"இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்."
என்னும் பாடல் ஒரு தேநீர் விடுதியில் ஒலித்துக் கொண்டிருந்தது.அத்திரைப்பட பாடல் இன்று நமது நாட்டின் நடப்பு ஒன்றோடு மொத்தமும் ஒத்துப் போவது கண்டேன்.
திருச்செங்கோடு பொறியியல்கல்லூரி மாணவன் கோகுல்ராஜ் ஓர் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக அவர் தலையைவெட்டிப் படுகொலை செய்து ரயில் தண்டவாளத்தில் உடலை வீசிவிட்டது ஒரு சாதிவெறிக் கும்பல்.அந்த வழக்கை விசாரிக்க வந்தவர் காவல்துறையின் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா.அவரும் க்டந்த செப்டம்பர் 18ஆம் நாள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சிதான் அப்பாடலைக் கேட்கும் போது நினைவுக்கு வந்தது.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்து அடக்கி வைக்கப்பட்ட பெண்ணினப் பிரதிநிதியான விஷ்ணுப்பிரியா ஆண்களோடு களத்தில் போட்டியிட்டு வென்று ,காவல்துறையின் மாவட்டத்துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.துணிச்சலான அதிகாரி என்று பெயரெடுத்தவர்.அத்துடன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்.பணியில் நேர்மை,முடிவெடுப்பதில் தூய்மை,நேரங்காலம் பார்க்காது பணியாற்றும் கடமை உணர்வு அத்தனையும் கொண்டவர் அவர்.சாதிமத பேதமோ,இருப்பவர் -இல்லாதவர் என்ற பார்வையோ இல்லாது மனித நேயத்தோடு கடமையாற்றிய கண்ணியத்திற்குரியவர்.அப்படிப்பட்டவர்தான் தற்கொலை என்னும் தவறான முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையானது என்ற பெயர்பெற்றது.எத்தனையோ அவிழ்க்க முடியாத சிக்கல் மிகுந்த வழக்குகளை எல்லாம் திறமையாகக் கண்டுபிடித்தவர்கள் தமிழகக் காவல்துறையினர்.ஆனால் அதனைச் சுதந்திரமாக செயல்படவிடாமல் அரசியல்,அதிகாரச் சங்கிலி,சுயநலச் சங்கிலி,ஊழல் சங்கிலி,சாதிச் சங்கிலி எனப் பல்வேறு சங்கிலிகள் சுற்றிப் பிணைந்துள்ளன.அதனால் பல சமயங்களில் நமது காவல்துறை முடங்கிப் போயுள்ளது.அதில் சாதிச் சங்கிலி மிகவும் வலிமையானது.
மாணவன் கோகுல்ராஜை படுகொலை செய்தது சாதியம்.அதே சமயம் கொலைக்காரக் கும்பலின் மூலவன் யுவராஜை பாதுகாப்பதும் சாதியம்.விஷ்ணுப்பிரியாவை மிரட்டியதும் சாதியம் (மேல் அதிகாரி அப்பாவிகள் மீது வழக்குத் தொடுக்க சொன்னதும் சாதியம்).இந்த வழக்கின் அடித்தளமே சாதிவெறி எனும் சாதியம் தான்.
கடந்த 2011இல் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 7 தலித்துகள் பலியாயினர்.2012இல் தருமபுரி நத்தம் காலனி,நாயக்கன் கொட்டாய் பகுதியில் 300 தலித்துகள் வீடுகள் எரித்து சாம்பலாக்கப் பட்டன.தர்மபுரியில் இளவரசன் கொல்லப்பட்டான்.சோமனூரில் சிற்றரசு லாரி ஏற்றிக் கொல்லப்பட்டான்.பெரம்பலூரில் பார்த்திபன் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டான்.திருவண்ணாமலையில் துரை,துண்டு துண்டாகக் கைகால்கள் நறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டான்.
எத்தனை படுகொலைகள்?எத்தனை பாலியல் வன்புணர்ச்சிகள்?எத்தனை வீடு எரிப்புகள் இதனையெல்லாம் தடுக்க வேண்டிய அரசு சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகிறது.
-பொள்ளாச்சி மா.உமாபதி எழுதிய கட்டுரையில் இருந்து சில
_________________________________________________________________________________
மந்திரிகள்+போலிஸ் கூட்டாளிகள் !(நக்கீரன் இதழ் அக்டோபர்)
" நெல்லை மாவட்டத்திலும் கேரள மாநில கோட்டயம் பகுதியிலும் மைசூரிலுமாக இருந்த ய்வராஜ் .பிறகு தாளவாடி மலைப் பகுதிகளில் இருக்கும் எங்க இன மக்களின் தோட்டங்களில் ரிலாக்ஸாக ஓய்வு எடுத்தார்.அதன்பிறகு ... நாமக்கல்,சேலம் மாவட்டத்தை தாண்டி அவர் வேறு எங்கும் செல்லவில்லை"என யுவராஜின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
வணக்கம்