வரிசையாக முதலில் கோழிகறிக்கடை ,அடுத்து ஆட்டுக்கறிக்கடை ,அடுத்து ஒரு மருத்துவமனை அடுத்துமீன்கடை.இவ்வாறு இருக்கக்கூடிய மருத்துவமனை. ஒரு பக்கத்தில் மக்கள் ஆட்டுக்கறிக்கு அலை மோத,மற்றொரு பக்கம் கோழி கத்தும் சத்தம் கேட்க மற்றொரு பக்கம் மீன்கடையில் மீனின் வாசம் தூக்க நடுவில் அமைந்த மருத்துவமனையைக் கண்டு வியந்தேன்.
பகுத்தறிவு கொள்கைகளும்,சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளும்,மேலும் மென்பொருட்களை பதிவிறக்கத் தேவையான சுட்டிகளும்,கவிதைகளும்,பொன்மொழிகளும் தமிழில்
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்
எனது வலைத்தளங்கள்
உறுப்பினர்கள்
November 28, 2015
October 26, 2015
அடிப்படைப் பணிகள்
கூட படிக்கும் மாணவன் கூறியது என்னை திகைத்துப் போக வைத்தது.
Labels:
இளைஞர்கள்,
கம்யூனிஸ்ட்,
கல்வி,
சமூதாய விழிப்புணர்வு
October 17, 2015
சாதி வெறி...! விஷ்ணுப்பிரியா தற்கொலை...!(கருஞ்சட்டைத் தமிழர் இதழ் அக்டோபர் 1)
"இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்."
என்னும் பாடல் ஒரு தேநீர் விடுதியில் ஒலித்துக் கொண்டிருந்தது.அத்திரைப்பட பாடல் இன்று நமது நாட்டின் நடப்பு ஒன்றோடு மொத்தமும் ஒத்துப் போவது கண்டேன்.
June 23, 2015
உழைப்பில்லாத பகுதி நேர வேலை என்ற பெயரில் மாணவர்களுக்கு பணத்தாசையை எவ்வாறு தூண்டுகிறார்கள்?
மதியம் முதல் இரவு வரை ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவிட்டு
தன்னுடைய அசதியை சோகத்தை வெளிகாட்டாமல்
மகிழ்ச்சியாக இருந்து வகுப்பிலும் முதல் மாணவனாக வரும் ஒரு மாணவன்
தன்னுடைய அசதியை சோகத்தை வெளிகாட்டாமல்
மகிழ்ச்சியாக இருந்து வகுப்பிலும் முதல் மாணவனாக வரும் ஒரு மாணவன்
June 22, 2015
அரசு பேருந்து பயணம்
இன்று ஒரு அரசுப் பேருந்தில் ஏறினேன்.வரிசையாக மக்கள் நின்றனர்,சிலர் பேசிக் கொண்டும்,சிலர் சிரித்துக் கொண்டும்,சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும்.நான்கில் மூன்று பங்கு பேர் அலைபேசியைவே பார்த்துக் கொண்டிருந்தனர்.நான் கண்டக்டரிடம் 7 ரூபாய் டிக்கெட் வாங்க 10 ரூபாய் கொடுத்தேன்.அவர் 9 ரூபாய் டிக்கெட்டை கிழித்துக் கொடுத்தார்.
அவரிடம் மீதி ஒரு ரூபாயும் ஏன் 9 ரூபாய் டிக்கெட் கொடுத்தீர்கள்
என கேட்பதற்குள் எனது ஸ்டாப் வந்துவிட்டது.
அவரிடம் மீதி ஒரு ரூபாயும் ஏன் 9 ரூபாய் டிக்கெட் கொடுத்தீர்கள்
என கேட்பதற்குள் எனது ஸ்டாப் வந்துவிட்டது.
Labels:
அலைபேசி,
இளைஞர்கள்,
பகுத்தறிவு கொள்கைகள்,
மதச்சார்பின்மை
June 20, 2015
வரிசையில் நிற்பது சுகமா?சுமையா?
வரிசையில் நிற்பது பற்றி யெல்லாம் ஒரு பதிவா என்று நினைக்காதீர்கள்.சோவியத் ரஷ்யாவை கம்யூனலிசத்தை பலவீனப் படுத்தியதே வரிசை முறைதான் .
