தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

October 26, 2015

அடிப்படைப் பணிகள்

                               கூட படிக்கும் மாணவன் கூறியது என்னை திகைத்துப் போக வைத்தது.
   
                                  இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கும் அடிப்படை பணிகள் என்று சில பணிகள் உள்ளன ஆனால் அதை செய்ய பணம் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது என்றான்.எப்படி என்று கேட்டேன் 
ஏதாவது ஒரு அரசு அலுவலகம் சென்று பார் அங்கு ஒரு மனுவோ அல்லது ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் அதற்கென் ஒரு பணியாளர் இருப்பார்.அவருடைய அடிப்படைப் பணி அதைக் கொண்டு மேலாளரிடம் சேர்க்க வேண்டியது ஆனால் அதற்குப் பணம் தர வேண்டியதாயிருக்கிறது. 

                         
                ஒரு ஆசிரியரின் அடிப்படைப் பணி மாணவனை நல்வழிப் படுத்துவது.மேலும் இதை படிப்பதனால் அதன் பயன் பற்றிக் கூறுவது அதை யாரும் செய்வதில்லை ,ஒரு சிலரைத் தவிர .

                       இந்தப் பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகிறது நாம் அன்றாட கூலிகளிடம் அவர்கள் அதை செய்யவில்லை இதைச் செய்யவில்லை எனக் கூறுகிறோமே தவிர உதாரணமாக ஒரு லோடு மேன் இருக்கிறார் என்றால் அவருடைய அடிப்படை பணி இதை உடையாமல் வைப்பது ஆனால் அவர் நான் உங்கள் வீட்டில் உடையாமல் வைத்தேன் அதனால் எனக்கு 500 ரூபாய்க்கு பதில் 800ரூபாய் கொடுங்கள் என்றால் நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது அதே கோபம்,ஆத்திரம் எல்லாம் நாம் ஒரு அலுவலகத்திற்கு செல்லும் போது அவர்கள் அவர்களின் அடிப்படை பணியை செய்வதற்கு நம்மிடம் பணம் கேட்கும் போது எங்கே போகிறது என்று எனக்கு தெரியவில்லை.

                                                         இது சாதரண பியூனில் ஆரம்பித்து அதிகாரிகள்,மந்திரிகள்,............................. என நீண்டு கொண்டே போகிறது.இது எல்லாம் தவறு என்று மக்களுக்கு தோன்றும் போது அவர்களையும் அவர்களது அடிப்படை 
பணியான ஓட்டு போடுவதற்கு பணம் கொடுத்து மொத்த சிஸ்டத்தையும் இப்படி மாற்றி வைத்திருக்கின்றனர் .

                                                இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாமும் யாருக்கு கீழையோ அடிமை போல் பணத்திற்காக நம் குடும்பத்திற்காக வேலை பார்க்கப் போகிறோம்.யாரவது படிக்கிற மாணவன் நாம் ஏன் இதைப் படிக்கிறோம் இதனால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என யோசிக்கிறான இல்லை.நான் வேலைக்குப் போனும் ஏன் சொந்தக்காரங்க முன்னாடி அதிகமாக சம்பாதிச்சு காட்டனும் இதுவே எல்லாருடைய நோக்கமாக மாறிவிட்டது.

                                                        அன்றாட கூலிகள் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது என்று காலை முதல் மாலை வரை வேலை என்று வழக்கப்படுத்திக்கொள் மாலை முதல் டாஸ்மாக் என வழக்கப்படுத்திக்கொள் என்று விதைத்துவிட்டனர்.இதனால் ஏழை ஏழையாகிக் கொண்டே போகிறான் பணக்காரன் பணக்காரன் ஆகிக்கொண்டே போகிறான்.

No comments:

Post a Comment

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out