி வள்ளலைப் பற்றி தெரியாது ஆனால் இராஜ இராஜ சோழனைப் பற்றித் தெரியும் இது அந்தணர்களின் பொற்காலம் என்று கூறப்படுகிறது தமிழர்கள் வரலாற்றில் ஆனால் இருண்ட காலம் என்று கலப்பிரர் வருகையை கூறுகின்றனர்.உண்மையாக தமிழர்கள் இருளுக்கு தள்ளப்பட்ட காலம் இராஜ இராஜ சோழன் காலம்)இத்தனையும் கூறிவிட்டு என் நண்பனிடம் நான் ஒரு பகுத்தறிவாதி,நாத்திகன்,தமிழன்,இந்தியன் மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன்
ஒரு மனிதன் சக மனிதன் துன்பப்படுவதைக் கண்டே சும்மா இருக்கக் கூடாது என்று நீதி கூறுகிறது.அப்படி இருக்கும் போது நேருக்கு நேராக போரிடாமல் இத்தனையும் செய்து இன்றளவும் நாம் முன்னேறாமல் செய்யும் சாத்திர சம்பிரதாய திருவிழாக்களையும்
ஏற்படுத்தி இருக்கும் ஆரியர்களைக் கண்டு வெகுண்டெள வேண்டாமா என்றேன் அவன்
மூளையில் போடப்பட்ட விலங்கு அவனை யோசிக்க விடவில்லை அன்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது எனக்குத் தெரிந்த மற்றொரு பகுத்தறிவாதி எதார்த்தமான ஒரு எடுத்துக்காட்டைக்  கொடுத்தார்.இங்கு ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதம் மாறுதல் 
எளிது.அதாவது மதம் என்பது சோப்புத் தண்ணீர் போல,ஊறவைக்கும்   துணி போன்றது ஒவ்வொரு மதமும்,ஒரு துணி இருக்கும் வாளியில் மற்றொரு துணியைப் போடலாம்
அது போல ஒரு மதத்தில் இருப்பவரை மற்றொரு மதத்திற்கு மாற்றி விடலாம்.ஆனால் அவர்களுக்கு பகுத்தறிவு எனும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது துணியைக் காய 
வைப்பது போன்றதாகும் என்றார்.ஒரு துணியை காய வைக்கவே அவ்வளவு நேரம் ஆகும் போது காலம் காலமாக ஊறவைத்த மூட நம்பிக்கை விலங்கிலிருந்து அகற்றுவது என்பது எவ்வளவு கடுமையான காரியம் இது ஓர் நூற்றாண்டு கடந்த தொடர் முயற்சியாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out