June 15, 2015
காக்கா முட்டை ஒரு வித்தியாசமான விமர்சனம்
காக்கா முட்டை என்று பெயர் வைத்து உலகத்தில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை காக்கா முட்டை என்று வறுமையில் வாடுபவர்களை உருவகப்படுத்தியிருக்கின்றனர்.படத்தில் எண்ணற்ற கருத்துக்களை இயக்குனர் சொல்லியிருக்கிறார் உணவைப் பற்றி,தேர்தல் இலவசங்கள் பற்றி,குப்பத்து மக்களின் வாழ்க்கைப் பற்றி,ஏமாற்றும் வக்கீல்கள் பற்றி,போராட்டம் எனும் பெயரில் காசு சம்பாதிப்பவர்களைப் பற்றி,போராட்டத்திற்கு மக்களை எப்படி திரட்டுகின்றனர் என்பதைப் பற்றி,போரம்போக்கு நிலம் எப்படி கார்பரேட் நிறுவனங்களுக்கு எம்.எல்.ஏ மூலமாக கைமாறுகிறது என்பதை பற்றி,ஒரு பிரச்சனை வந்து விட்டால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைசியில் அதையும் தங்கள் கடைக்கு விளம்பரமாக மாற்றிக் கொள்வது பற்றி ,நடிகர்கள் சாதாரண உணவு சாப்பிடமாட்டார்களா? என்பது பற்றி எல்லாவற்றையும் படம் பிடித்துக் காட்டினாலும்
என்னைக்கவர்ந்தது
காக்கா முட்டை:நாங்க குப்பத்து பசங்கனு சொல்லவே இல்ல ஆனா அவன் எப்படி கண்டு பிடிச்சான்
பாட்டி :"நீ போட்டிருக்கும் சொக்காய்க்குத் தான் உலகத்தில் மதிப்பு"
காக்கா முட்டை பசங்க புது சொக்காய் வாங்கும் விதம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.
எதிர்த்த வீட்டு பணக்காரப் பையன் எச்சி பீசாவை கொடுப்பது பணக்கார வர்கத்தின் திமிரைக் காட்டுகிறது.
அதை வாங்க போன சின்ன காக்கா முட்டையை பெரிய காக்கா முட்டை அடிப்பது ஏழைகளின் தன்மான உணர்வை வெளிப்படுத்துகிறது.
செல்போன் வாங்க ஆசைப்பட்ட காக்காமுட்டை பசங்க செல்போனை தொடர்வண்டியில் மத்த பசங்க செய்வது போல் செய்யாமல் குச்சியை கீழே போடுவது அவர்களின் நேர்மையை உணர்த்துகிறது.
எல்லாவற்றையும் விட அவர்கள் கையில் பணம் இருக்கிறது ,புது துணி அணிந்திருக்கின்றனர் ஆனால் அவர்கள் குப்பத்து பசங்கன்ற முத்திரை மாறவில்லை.இதுதான் இந்த படம் உலகத்திற்கு சொல்ல வருகின்ற முக்கியமான கருத்து.
இதை வர்க்க பேதத்திற்க்கு மட்டும் அல்லாமல் வருணாசிரம பேதத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்
ஆயிரம் படித்து கை நிறைய சம்பாதித்தாலும் நீ தாழ்ந்த சாதிக்கார பையந்தானே என சொல்பவர்கள் ஏராளம்
காரணம் பார்ப்பனர்கள்.சட்ட மேதை அம்பேத்கர்க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு சொல்லவா வேண்டும்?.(Babasaheb Dr.Ambedkar movie(english) திரைப்படம் பார்த்தவர்களுக்கு, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குப் புரியும்).
பலர் சொல்லுகின்றனர் பொருளாதார அடிப்படையில் சமம் ஆனால் சாதி இல்லாமல் போய்விடும் என்று
நான் கேட்கிறேன் பொருளாதார அடிப்படையில் சமமானாலும் பார்ப்பனர்கள் வந்து களை எடுப்பார்களா?
