தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

June 22, 2015

அரசு பேருந்து பயணம்

                                 இன்று ஒரு அரசுப் பேருந்தில் ஏறினேன்.வரிசையாக மக்கள் நின்றனர்,சிலர் பேசிக் கொண்டும்,சிலர் சிரித்துக் கொண்டும்,சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும்.நான்கில் மூன்று பங்கு பேர் அலைபேசியைவே பார்த்துக் கொண்டிருந்தனர்.நான் கண்டக்டரிடம்  7 ரூபாய் டிக்கெட் வாங்க 10 ரூபாய் கொடுத்தேன்.அவர் 9 ரூபாய் டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தார்.
அவரிடம் மீதி ஒரு ரூபாயும் ஏன் 9 ரூபாய் டிக்கெட் கொடுத்தீர்கள்
என கேட்பதற்குள் எனது  ஸ்டாப் வந்துவிட்டது.

                                பயணத்தின் போது ஒவ்வொருவரும் தனக்குரிய வேலையை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு முதியவர் மாற்றுத்திறனாளி
தனக்குரிய இரும்புக் குச்சியை வண்டியில் ஏற்றினார்.
அவருக்கு 9ரூபாய் டிக்கெட் கிழித்து கொடுக்கப்பட்டது
அவர் மீதம் காசு கேட்டால்  நான் தூக்கி வந்த குச்சிக்கு
எடைகாசு போட்டுவிடுவார்கள் ஒரு ரூபாய் தானே என்றார் இது ஒரு புறம்.
                                   நான் பேருந்தை சுற்றிப் பார்த்தபோது அன்றெல்லாம்
திருக்குறள் எழுதப் பட்டிருக்கும் இன்று அரசுப் பேருந்துகளாக செயல்படும் தாழ்தள சொகுசு பேருந்துகளில் சாய்பாபாவின் வசனமும்
லட்சுமி படமும் டிரைவரின் முன் தொங்க விடப் பட்டிருந்தது.
நான் வண்டியில் உள்ளவர்களை சுற்றி பார்த்தேன் ஒரு
இஸ்லாமியக் குடும்பம் இருந்தது.
                                                   ஒரு பாதிரியார் இருந்தார் .ஆனால் லட்சுமி படம் மட்டும் தொங்க விடப் பட்டிருக்கிறது,சாய் பாபாவின் வசனம் எழுதப்பட்டிருக்கிறது.இதையெல்லாம் அவசரத்தில் ஏறி இறங்கும் மக்கள்
எங்கே பார்க்க போகிறார்கள் யார் என்ன செய்ய முடியும்?மதச்சார்பின்மை எங்கே அரசு உடைமைகளில்? இதையெல்லாம் கவனித்து முடிப்பதற்குள் எனது ஸ்டாப் வந்துவிட்டது இறங்கி விட்டேன். பேருந்தில் இருக்கும் இளைஞர்களைப் பார்த்தேன் எல்லோரும் அலைபேசியே உலகம் என மாறி விட்டனர் போலும் ,இளைஞர்கள் திசை திருப்பபபடுகிறார்கள்
போலும் தோன்றியது.   

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out