தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 23, 2015

உழைப்பில்லாத பகுதி நேர வேலை என்ற பெயரில் மாணவர்களுக்கு பணத்தாசையை எவ்வாறு தூண்டுகிறார்கள்?

மதியம் முதல் இரவு வரை ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவிட்டு
தன்னுடைய அசதியை சோகத்தை வெளிகாட்டாமல்
மகிழ்ச்சியாக இருந்து வகுப்பிலும் முதல் மாணவனாக வரும் ஒரு மாணவன்



அப்பாவின் காசில்தானே படிக்கிறோம் என்று செட்யிலாக சுத்தும் மாணவர்கள்
மத்தியில் அப்பா இறந்தபின்னர் நன்றாக நுணுக்கமாக படிக்கும் மற்றொரு மாணவன்.

அப்பா,அம்மா இறந்தபின்னர் தாத்தா வீட்டில் படிக்கும் மாணவன் ஒருவன்.

என்ஜினியர் படிப்பு வேண்டாம் என்று கலைக்கல்லூரியில்
சேர்ந்து படிக்கும் மாணவன்.

N.C.C வேண்டாம் என ஒரு கல்லூரியை விட்டு விட்டு மற்றொரு கல்லூரியில்
படிக்கும் மாணவன்.

அப்பா இறந்தபின்னர் விடுமுறை நாட்களில்  மீன்பிடித்து வருமானம் ஈட்டும்
இராமேஸ்வரம் மீனவன் ஒருவன்.

அண்ணன் வேலைக்கு சென்று விட்டான் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற
முனைப்பில் மற்றொருவன்.

எந்த வொரு பிடியும் இல்லாமல் இருக்கும் பலர்.

அப்பா பீரோ தூக்கும் தொழிலாளியாக இருக்கும் மாணவன் ஒருவன்.

100 கி.மீ தொலைவில் இருந்து தினமும் வந்து போகும் மாணவன் ஒருவன்.

N.C.C குள் நுழைய வேண்டும் என சிலர்.

அப்பா இறந்த பின்னர் மாணவன் மற்றொருவன் மதுவில் மயங்கினான்.

அப்பா இறந்த பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவன் .

கிரிக்கெட்,அலைபேசியே வாழ்க்கை என்றாகிப் போன மாணவர்கள் சிலர்.

இவர்கள் அனைவரும் நண்பர்கள் கல்லூரி வந்தபின்னர் கவலை மறந்துவிடுகிறது.

இவர்கள் அனைவரும் ஆசிரியர் பார்வையில் மாணவர்களே! ஒவ்வொருவருக்கும் ஒரு சூழல் உண்டு அதுவே அவனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது.ஆனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழல் ஆசிரியர்கள் சிலருக்கு  புரிவதில்லை.அவர்கள் அறிய விரும்புவதும் இல்லை.

ஆனால் பொருளாதார அடிப்படையில் ஒரு மாணவன் எவ்வளவு தூரம் இருக்கிறான் .அவனுக்கு பணத்தாசையை தூண்டுவது எப்படி என ஒரு புதிய வியாபார உத்தி வந்திருக்கிறது.
அஃதாவது ஒரு லேபிள் 350 ரூபாய்க்கு வாங்கி செல்போனில் ஒட்ட வேண்டுமாம்.பேச்சுக்கொடுக்கும் போது இந்த கதிர்வீச்சினால் உலகமே பாதிக்கப்படுகிறது என ஆரம்பித்து ஒரு சமுதாய கருத்தை சொல்வது போல
ஆரம்பித்து இந்த கம்பெனியில் இருந்து இந்த கம்பெனிக்கு பேசினால் இலவசம் என விளம்பரப்படுத்தி ஒரு கார்டு 350 ரூபாய்க்கு கொடுப்பாங்களாம் .அந்த கார்டை காட்டி பெரிய பெரிய சாப்பிங்க் மாலில் 10% தள்ளுபடி வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி அதற்கு உங்களுக்கு கீழ் நீங்கள் உங்களது நண்பர்களை ,உறவினர்களை சேர்க்க வேண்டும் என கூறினார்கள்.5 பேர் போனதில் எல்லாரிடமும் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்கள் என ஐந்து பேரையும் கேட்டபோது ஒருவன் அப்பா இல்லை என கூற ,மற்றொருவன் மேனேஜர் எனக் கூற,மற்றொருவன் வக்கீல் எனக் கூற,மற்றொருவன் காவலர் எனக் கூற 3 பேரை விட்டு விட்டு அப்பா இல்லாதவரையும்,தினக்கூலிக்கு வேலை பார்ப்பவரின் மகனையும் நாம் சம்பாதிக்க வேண்டும் ? இப்போது யாருமே ஒரு வேலை பார்ப்பது கிடையாது என்று.இரண்டு வேலைகள் பார்க்கிறார்கள் ஒன்று முக்கியமாக மற்றொன்று பகுதி நேரமாக என்று 