இல்லை குப்பை அள்ளுவார்களா?அப்ப ஆயிரம் தான் பொருளாதார அடிப்படையில் முன்னேறினாலும்
இட ஒதுக்கீட்டில் மேலே சென்றாலும் இன்னும் பல நேர்முகத் தேர்வுகளில் முதுகை தடவிப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது(பூணுலுக்காக).காக்கா முட்டை பசங்க மேல் நீங்க குப்பத்து பசங்க எனும் முத்திரை பதிக்கப் பட்டது போல் பின்னர் பீசா கடைக்காரன் அவர்களை சாப்பிட சொல்வது போல்,நம் மேல் சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என பிரித்து வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு இவர்களுக்குத்தான் என்று சொல்லிக் கொண்டு நேர்முகத் தேர்வில் என்ன செய்கிறார்கள் என்பது அங்கே யார் இருக்கிறார்கள் ,மேல் பதவிகளில் யார் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும்.
காக்கா முட்டை குப்பத்து பசங்கன்ற முத்திரை ஒழித்து பீசா சாப்பிட இவ்வளவு போராட்டம் என்றால்
சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரையை ஒழிக்க எவ்வளவு போராட வேண்டும்.
என்று ஒழியுமோ சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற முத்திரை இனியும் காக்கா முட்டையாக இருப்பதும்
இருக்காததும் உங்கள் விருப்பமே!
May 30, 2015
இன்றைய புரட்சி
பெண்கள் அடிமைப்பட்டுகிடந்த காலத்தில் ,பெண்கள் வேலைக்குச் சென்றது அன்றைய புரட்சி என்றால் கலை,அறிவியல் மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளில் சிறந்து விளங்குவதும் ஐ.ஐ.டி மாணவர்களின் போராட்டமும் இன்றைய புரட்சி.
சுயநலமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் சமூகநீதிக்காக போராடும் மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் படிக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர்களாக
பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டம் அதுவும் எண்ணிக்கையில் May 11, 2015
நீதிமன்றமும்,சட்டமும்
தெரியா இருண்ட வீடு,
முன் வந்து நின்றான்
நூதன திருடன்.
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசலோ தூரம்,
ஓட்டையைப் பார்த்தான்
கருவியால் பெரிதாக்கினான்.
சத்தம் கேட்டு
வந்தான் ஒருவன்
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசல் நோக்கி
சென்றான் பிடிபட்டான்.
கருவியை பயன்படுத்தியது
நூதன திருடனின் குற்றமா?
கருவி இல்லாதது
சாதரண மனிதனின் குற்றமா?
முன் வந்து நின்றான்
நூதன திருடன்.
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசலோ தூரம்,
ஓட்டையைப் பார்த்தான்
கருவியால் பெரிதாக்கினான்.
சத்தம் கேட்டு
வந்தான் ஒருவன்
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசல் நோக்கி
சென்றான் பிடிபட்டான்.
கருவியை பயன்படுத்தியது
நூதன திருடனின் குற்றமா?
கருவி இல்லாதது
சாதரண மனிதனின் குற்றமா?
சொ.நே.அன்புமணி
எனது கவிதையை எழுத்து தளத்தில் பார்க்க
எனது கவிதையை எழுத்து தளத்தில் பார்க்க
April 27, 2015
அலைபேசியில்லாமல் ஐந்து நாட்கள்
அலைபேசிக்காக ஐந்தரை மாதம் காத்திருந்து போன் பேசியது அந்தக்காலம்
அலைபேசியில்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாமல் போனது இந்தகாலம்
எனது கற்பனைக் கதை
பாபு-அலைபேசி உபயோகிப்பவர்
தங்கம்-அலைபேசி உபயோகிப்பவரின் அம்மா
அலைபேசியில்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாமல் போனது இந்தகாலம்
எனது கற்பனைக் கதை
பாபு-அலைபேசி உபயோகிப்பவர்
தங்கம்-அலைபேசி உபயோகிப்பவரின் அம்மா
காதலும், காலமும்
காதல் எங்கிருந்தாலும் வாழ்க இது அந்த காலம்
காதல் உன் குடும்பம் என் குடும்பம் இது அந்த காலம்
காதல் உன் குடும்பம் என் குடும்பம் இது அந்த காலம்
April 14, 2015
தாலி அகற்றும் போராட்டம்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை ஒன்று இருக்கிறது அதை மதித்து சடங்கு சம்பிரதாயங்கள் ஏன் எதற்கு என்று தாலி அணிவதும் அணியாததும் தனிப்பட்ட நபர்களின் உரிமை .தங்களுக்கு தாலி ஒரு அடிமைச் சின்னம் என நினைப்பவர்கள் அகற்றிக் கொள்கின்றனர் இவ்வாறு சிந்திப்பவர்கள் பகுத்தறிவாதி .
