தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 20, 2015

வரிசையில் நிற்பது சுகமா?சுமையா?

                         வரிசையில் நிற்பது பற்றி யெல்லாம் ஒரு பதிவா என்று நினைக்காதீர்கள்.சோவியத்  ரஷ்யாவை கம்யூனலிசத்தை பலவீனப் படுத்தியதே வரிசை முறைதான் .



 பெரும்பாலான சூழ்நிலைகளில்  நாம்  வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.இது ஒரு விதமான ஒழுக்கம்,மரபு,விதி என்றிருந்தாலும் கூட நாம் பெரும்பாலும் வரிசையில் நிற்பதற்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை மேலும்  நமக்கு இன்று நிலவும் பந்தய வாழ்க்கையில் பொறுமையில்லை என்பதே நிதர்சனமான உண்மை.மேலும் நாம் வரிசையில் நிற்கும் போது சிலர் இடையில் வந்து சொருகுவார்கள்,சிலர் அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமால் தனி வழியில் அவர்கள் என்று ஒரு வரிசையை உருவாக்குவார்கள்.சிலர் எதையோ இழந்தது போல முகத்தை வாட்டமாக வைத்திருப்பார்கள்,சிலர் கோபமாக வரிசையில் முறைத்தபடி நின்று இருப்பார்கள்.

இவற்றை எல்லாம் தாண்டி இன்று வேலை பார்ப்பதற்கு நேரம் பார்ப்பதை விட்டுவிட்டு, வேலை பார்க்காமல் தப்பிப்பது எப்படி?என்று புத்தகம் போடும் அளவுக்கு ஊழியர்கள் பெரும்பாலும் பெருகியுள்ளனர்.இன்று தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை  தனது கடைமை என்று எண்ணி வேலைப் பார்ப்பவர்கள் குறைந்து கடமைக்கு என்று வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் உள்ளனர்.நேர்மையாக சரியாக இருப்பவர்களுக்கு மிஞ்சுவது என்னமோ பொழைக்கத் தெரியாத ஆள் என்ற பெயரும்,மற்றவர்களிம் இருந்து பொறாமையும் தான் மிஞ்சுகிறது.

இதையெல்லாம் வரிசையில் நிற்கும் ஆட்கள் யோசிக்கத்தோணுவதில்லை.அவர்களுக்கும் வரிசை பெருகிக் கொண்டே போகிறது என்ற சலிப்பும் அலுப்பும் வருகிறது.இந்த நேரத்தில் நமக்கு நம்மை நகைச்சுவை உணர்வுக்கு உண்டாக்கும் நண்பர்களை பக்கத்தில் நின்று கொண்டு யார் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போது வரிசையில் கால் வலிப்பது கூட சுகமாகிறது.பதட்டபடுத்தும் நண்பர்கள் இருந்தால் நிலைமை இருந்தால் சுமையாகிறது.

எந்த ஒரு காரியமும் நமது சூழலை பொறுத்தே சுமையான நேரத்தில் சுகமாகவும் ,சுகமாக இருக்க வேண்டிய நேரத்தில் சுமையாகவும் மாற்றுகிறது.நீங்கள் கேட்கலாம் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பெரும்பாலும் சொந்தக்காரர்கள் மற்றவர்களை பதட்டப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.அது அதீத அக்கறை என்று ஒரு சிலர் இருந்தாலும்,ஒரு சிலர் சம்பிரதாயத்திற்கு என்று இருந்தாலும்,சிலர் வம்புக்கு என்று செய்தாலும் ,சிலர் ஆறுதல் சொன்னாலும் சோகமான, சுமையான நேரத்தில் ஊக்கப்படுத்துவதற்க்கும்,மகிழவைப்பதும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்,ஆபத்தில் உதவுபவர்களும் 
நண்பர்களாகவே இருக்கிறார்கள்.பெற்றோரும் நண்பர் மாதிரி பல நேரங்களிலும் ,நண்பர்கள் பெற்றோர் மாதிரி சில நேரங்களிலும் நடந்து கொள்ளும் பெற்றோர்களும் ,நண்பர்களும் அமைவது ஆயிரத்தில் ஒரு சிலருக்குத்தான் .

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out