                        எங்களிடம் இதை கூறியவரிடம் கேட்டேன் 
கேள்வி: எனக்கு இப்ப புரோட்டா சாப்பிடணும் எதுத்தக் கடைல இந்த கார்டை காமிச்சா சாப்பிட விடுவாங்களா?.
பதில்:இல்லை.
கேள்வி:எனக்கு டீ குடிக்கணும் டீ கடைல காமிச்சா டீ குடுப்பாங்களா?
பதில்:இல்லை.
கேள்வி:எனக்கு பஸ்ல போணும் இந்த கார்ட காமிச்சா  இலவசமாக போக விடுவாங்களா?
பதில்:இல்லை.
கேள்வி:அப்ப இதவச்சு என்னதான் சார் பண்றது?
பதில்:நீங்க சாப்பிங்க் மாலுக்கு போனிங்கனா இந்த கார்ட காமிச்சிங்கனா 10% தள்ளுபடி.
கேள்வி:இது நால நமக்கு என்ன லாபம்?
பதில்:எந்த பொருள் வாங்குனாலும் நீங்க தான் காசு கொடுக்கணும்
              ஆனா இந்த கடைல 50,000 பொருள்  வாங்குனா 5000 உங்களுக்கு               தருவாங்க.
கேள்வி:நாங்க எதுக்கு ரெண்டு பேர சேக்கணும்?
பதில் :நீங்க 50,000 பொருள் வாங்குனா உங்களுக்கு 5,000 இல்லைனா அந்த பணம் விளம்பரத்துல    நடிக்கிறவங்களுக்கு போயிடும்.
கேள்வி:50,000 பொருள் வாங்குற அளவுக்கு காசு இருந்தா
                இவுங்க ஏன் பகுதி நேர வேலைக்கு வர    போராங்க?
பதில்:100 பொருள் வாங்குனா உங்களுக்கு பத்து ரூபா தருவாங்க
கேள்வி:அந்த கடை எங்க இருக்கு ?
பதில்:இங்க இருந்து ஊர தாண்டி ஹை வேஸ்ல
கேள்வி:அப்ப நீங்க யாருக்கு லாபம் ஈட்டி கொடுக்கிறங்க ஷாப்பிங்க் மாலுக்கா?
                  பகுதி நேரமா வேலை பாக்குரவங்களுக்கா?
பதில்:?!

ஒன்றும் யோசிக்காமல் யாரோ ஒரு நண்பன் சொன்னான் என்பதற்காக ஏதோ ஒரு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக என்ன ஏது என விசாரிக்காமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்
யோசிக்காமல் சேர்ந்து விடுகின்றனர். எந்த வொரு வேலையும் நமது அன்றாட தேவையை பூர்த்தி செய்யாமல் ஆடம்பர தேவையை கடன் வாங்க வைத்து பூர்த்தி செய்ய வைத்தால் அது பேர் வேலையா?


No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out