April 6, 2015
தூண்களில் கரைபடிய வைக்கிறது
கல்லூரி மாணவனை பார்த்தேன்
அவன் வகுப்பை விட்டு இடையில்
சென்று மது அருந்துவதும்
அதை மறைக்க கொய்யா
மிட்டாய் சாப்பிடுவதும்
வகுப்பு முடிந்தவுடன்
சிகரெட் குடிப்பதும் மாக இருந்தான்.
ஏன் எனக் கேட்டால் பதில் இல்லை.
பழக்கம் ஆகிவிட்டது என்றான்.
ஏன் பழக்கமானது என்றால் சோகம் என்றான்.
March 28, 2015
எனது SLP(SERVICE LEARNING PROGRAMME)அனுபவம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி உதவுவதற்காக nss மாதிரி இந்த வருடம் SLP(SERVICE LEARNING PROGRAMME) ஆரம்பித்துள்ளனர்.அதில் நானும் ஒருவன் .
Labels:
slp,
அப்துல்கலாம்,
அரசுப் பள்ளி,
இறையன்பு,
கல்வி,
சகாயம்
March 14, 2015
புதிய தலைமுறை தாக்கப்பட்ட சம்பவம் அதன் பின்னணி
இளைஞர்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றிருக்கக்கூடிய ஊடகமும்,பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் புதிய தலைமுறையின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டார் சமூக விரோதிகளால், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார்கள் எனக் கூறப்படுகின்றது மேலும் தாங்கள் காவல்துறையிடம் சென்று புகார் தெரிவித்ததுக்கு நீங்கள் சென்சிட்டிவ் ஆன செய்தியை போட்டால் அடிக்கத் தான் செய்வார்கள் என்று கூறியதாக செய்தியாளர் தியாகச் செம்மல் கூறினார்.
Labels:
புதிய தலைமுறை,
பொய் பித்தலாட்டங்கள்,
மதம்.,
விவாத அரங்கம்
March 7, 2015
நீதிபதிகள் நியமனம்
நீதிபதிகள் நியமனம் குறித்து வழக்கறிஞர்கள் போரட்டம் நடத்துவது குறித்து இமயம் டிவியில் ஒளிபரப்ப பட்ட விவாத அரங்கம் பற்றி
திமுக சார்பில் திரு.கண்ணதாசன் வழக்கறிஞரும் ,பாமக சார்பில் திரு.கஜேந்திரன் வழக்கறிஞரும் ,சமூக ஆர்வலர் சார்பில் ஆழி செந்தில் நாதனும் ,பிராமணர்கள் சார்பில் எழுத்தாளர் திரு.வாசனும் பங்கேற்றனர்.
நெறியாளர் ஜீவ சகாப்த்தன் நிகழ்ச்சியை நடத்தினார்.

சாதி,
நீதிபதிகள் நியமனம்,
பகுத்தறிவு கொள்கைகள்,
விவாத அரங்கம்
February 22, 2015
குலசாமி -2
நீங்கள் கவனித்ததுண்டா திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் செய்யும் மூட நம்பிக்கைகளை என்றுமே ஆரியர்கள் செய்ததில்லை அவர்கள் மொட்டை அடித்ததுண்டா,தலையில் தேங்காய் உடைத்ததுண்டா,நாக்கில் அழகு குத்தியதுண்டா,சிவ ராத்திரிக்கு மது அருந்தியதுண்டா,தீபாவளி அன்று மருந்து சாப்பிடாமல் இனிப்பு உண்டதுண்டா?நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும் அவர்கள் இருக்கும் இடங்களில் டாஸ்மார்க் கடை இருக்காது.நாம் அன்றாட கூலித் தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் மெயின் ரோட்டில் மூன்று கடைகள் வைக்கப் பட்டிருக்கும்.திருவிழா பண்டிகை என்ற பெயரால் மது அருந்திவிட்டு இறப்பவர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அரசியல் நடக்கிறது அது நம் வீர விளையாட்டுத்தான் நான் இல்லை என்று கூறவில்லை இன்று தமிழ் நாட்டில்
நானும் தமிழன்தான் என்று சொல்லும் ஆரியர்களைப் பார்த்துக் கேட்கிறேன் .நீங்கள் என்றாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதுண்டா?
