கல்லூரி மாணவனை பார்த்தேன்
அவன் வகுப்பை விட்டு இடையில்
சென்று மது அருந்துவதும்
அதை மறைக்க கொய்யா
மிட்டாய் சாப்பிடுவதும்
வகுப்பு முடிந்தவுடன்
சிகரெட் குடிப்பதும் மாக இருந்தான்.
ஏன் எனக் கேட்டால் பதில் இல்லை.
பழக்கம் ஆகிவிட்டது என்றான்.
ஏன் பழக்கமானது என்றால் சோகம் என்றான்.
இந்த உலகத்தில் சோகம் தீர்கிறது குடிக்கிறேன்
என்பவனை விட அறியாமை உள்ளவன்
எவனும் இல்லை.
இந்த உலகத்தில் எத்தனையோ சாதனையாளர்கள்
சோகத்தினால் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
அவர்கள் அதை தீர்க்க வழி பார்த்தார்களே
அல்லாமல்
அவர்களை அவர்களே தீர்த்துக்கட்ட எண்ணவில்லை.
என்று அறிவுரை கூறினேன்
அவன் நான் சாதனையாளனாக நினைக்கவில்லை
சாதரண மனிதனாக இருக்க விரும்புகிறேன்.
அவன் இதை கூறிய பிறகு இந்த சமூதாயம் சாதரண
மனிதன்
என்றால் சோகம் தீர குடிக்க வேண்டும் என்ற
அறியாமையை
ஆழப் பதிய வைத்திருக்கிறது எனப் புரிந்தது.
ஒரு புறம் இவனை பார்க்க பாவமாக,கோபமாக
இருந்தாலும்
நமது அரசியல் நடைமுறைகளை எண்ணிப் பார்த்தேன்
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என எறும்பு போன்ற சிறிய எழுத்தில்
எழுதி டாஸ்மார்க் பார் வசதி
உள்ளது என்பதை யானை போன்ற பெரிய
எழுத்தில் வியாபாரம் செய்பவர்கள்
மது விலக்கு என போராட்டம் நடத்துபவர்கள்
அதில் மது அருந்திவிட்டு வருபவர்கள்
மது கொடுத்து கூட்டத்தை சேர்க்கும் அரசியல்வாதிகள்
அதில் மது அருந்தும் அரசியல்வாதிகள்
பள்ளி,கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டுமா
பாருக்குச் செல்ல வேண்டுமா எனத்
திண்டாடும் நிலையில் மாணவர்கள்
காரணம் பள்ளித் தனியார் கையில்
பார் அரசு கையில்
படத்தில் மது அருந்தும் நடிகர்,நடிகைகள்
அதை பாடமாக எடுத்துக் கொண்டு நமது
தலைவர் குடிக்கிறார் நாமும் குடிப்போம்
என வாழ்க்கையைத் தொலைக்கும் மாணவர்கள்
மது விலையை ஏற்றும் அரசு
கடன் வாங்கி குடிக்கும் 'குடி'மகன்
சிகரெட் தனியாக விற்கக்கூடாது என தடை போடும்
அரசு
கடைக்காரனுக்கு 1 ரூபாய் அதிகமாக கொடுத்து
வாங்கும் புகைமன்னன்
புகை நமக்குப் பகை
புகை பிடிப்பது பற்றிய ஆவணப்படம்
புகை பிடிக்கக்கூடாது பற்றிய விளம்பரம்
தியேட்டரில்
புகை பிடிப்பது பற்றிய கவிதை
இவை எல்லாவற்றையும் எல்லோரும் பார்க்கிறார்கள்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழக்கத்தில்
இருந்து மீட்கப் பட்டார்களா
இளைஞர்கள் இந்த நாட்டின் தூண்கள்
என கூறும் நமது பள்ளிகள்
பாடத்தை நடத்துகிறதே
வாழ்க்கை பாடத்தை நடத்துவதில்லை
பள்ளிகளில் அந்த காலங்களில்
திருடக் கூடாது,பொய் சொல்லக்கூடாது,
கடன் வாங்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தனர்.
இன்று 5 மார்க் கேள்வி இத்தனை வரும்,10
மார்க்
கேள்வி இத்தனை வரும் என அவர்கள் 10,12ம் வகுப்புக்கு
படிக்கும்
தேர்வுக்கு முதல் வகுப்பில்
இருந்தே அந்த நடைமுறைக்குப் பழக்கப் படுத்தப்
படுகின்றனர்.
திருடக்கூடாது,பொய் சொல்லக்கூடாது,கடன்
வாங்கக்கூடாது
எனச் சொல்லித்தரும் பள்ளிகளும் இருக்கின்றன
அதில்
பெற்றோர்கள் சேர்ப்பதில்லை.
ஆயிரத்தில் ஒரு பள்ளிதான் இப்படி உள்ளது
அப்படியே நடந்தாலும் ஆயிரத்தில் ஒருவர்தான்
அந்தப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
திருடக்கூடாது,பொய் சொல்லக்கூடாது,கடன்
வாங்கக்கூடாது
என்பதுடன் மது அருந்தக்கூடாது என்பது அவர்கள்
மனதில்
ஆழப்பதிய வேண்டும் என்பது எனது ஆசை
தூண்களில் கரைபடிய வைக்கிறது இந்த தீயப்(பழக்க)
வழக்கங்கள்
No comments:
Post a Comment
வணக்கம்