தமிழர்கள் நீங்கள்(ஆரியர்கள்) செய்யும் வேலைகள்(சடங்கு சம்பிரதாயங்கள்) இல்லாமல் வாழ்ந்து விடலாம் உதாரணமாக நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் ஒரு நாள் நீங்கள் வரணாசரம அடிப்படையில் பிரித்த தமிழர்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்யாவிட்டால் உங்கள் பிழைப்பு நடக்காது.யாரவது ஒரு ஆரியர் களை எடுத்ததுண்டா? துணி துவைத்ததுண்டா?செருப்பு தைத்ததுண்டா?
இதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள் நம்மை விட அவர்களுக்கு நன்றாக தெரியும் கடவுள்,சாதி,மதம்,மூட நம்பிக்கைகள்,சோதிடம்,சனிப் பெயர்ச்சி போன்றவைகள்
இல்லை அவை நம்மால்(ஆரியர்களால்) உருவாக்கப் பட்டவை என்று.மற்றொன்று ஆரியர்களால் ஒரு காரியம் முடியவில்லை எனில் அதை தன்னுடைமையாக்கிக் கொள்ளப்பார்ப்பார்கள்.திருக்குறளை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் தெரிந்ததும்
திருவள்ளுவர்க்கு தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சிலவற்றை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இயலுமா?

குலசாமி,
சாதி,
சிவராத்திரி,
பகுத்தறிவு கொள்கைகள்,
பொய் பித்தலாட்டங்கள்,
மதம்.
குலசாமி-1
ஒருவன் என்னிடம் வந்து உன் குலசாமி பெயர் என்ன தெரியுமா? என்று என்னிடம் கேட்டான்.நான் தெரியாது என்று கூறினேன்.அதற்கு அவன் தமிழரின் பண்பாடு அழிந்து கொண்டே வருகிறது என்றான்.நான் கூறினேன் தமிழரின் பண்பாடு என்றால் என்ன தெரியுமா?என்றேன் நீ கூறு என்றான்.மானமும் அறிவும் என்றேன்.மேலும் வீரத்தையும் ,காதலையும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தமிழனுக்கு என்றுமே நேருக்கு நேராகப் போரிட்டுத்தான் பழக்கம்.அப்போது மற்றொரு நண்பன் என்னிடம் வந்து உனக்கு மகாபாரதம் கதைப் பற்றி தெரியுமா?என்றான் சொல் என்றேன்.ஒருவனுக்கு வெற்றி என்பது குறுக்கு வழியில் தான் கிடைக்கிறது வீரம் என்பது அவன் நேருக்கு நேர் போரிட்டு வெல்வது என்றான்.
நான் அவனிடம் கூறினேன் பாரி வள்ளல் பற்றி நீ அறிவாயா! என்றேன்.அவனிடம் சென்று யாசித்துக் கேட்டால் ஒரு ஊரையும் உனக்கு தந்து விடுவான் ஆனால் நீ அவனிடம் நேருக்கு நேர் சென்று போர் செய்தல் அரிது என்று புலவர் கபிலர் கூறுவது உண்டு.மானமும் அறிவும் தமிழர்களுக்கு உரியது என்று கூறினேன் அல்லவா அறிவுகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நாம் எப்படி முன்னேறுவது என்று நம் பலத்தை அதிகரித்து கொண்டே செல்வது.மற்றொன்று அடுத்தவர்களை முன்னேறவிடாமல் ஒரு இனத்தை முன்னேற விடாமல் செய்வது என்று இரண்டு வகை உண்டு.அன்று தமிழன் தனக்கென இருந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்தான் .பின்பு மன்னர் ஆட்சி வந்தது அப்போதும் தமிழ் மன்னர்கள் நேருக்கு நேர் செல்வது ,புறம் காட்டினால் வடக்கிலிருந்து உயிர் துறப்பது,போர் செய்யும் போது அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ,பசு,பெண்டிர்,அந்தணர் என்று நால்வகையினரை அகற்றி விட்டு போர் செய்தான்.தமிழர்களுக்கு நான் கூறிய கெட்ட அறிவு கிடையாது.

January 31, 2015
விளம்பரத்தை நோக்கிச் செல்கின்றதா இன்றைய உலகம்
சாதரணமாக காலில் அணியும் செருப்பு முதல் உடுத்தும் உடை,அணிகலன்கள்,உடம்பிற்கு அழகூட்ட எண்ணமுடியாத அளவு சாதனங்கள்,உடம்பை குறைக்க கூட்ட கருவிகள்,மாத்திரைகள்,முடிதிருத்தும் கடைகள்,1 ரூபாய் மிட்டாய் முதல் 1,00,000 முதலான கருவிகள் வரை தொலைக்காட்சி,வானொலி,பத்திரிக்கைகள்,பேனர்கள்,போஸ்டர்கள் என ஆரம்பித்தது இந்த விளம்பர மோகம்.
January 5, 2015
சடங்குகளில் சண்டை நிகழ்கிறதா? சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகிறதா?
சிறிய குழந்தைகள் அதன் வாழ்க்கையில் எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படும் மாற்றம் போல மனித குலத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.ஆனால் அந்த உயிரினங்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரம் இந்த சடங்கு வீடுகளில் கிடைப்பதில்லை .ஒரு பட்டாம்பூச்சி வளர்ந்து பெரிய பட்டாம்பூச்சியாக மாறி சிறகடித்து பறக்கிறது.ஆனால் மனிதன் மட்டும் தான் "நீ பெரிய மனுஷி ஆகி விட்டாய் "என்று கூறியே அந்த பெண்ணை முடக்கி விடுகிறான். இதை ஒரு விழாவாக மாற்றி உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல் இருக்கிறதே சொல்ல இயலாதது .
உதாரணத்திற்கு ஒரு சடங்கு வீடு அங்கு ஒயிலாட்டம்,காது கிழிய பட்டாசு,போட்டாக்காரனுக்கு 8000 ரூபாய் இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஒரு புறம்
எந்த பக்கத்திற்குரிய மாமன் பெண்ணிற்கு மாலை இடுவது எனத் தகராறு .இவ்வளவு செலவு செய்து மிஞ்சியது என்னவோ கண்ணீர்தான்.
மற்றொரு சடங்கு வீட்டில் பட்டு சேலை ,பாத்திரம் பண்டம் என எடுத்து வர எந்த அத்தைக்காரி பெண்ணிற்கு தண்ணீர் ஊற்றுவது என்ற சண்டையில் தொடங்கி அவர்கள் தண்ணீர் ஊற்றி விட்டு போக இவர்கள் வீட்டில் மன உளைச்சலால் தலைவன் மனதில் விபரீத முடிவு
தோன்றுகிறது .
ஆனால் இரண்டு சடங்கு வீடுகளிலும் பணம் சம்பாதிப்பவர்கள் இவர்களை ஆதயமாக வைத்து பணம் தேடிக் கொண்டனர்.இவர்களோ ஒரு மூலையில் கடன் தொல்லையிலும்
மற்றொரு மூலையில் சண்டைச் சச்சரவுகளால் மனம் நொடிந்து போகின்றனர்.
இவர்களை ஒரு சம்பிரதாய முறையைச் சொல்லி தீட்டு அகற்ற வேண்டும் எனக் கூறி இருந்த இடத்தில் 6000 ரூபாய் சம்பாதித்து விட்டு செல்கின்றார்கள் சிலர்.அதற்கு ஆடம்பரம் காட்ட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி ,யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற சண்டையில் முடிகிறது.
அதை நம்பி நமது உறவுகளும் பிளவு படுகின்றன .
சடங்குகளில் சண்டை நிகழ்வதில்லை ,பல இடங்களில் சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

Subscribe to:
Posts (Atom)
தொடர்புடைய பதிவுகள்
loading..